உடல்நலம் சரியில்லாத மாட்டுக்கு தீவன பராமரிப்பு எப்படி செய்யணும்? பகுதி - 2
வயிறு உப்புதல்:
மாடுகளின் உடல் எடையில் 0.5 முதல் 0.80% கிலோ எடை வரை தான் தானியங்களை தீவனத்தில் சேர்க்க வேண்டும். இதற்கு மேல் சேர்த்தால் மாடுகளில் முதல் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்பட்டு வாயு சேர்ந்து வயிறு உப்பும். இந்த சமயங்களில் மருத்துவத்திற்கு பின் நீங்கள் தீவனத்தில் அளிக்கும் தானிய அளவை சிறிது சிறிதாக குறைத்து 50% அளவிற்கு கொண்டு வர வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் தானியங்களுடன் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 50 முதல் 80 கிராம் என்ற அளவில் சமையல் சோடா மாவை இரண்டு சம பாகங்களாக பிரித்து தீவனத்துடன் அளியுங்கள். இது 4 முதல் 6 வாரங்கள் வரை தொடர வேண்டும். மாறாக ஓரிரு நாட்கள் மட்டும் தொடர்ந்து பிறகு கைவிட்டால் வயிறு உப்பும் நிலை மீண்டும் வரும்.அதே போல மாடுகளுக்கு சில வகை பயறு வகை தீவனங்களை தேவைக்கு மேல் அளித்தால் சில மாடுகளின் முதல் வயிற்றில் நுரை உண்டாகி அதனால் வயிறு உப்பும். இத்தகைய சமயங்களில் மேல் கூறிய பராமரிப்பு முறை பயன்படாது.
குடற்புழு பிரச்சனைகள்:
மாடுகளில் குடற்புழு நீக்கம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரின் ஆலோசனை பேரில் செய்ய வேண்டும். இப்படி குடற்புழு நீக்கம் செய்த பின் ஓரிரு நாட்கள் மாடுகளுக்கு அழற்சி ஏற்படும். பின்பு மாடுகளுக்கு புரத சத்துமிக்க பிண்ணாக்கு அல்லது பயறு வகை பசும் தீவனங்களை சற்று கூடுதலாக அளிக்க வேண்டும். இத்துடன் சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் உயிர் சத்து A வை அளிப்பது மிக அவசியம்.மாடுகளின் தண்ணீர் தொட்டியை நன்கு கழுவி அதன் உட்பக்கத்தில் சுண்ணாம்பை தடவி உலர விட்டு, அதில் சுத்தமான தண்ணீரை நிரப்புங்கள். அத்துடன் கால்நடை மருத்துவரை அணுகி மெக்னீசியம் சல்பேட் உப்பை வாங்கி அதில் இரண்டு சிட்டிகைகள் சேர்த்து தண்ணீர் அருந்த விடுங்கள். இதன் மூலம் மாடுகளுக்கு வேண்டிய சுண்ணாம்பு சத்து கிடைக்கும்.
மாடுகளுக்கு அளிக்கப்படும் தவிட்டில் பாஸ்பரஸ் உள்ளது. மாடுகள் உட்கொள்ளும் பசும் புல்லில் உயிர் சத்து “A" உள்ளது என்பதை உணர்ந்து தீவன பராமரிப்பு செய்ய வேண்டும்.
அமில தன்மை:
மாடுகளுக்கு அதிகமாக தானியங்கள் மற்றும் கலப்பு தீவனம் கொடுப்பது, தானியங்களை மாவாக அரைத்து கொடுப்பது, தானியங்களை கூழாக காய்ச்சி கொடுப்பது, வேக வைத்த மற்றும் மீந்த சாதத்தை கொடுப்பது, நார் தீவனங்களான புற்கள், வேளாண்கழிவுகள் போன்றவற்றை மிக குறைவாகவும் கலப்புத்தீவனத்தை அதிகமாகவும் அளிப்பது போன்ற காரணங்களால் மாடுகளின் முதல் வயிற்றில் அமில தன்மை ஏற்படும். இதனால் மாடுகள் தீவனம் உட்கொள்வதை நிறுத்திவிடும். தண்ணீர் உட்கொள்வதும் குறைந்துவிடும். பால் சுரப்பு குறைதல், பாலில் கொழுப்புசத்து குறைதல், சாணம் கழிதல், கால் நொண்டுதல் போன்றவை ஏற்படும்.நீங்கள் செய்ய வேண்டிய பராமரிப்புகள்:
◆ மாடுகளுக்கு நாளொன்றுக்கு 80 முதல் 100 கிராம் வரை சமையல் சோடா மாவை சிறிது சிறிதாக தீவனத்தில் கலந்து அளிக்க வேண்டும்.◆ மாடுகளுக்கு முதலில் புல்லையும் பிறகு ஒருமணி நேரம் கழித்து கலப்பு தீவனம் அளிக்கவேண்டும்
◆ ஒரு மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 கிலோ வரை பசும் தீவனத்தை அளிக்க வேண்டும்
◆ மிக விரைவில் செரிமானமாகும் கோதுமை மற்றும் பார்லி தானியங்களை தீவனத்தில் மிக குறைந்த அளவு சேர்த்தல், அப்படி சேர்த்தாலும் கலப்பு தீவனத்தில் பொட்டு வகைகளை சேர்க்க வேண்டும்.
◆ வெப்ப அழற்சி இருந்தால் அதை நீக்கும் வழிமுறைகளை செய்ய வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Comments
Post a Comment