சினை பிடிக்காத மாடுகளுக்கு முருங்கை இலையுடன் கூடிய மருத்துவ முறை
முருங்கை இலை தீவனம் அளிப்பதால் இனப்பெருக்கத் திறன் அதிகரிக்கும்
◆ கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு முருங்கை இலைகளை தீவனத்தில் சேர்ப்பதால் ஈன்றபின் கர்ப்பப்பை இயல்பான நிலைக்கு திரும்ப ஆகும் நாட்கள் குறையும்.◆முருங்கை இலை தீவனம் அளிப்பதால் மாடுகளில் கருமுட்டை பைகளில் கட்டிபிரச்சினை மற்றும் கர்ப்பப்பையில் நோய் தாக்கம் குறைவதுடன் கன்று ஈன்ற பின் கர்ப்பப்பையின் நுழைவாயில் விரைந்து மூடிக்கொள்வதற்கும் உதவுகின்றது.
◆செம்மறி ஆடுகளில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் முருங்கை இலை தீவனமாக அளிக்கப்பட்டதால் ஆடுகளிலில் உற்பத்தி ஆகும் கருமுட்டை சற்று வேகமாக முதிர்ச்சி அடைந்து விந்துடன் இணைய தயார் நிலையை அடைகின்றது என தெரிய வந்தது.
◆ ஒரு ஆய்வில் முருங்கை இலைகளை முயல்களுக்கு அளித்த பொழுது அவைகளுக்கு பிறந்த குட்டிகளின் எண்ணிக்கை, சினையான தாய் முயல்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
சினை பிடிக்காத மாடுகளுக்கு முருங்கை இலையுடன் கூடிய மருத்துவ முறை
முள்ளங்கி மற்றும் சோற்று கத்தாழை கொடுக்கும் பொழுது அவற்றின் மேல் வெல்லம் மற்றும் சமையல் உப்பு தடவி வாய் வழியே கொடுக்க வேண்டும்.
முருங்கை இலை பிரண்டை மற்றும் கருவேப்பிலையை கொடுக்கும் பொழுது மைய அரைத்து வாய் வழியே கொடுக்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
Comments
Post a Comment