எள்ளு பிண்ணாக்கு பற்றிய முன்னோட்டம்







◆ எள்ளு பிண்ணாக்கு புரதச்சத்து நிறைந்த தீவனம் இதில் 32% முதல் 53% வரை புரதச்சத்து உள்ளது

◆ எள்ளு புண்ணாக்கில் உள்ள புரதச்சத்து சுமார் 78% அளவுக்கு செரிக்கக்கூடியது.

◆ செக்கில் ஆட்டப்பட்ட கடலை பிண்ணாக்கில் முதல் வயிற்றில் செரிக்கும் புரதம் 70-76% வரையும், இரசாயனம் மூலம் தயாரிக்கப்பட்ட கடலை பிண்ணாக்கில் 80% வரை உள்ளது.

◆ இந்த பிண்ணாக்கில் உள்ள அமினோ அமிலங்களின் தொகுப்பு (லைசின் மற்றும் மெத்தியோனின் தவிர ) சோயா பிண்ணாக்கை ஒத்துள்ளது.

◆ இந்த பிண்ணாக்கில் செரிக்க கூடிய புரதம் 25%வரையும் மொத்த செரிமான ஊட்டச்சத்துகளின் அளவு 70-75% உள்ளன

◆ எண்ணெய்  வித்திலிருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கும் முறையை பொறுத்து இந்த பிண்ணக்கில் புரதச்சத்து மற்றும் எரிச்சத்தின் அளவுகள் மாறுபடும்.

◆ செக்கில் ஆட்டப்படும் பிண்ணாக்கில் ( Expeller method ) மாடுகளுக்கு எரிச்சத்தை அளிக்கும் எண்ணெய்  பசையின் அளவு அதிகமாகவும் இரசாயனம் மூலம் எண்ணை பிரித்தெடுக்கப்பட்ட ( Solvant Extraction ) பிண்ணாக்கில் எண்ணெய் பசை குறைவாகவும் இருக்கும்.

◆ மற்ற பிண்ணாக்குகளை விட எள்ளு பிண்ணாக்கில் நார்ச்சத்து ( 4-12% ) குறைவாகவே உள்ளது.

◆ இந்த பிண்ணாக்கில் உள்ள மொத்த புரதத்தில் 76% மாடுகளின் முதல் வயிற்றில் செரிக்கும் புரதமாகவும்,  24% மட்டுமே பைபாஸ் புரதமாகவும் உள்ளது.

◆ இதில் உள்ள பைபாஸ் புரத அளவை அதிகரிக்க பார்மால் டிஹைடு
( Formaldehyde ) என்ற இரசாயனத்தை சேர்க்கும் தொழில் நுட்பம் உள்ளது.

◆ இந்த பிண்ணாக்கில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 4970 கிலோ கலோரிகள் உள்ளன.

◆ இந்த எரிச்சத்து 86% வரை செரிக்க கூடியது.

◆ இதில் உள்ள மொத்த எரிச்சத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து ( Metabolizable Energy ) 79% பால் உற்பத்திக்கு பயன்படும் எரிச்சத்து 46% வளர்ச்சிக்கு பயன்படும் எரிச்சத்து 47% உள்ளன.

◆ எள்ளு பிண்ணாக்கில் லைசின் அளவு குறைவாகவும் மெத்தியோனின் அளவு சற்று அதிகமாகவும் உள்ளது.

◆ ஆனால் லூசின் மற்றும் அர்ஜினின் அமினோ அமிலங்கள் நிறைவாகவும் உள்ளன.

◆ செக்கில் ஆட்டப்பட்ட எள்ளு பிண்ணாக்கின் புரதத்தில் உள்ள அமினோ அமிலங்கள் குறிப்பாக லைசின் மற்றும் மெத்தியோனின் பிற முறைகளில் தயாரிக்கப்பட்ட பிண்ணாக்கை விட சிறப்பாக உள்ளது.

◆ இந்த பிண்ணாக்கில் உள்ள மொத்த கொழுப்பு அமிலங்களில் ஒலீயிக் கொழுப்பு அமிலம் ( Oleic Fatty Acid ) மற்றும் லினோலியிக் கொழுப்பு அமிலம் அதிகமாக (சுமார் 80%) உள்ளன.

◆ எள்ளுபுண்ணாக்கில் பைடிக் அமிலம் ( Phytic Acid ) என்ற இரசாயன பொருள் சுமார் 5% உள்ளது.

◆ மற்ற பிண்ணாக்குகளில் சுண்ணாம்பு சத்து குறைவாகவும், பாஸ்பரஸ் சத்து அதிகமாகவும் இருக்கும். ஆனால் எள்ளு புண்ணாக்கில் சுண்ணாம்பு சத்து அதிகமாகவும், பாஸ்பரஸ் சத்து குறைவாகவும் உள்ளது. அது மட்டுமின்றி இந்த இரண்டு தாதுக்களின் இடையே உள்ள விகிதம் மிக சரியனாளவில் உள்ளது.

◆ இந்த பைடிக் அமிலம் பிண்ணாக்கில் உள்ள சுண்ணாம்பு பாஸ்பரஸ் துத்தநாகம் தாதுக்களுடன் சேர்ந்து அவை கால்நடைகளுக்கு கிடைக்காமல் செய்து விடுகிறது.

◆ எள்ளின் மேல்தோல் நீக்கப்படாமல் தயாரிக்கப்படும் எள்ளு புண்ணாக்கில் ஆக்சலேட் ( Oxalate ) என்ற இரசாயனம் சுமார் 2.8 % வரை உள்ளது.

◆ இது பிண்ணாக்கில் உள்ள சுண்ணம்பு சத்தை கறவையில் உள்ள மாடுகளுக்கு மேலும் கிடைக்காமல் செய்து விடும். எனவே எள்ளு பிண்ணாக்கை மட்டுமே புரதச்சத்திற்காக மாடுகளுக்கு அளித்தால் அம்மாடுகளுக்கு சுண்ணாம்பு சத்தை கூடுதலாக அளித்து பராமரிக்க வேண்டும்.

சுண்ணாம்பு சத்தின் அளவை அதிகரிக்க:

1.தீவனத்தில் தீவன மர இலைகள் மற்றும் பயறு வகை பசும்தீவனங்களை சேர்க்கலாம்.

2. மாடுகளின் தீவன தொட்டியின் உட்புறம் சுத்தம் செய்து சுண்ணாம்பு கரைசலை பூசி, நன்கு உலரவைத்து அதில் சுத்தமான நீரை அளிக்கலாம். இத்துடன் ஒரு சிட்டிகை மக்னீசியம் சல்பேட் உப்பை கலப்பது அதிக பயன் தரும்.

◆ கன்று ஈன வாரங்கள் முன்பிருந்து சுண்ணாம்பு சத்து குறைவான தீவனங்களை அளித்து மாடுகளின் இரத்தத்தில் உள்ள சுண்னாம்பு சத்தை படிப்படியாக குறைத்து, மாடுகள் கன்று ஈன்றவுடன் சுண்ணாம்பு சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். அப்படி மாடுகளில் சுண்ணாம்பு சத்தை குறைக்க வேண்டிய தருணத்தில் இந்த பிண்ணாக்கை அளிக்கலாம்.

◆ இந்த பிண்ணாக்கை உட்கொண்ட மாடுகள் சற்று இளகிய சாணம் இடும் . அதனால் கன்று ஈன ஒரு வாரம் முன்பிருந்து மாடுகளில் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க இதை தீவனத்தில் சேர்த்து அளிக்கலாம்.

◆ இந்த பிண்ணாக்கை உள்ள பைடின் சுண்ணாம்பு மற்றும் துத்தநாக தாதுக்களுடன் சேர்ந்து பிரிக்க முடியாத கலவை ஆவதால் இந்த தாதுக்கள் மாடுகளுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

◆ முதல் வயிறு நன்கு வளர்ந்து அதில் நுண்ணுயிர்கள் முழுவதும் உருவாக்கி இருந்தால் பைட்டினை சிதைத்து தாதுக்களை வெளியேற்றும்.

◆வளரும் கன்றுகள், கிடாரிகளில் இந்த பைட்டினை சிதைக்க கூடிய நுண்ணுயிர்கள் தேவையான அளவு இருக்காது. அதனால் இந்த பிண்ணாக்கை தண்ணீரில் ஊற வைத்தால் பைடின் ஓரளவு சிதைக்கப்பட்டு விடும்.

◆ இந்த பிண்ணாக்கை தீவனத்தில் 10-15% வரை மட்டுமே சேர்க்க வேண்டும். புதிதாக அளிக்க வேண்டி இருந்தால் சிறிது, சிறிதாக அளித்து பழக்கப்படுத்த வேண்டும்.

◆பால் தரும் மாடுகளின் தீவனத்தில் எள்ளு பிண்ணாக்கை 10-15% வரை சேர்க்கலாம்.


எழுத்தாளர் பற்றி



பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm

வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

அரிசி தவிடை பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்

கோதுமை  தவிடு  பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்






Comments

Popular posts from this blog

சினை பிடிக்காத மாடுகளுக்கு முருங்கை இலையுடன் கூடிய மருத்துவ முறை

கன்னுகுட்டி அதிகமா பால் குடிச்சா, மாடு பருவத்துக்கு வராதா?

கறவை மாடுகளுக்கு பயறுவகை பசும் தீவனம் அளித்து தீவன செலவை குறையுங்கள்!