பசும் முருங்கை இலை பால் உற்பத்தியை அதிகரிக்குமா?
மாடுகளுக்கு முருங்கை இலை தீவனம்:
முருங்கை இலைகள் புரதம், கெரோடீன், உயிர் சத்துக்கள் A, C, மற்றும் தாது சத்துக்கள் நிரம்பியது. இதில் புரதம் 23 -33 %, கொழுப்பு 7.0%, நார் 5.9%, கரையும் மாவு சத்து 49.0 % உள்ளன. இது மாடுகளில் சுமார் 80% வரை செரிக்க கூடியது. இதில் செரிக்க கூடிய புரதம் 11% அளவும், மொத்த செரிமான ஊட்டச் சத்துக்கள் 62% உள்ளன.
இதன் புரதத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள் சிறப்பான தன்மையுடனும், புரதச்சத்து அதிக செரிமானம் கொண்டதாகவும் உள்ளதால் ஆடு, மாடுகளுக்கு சிறந்த புரதச்சத்து கொண்ட தீவனமாக பயன்படுத்தலாம்.
முருங்கை இலைகளில் உள்ள புரதச்சத்து கிளைரிசிடியா மற்றும் சூபாபுல் இலைகளில் உள்ள புரத அளவிற்கு இணையாக உள்ளது. இருந்தாலும் இதில் பைபாஸ் புரதம் கிளைரிசிடியா மற்றும் சூபாபுல் இலைகளை விட அதிகமாகவும் புரதத்தில் உள்ள அமினோ அமிலங்களின் தன்மை சிறப்பாகவும் உள்ளது.
முருங்கை இலையில் உயிர்ச்சத்துக்கள் B, கெரோடீன் , A, C, D, E மற்றும் B காம்ப்ளெக்ஸ் உயிர் சத்துக்கள் போலீக் அமிலம் ( B9 ), பைரிடாக்சின் ( B6 ), நியாசின் ( B3 ) போன்றவைகளும், இதில் ஆக்சைடுகளுக்கு எதிரான காரணிகள், E.coli நுண்ணுயிர்கள், பங்கஸ் போன்றவற்றை அழிக்கும் தன்மை உள்ளது
முருங்கை இலையை தீவனமாக அளிக்கும் முறைகள்
பசும் இலைகள்உலரவைத்து பொடி செய்யப்பட்ட இலைகள்
முருங்கை இலை சைலேஜ்
பசும் இலைகள்
ஒரு ஆய்வில் மேய்ச்சலுக்கு அனுப்பி பராமரிக்கப்பட்ட மாடுகளுக்கு மேய்ச்சல் முடிந்து உடல் எடையில் 0.3% அளவு கூடுதலாக பசும் இலைகள் அளித்த பொழுது (சுமார் 350 கிலோ மாடுகளுக்கு 4-5 கிலோ) அவை 13% கூடுதல் பால் அளித்தன.மற்றொரு ஆய்வில் மாடுகளுக்கு அளிக்கப்பட பருத்தி பிண்ணாக்கிற்கு மாற்றாக முருங்கை இலைகளை 10, 20, 30% அளவில் அளித்த பொழுது மாடுகள் முறையே 1.4, 0.9, 0.8 கிலோ அதிக பால் அளித்தன. அதே சமயத்தில் மாடுகள் அளித்த பாலில் இருந்த கொழுப்பு மொத்த திடப்பொருட்கள் மற்றும் SNF அளவில் எந்த மாறுதலும் இருக்கவில்லை.
முருங்கை இலை உட்கொண்ட மாடுகளின் பாலில் நிறம் மற்றும் மணத்தில் எந்த மாறுதலும் காணப்படவில்லை.
பின்னொரு ஆய்வில் உலர்ந்த பசும்புல்லுடன் 8-12 கிலோ பசும் முருங்கை இலைகளை சேர்த்து அளித்த பொழுது மாடுகள் உட்கொண்ட மொத்த தீவன அளவு, பால் உற்பத்தி, தீவன செரிமானம் போன்றவை அதிகரித்தது. பாலின் நிறம், மணம், சுவையில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை.
மாடுகளுக்கு அளிக்கப்படும் வேலிமசாலுக்கு மாற்றாக 20% வரை உலர வைக்கப்பட்ட முருங்கை மரத் தண்டுகளை அளித்தால் தீவனத்தின் செரிமான அளவு பால் உற்பத்தி, பாலில் கொழுப்பு அளவுகள் மற்றும் தீவனத்தை பாலாக மாற்றும் திறன் அதிகரிக்கும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Comments
Post a Comment