மழைக்காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு - பொது மேலாண்மை
தொழுவத்தில் மழை தண்ணீர் ஒழுகினால் சரி செய்ய வேண்டும்
◆ தொழுவத்தில் இறங்கும் மழை தண்ணீர், சாணம் மற்றும் சிறுநீருடன் கலந்து அமோனியா வாயுவை உண்டாக்கும். இது மாடுகள் மற்றும் கன்றுகளில் கண் எரிச்சலை உண்டாகி தீவனம் உட்கொள்ளும் அளவை குறைக்கும் ◆ ஈரமான தொழுவ தரையில் கன்றுகளில் காக்சீடியா என்ற இரத்தக்கழிச்சல் நோய், கறவை மாடுகளில் மடிநோய் போன்ற நோய்களின் தாக்கம் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
◆ தொடர் மழை காலங்களில் தொழுவத்தின் தரை தொடர்ந்து ஈரமாக இருந்தால் மாடுகளின் கால் குளம்புகள் பாதிக்கப்படும்.
குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்
◆ மழைக் காலங்களில் கிடாரிகள், கன்றுகள் மற்றும் மாடுகளில் குடற்புழுக்கள் தாக்கம் அதிகரிக்கும்.◆ அதனால் மழைக் காலம் தொடங்கும் முன்பு மழைக்காலம் மற்றும் மழைக்காலம் முடிந்த பின் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
மிக அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பசும் புல்லை உட்கொண்டால் சிக்கல்
◆ மழைக் காலங்களில் கிடைக்கும் பசும் தீவனங்களில் தண்ணீர் மற்றும் நார் அளவு அதிகமாக இருக்கும்.◆ இதனால் மாடுகள் நிரம்ப புற்களை உட்கொண்டாலும் அதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு குறைவாக இருக்கும்.
◆ புற்களில் அதிக தண்ணீர் இருப்பதால் மாடுகள் மிக மிக இளகிய சாணம் இடும்.
◆ அதனால் இருந்து உடலில் வழக்கத்தை விட அதிக அளவில் எலக்ட்ரோலைட் வடிவில் தாது சத்துக்கள் வெளியேறும்.
◆ இதனால் மாடுகளில் உற்பத்தி குறைய வாய்ப்புகள் உள்ளன.
◆ மழைக்காலங்களில் கலப்பு தீவன அளவை சிறிது அதிகரித்து, அத்துடன் பசும்புல்லுடன் வைக்கோல் போன்ற உலர்ந்த நார் தீவனங்களையும் சேர்த்தளிக்க வேண்டும்.
உண்ணிகள் பேன்கள் பிரச்சினை
◆ மழைக் காலங்களில் மாடுகளின் தோலில் உண்ணிகள் போன்றவை மிக அதிக அளவில் பெருகும்.◆ இந்த உண்ணிகள் இரத்தத்தை உறுஞ்சுவதுடன் மாடுகளின் இரத்தத்தில் புரோட்டோசோவா ( Protozoa )_என்ற நோய்க்கிருமிகளை பரப்பும் வாய்ப்புகள் ஏற்படும்.
◆ இத்துடன் கொசு மற்றும் ஈக்களின் தொல்லை அதிகரிக்கும். இவை மாடுகளுக்கு தொல்லை அளித்து அவை தீவனம் உட்கொள்ளும் அளவை பெரிதும் குறைக்கும்.
மழைக்காலங்களில் மடிநோய் வாய்ப்புகள் அதிகம்
◆ சுகாதாரம் அற்ற, மாட்டின் கழிவுகள் நிறைந்த, ஈரமான தொழுவத்தின் தரையில் படுக்கும் கறவை மாடுகளில் மடி நோய் வாய்ப்புகள் ஏற்படும்.தொழுவத்தின் வழுக்கும் தரை
◆ தொழுவத்தை அடிக்கடி சுத்தம் செய்து, தரை வழுக்காமல் கவனம் செய்து விபத்தை தவிருங்கள்ஈரமான குளிர்ந்த தொழுவ தரை:
◆ மழைக் காலங்களில் தொழுவ தரை ஈரமாகவும் குளிர்ந்து இருக்கும்.◆ இது மாடுகளுக்கு வசதி குறைவு ஏற்படுத்தும்.
◆ இந்த சூழலில் தங்கள் உடலின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க மாடுகள் அதிக எரிச்சத்தை செலவிட நேரும்.
◆ அதனால் மாடுகளுக்கு அதிக எரிச்சத்து கொண்ட கலப்பு தீவனம் அளிக்கப்பட வேண்டும்.
◆ இத்துடன் குறைந்த பட்சம் கன்றுகள் படுக்க தரையில் வைக்கோல் போன்றவற்றை பரப்பி விட வேண்டும்.
மழைக் காலங்களில் சுத்தமான குடிநீர் அளியுங்கள்:
◆ மழைக் காலங்களில் மாடுகளுக்கு சுத்தமான குடிநீர் அளிக்கப்பட வேண்டும்.◆ திறந்த வெளி பொதுவான தண்ணீர் தொட்டி இருந்தால் மழைக் காலங்களில் அதில் மிக குளிர்ந்த மழை நீர் சேர்ந்திருக்கும்.
◆ மழைக் காலங்களில் திறந்த வெளி பொதுவான தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தப்படுத்த முடியாது.
◆ அதனால் அதில் புழுக்கள் தொல்லை இருக்கும்.
◆ மிக இளம் கன்றுகளுக்கு முடிந்தால் மிக வெது வெதுப்பான தண்ணீர் அளிக்க முயற்சிக்க வேண்டும்.
இளம் கன்றுகளை வெளியில் விட வேண்டாம்:
◆ மழைக் காலங்களில் கன்றுகளை குறிப்பாக இளம் கன்றுகளை வெளியில் விட வேண்டாம்.◆ மாடுகளை விட இளம் கன்றுகளின் உடலில் தண்ணீர் அளவு சற்று அதிகமாக இருக்கும். அதனால் மழைக் காலங்களில் சுற்று சூழல் வெப்ப நிலை குறைவதால் அழற்சி உண்டாகும். இதனால் கன்றுகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.
◆ கன்றுகளுக்கு நோய் தடுப்பு ஊசி அளியுங்கள்.
◆ மழைக் காலங்களில் அழற்சி காரணமாக போன்ற நோய்களின் தாக்கம் அதிகரிக்கும்.
◆ கால்நடை மருத்துவர்களின் ஆலோசனை பேரில் தகுந்த Black Quarter, HS நோய் தடுப்பு ஊசிகள் போட வேண்டும்.
தொடர் மழை காலங்களில் செய்ய வேண்டியவை
◆ தொழுவத்தின் மழை நீர் ஒழுகுவதை சரி செய்யுங்கள்.◆ இளம் புற்களை சிறிது சிறிதாக நறுக்கி, உலர்ந்த புற்களுடன் சேர்த்து அளியுங்கள்.
◆ கலப்பு தீவன அளவையும், அதில் எரிச்சத்தின் அளவையும் அதிகரியுங்கள்
◆ மறக்காமல் தாது உப்பின் அளவை சற்று அதிகரித்து அளியுங்கள்.
◆ மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பு, நடுவில் மற்றும் இறுதியில் குடற்புழு நீக்கம் செய்யுங்கள்.
◆ மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் மாடுகளில் உண்ணிகள் மற்றும் பேன்கள் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அதை கண்காணியுங்கள்.
◆ மாட்டு தொழுவத்தின் இண்டு இடுக்குகளில் நெருப்பு உமிழும் கருவி மூலம் மறைந்திருக்கும் உண்ணிகள் மற்றும் பேன்களை அழியுங்கள்.
◆ கூடுதலாக தொழுவத்தின் அருகில் இருக்கும் புதர்கள் மற்றும் தேவையற்ற செடிகளை அகற்றி உண்ணிகள் பிரச்சினையை தவிருங்கள்.
◆ தொடர் மழைக் காலங்களில் தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து சுத்தமான தண்ணீரை அளியுங்கள்.
◆ மிக இளம் கன்றுகளுக்கு வழக்கத்தை விட கூடுதலாக பால் அல்லது கன்றுகளின் ஆரம்ப கால தீவனம் அளிக்க வேண்டும்.
◆ தொழுவத்தின் தரை வழுக்காமல் கவனியுங்கள்.
◆ தரையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துங்கள்.
◆ தொழுவத்தில் ஈக்களின் தொல்லையை தவிர்க்க U-V பல்பு கொண்ட அமைப்பை பொருத்துங்கள்.
◆ மிக இளம் கன்றுகளுக்கு வெது வெதுப்பான தண்ணீர் அளியுங்கள்.
◆ கன்றுகள் மற்றும் கிடாரிகளில் கழிச்சல் இருந்தால் மிக இளம் புற்களை உட்கொள்வதால் எலெக்ட்ரோலைட் பவுடரை தண்ணீரில் கலந்து அளியுங்கள்.
◆ கால்நடை மருத்துவர்களின் ஆலோசனை பேரில் தகுந்த Black Quarter, HS நோய் தடுப்பு ஊசிகள் போட வேண்டும்.
◆ கலப்பு தீவனம் சேமிக்கப்பட்ட அறைகளில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
◆ கலப்பு தீவனம் மீது பூஞ்சை பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
◆ மழைக்காலங்களில் தொழுவத்தை முழுவதுமாக மூடி வைத்து காற்றோட்டத்தை தடுக்காதீர்கள்.
◆ மழைக்காலத்தில் காற்றோட்டம் தடுக்கப்பட்ட தொழுவத்தில் அமோனியா வாயு தொழுவத்தில் இருந்து வெளியேறாமல் மாடுகள் மற்றும் கன்றுகளில் கண் எரிச்சல் மற்றும் நாள் பட நாள் பட நிமோனியா ஏற்படும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-june12-2024-blogger
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Comments
Post a Comment