கோடையில் மாடுகளுக்கு ஏற்படும் வெப்ப அழற்சியும் அதை தவிர்க்கும் முறைகளும்
கோடையில் மாடுகளுக்கு ஏற்படும் வெப்ப அழற்சியும் அதை தவிர்க்கும் முறைகளும்
தமிழகத்தில் கோடை ஆரம்பம் ஆகிவிட்டது..இக்கோடையில் உள் மாவட்டங்களில அதிக வெப்பமும் கடலோர மாவட்டங்களில வெப்பம் மற்றும் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். பொதுவாக கோடையில் அதிகபட்ச வெப்பம் 42-43oc வரை இருக்கும். சுற்றுப்புறத்தின் வெப்பம் 270cக்கு மேல் இருந்தால் வெப்பத்தின் கடுமையைப் பொறுத்து மாடுகளில் வெப்ப அழற்சியின் தாக்கம் இருக்கும் .
வெப்ப அழற்சியின் காரணமாக கலப்பின மாடுகள் அதிகம் குறிப்பாக அதிகம் பால் தரும் மாடுகள் தான் பாதிக்கப்படுகின்றன .
வெப்ப அழற்சியின் கடுமையை பொறுத்து கீழ்கண்ட பாதிப்புகள் மாடுகளில்
ஏற்படும் :
1. தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல்
2. அதிக அளவில் தண்ணீர் உட்கொள்ளுதல் (30%வரை)
3. உடலின் தோல் மற்றும் சுவாசம் மூலம் அதிக சத்துக்கள் வெளியேறல்
4. இரத்தத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படல்
5. உடலில் வெப்பம் அதிகரித்தல்
6. பால் உற்பத்தி குறைதல்
7. பாலில் கொழுப்பு மற்றும் SNF ன் ஒரு அங்கமான புரதச்சத்து குறைதல்
8. தீவனத்தை உற்பத்தியாக மாற்றும் திறன் 10-15% குறைவது
9. இனப்பெருக்க குறைபாடு (30%வரை)
எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்
கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்




Comments
Post a Comment