எள்ளு பிண்ணாக்கை சினை மாடுகளுக்கு கொடுக்கலாமா?


எள்ளு பிண்ணாக்கை சினை மாடுகளுக்கு கொடுக்கலாமா?

◆ எள்ளு புண்ணாக்கை மாடுகளுக்கு, குறிப்பாக மிக இளம் சினை மாடுகளுக்கு அளித்தால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்ற கருத்தின் காரணமாக விவசாயிகள் இந்த பிண்ணாக்கை தீவனமாக பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.

◆ மிக இளம் சினை மாடுகளுக்கு எள்ளு அல்லது எள்ளு பிண்ணாக்கை அளிக்க வேண்டாம்.

◆ எள்ளு அல்லது எள்ளு பிண்ணாக்கை அறிவுறுத்தப்பட்ட அளவுக்கு மேல் அளித்தால்….

◆ எள்ளில் செசாமின் ( Sesamin ) என்ற இரசாயனம் உள்ளது. எள்ளு பிண்ணாக்கை மாடுகள் உட்கொண்டால்

◆ அது மாடுகளின் சிறுகுடலில் உள்ள நுண்ணுயிரிகளால் என்டேரோ லாக்டோன் ( Entero lactone ) என்ற இரசாயனமாக மாற்றப்படுகின்றது.

◆ எள்ளு அல்லது எள்ளு பிண்ணாக்கை மிக இளம் சினை மாடுகளுக்கு ( 1-3 மாத சினை ) அளித்தால் சினைக் கொண்ட கர்ப்பப்பையை அது வெகு வலிமையுடன் சுருங்க வைத்து பிழியும். அதனால் சினை முட்டை அழிந்து மாடுகளில் சினை சிதைவு ஏற்படும். மாடுகள் 4-5 மாததிற்கு மேல் சினையில் இருந்தால் இந்த பாதிப்பு இருக்காது.

◆ ஒரு ஆய்வில் எருமைகளுக்கு கன்று ஈன்ற 30 நிமிடங்களில் 250 கிராம் எள்ளும் 250 கிராம் வெல்லமும் கொடுக்கப்பட்டது பின்பு தொடர்ந்து 8 நாட்களுக்கு தினம் ஒருமுறை இது அளிக்கப்பட்டது.

◆ கன்று ஈன்ற நாளன்று அளிக்கப்பட்ட எள்ளின் காரணமாக கன்றை சுற்றி இருக்கும் பனிக்குட உறுப்பு கழிவுகள் ( Placenta ) மிக விரைவில் உறுப்பு வெளியேற்றின.

◆ தொடர்ந்து 8 நாட்கள் அளிக்கப்பட்டதால் கர்ப்பப்பையில் இருக்கும் பிற கழிவுகள் விரைந்து வெளியேற்றப்படுகின்றன. இதனால் கர்ப்பப்பையை சுத்தப்படுத்துகிறது. மாடுகள் கன்று ஈன்ற பின் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய் ( Mertitis ) தவிர்க்கப்படுகின்றது.

◆ அத்துடன் கன்று ஈன்றவுடன் விரிவடைந்துள்ள கர்ப்பப்பை மீண்டும் இயல்பு நிலைக்கு சுருங்குவதை எள்ளு துரிதப்படுத்துவதால் கன்று ஈன்ற மாடுகள் மீண்டும் சினைக்கு வருவது துரிதப்படுத்தப்படுகின்றது.

◆ மாடுகள் சினைக்கு வரும் சமயம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ( Estrogen ) என்ற ஆர்மோன் மாடுகள் சினை அறிகுறிகளை வெளிப்படுத்தவும், சினைக்கு வருவதற்கும் அவசியம். எள்ளை மாடுகளுக்கு அளிப்பதால் இது போன்ற செயலை இது செய்யும்.

முடிவாக…

◆ எள்ளு பிண்ணாக்கு சிறந்த புரதச்சத்து மிக்க தீவனம்.

◆ இதன் புரதத்தில் உள்ள அமினோ அமிலங்களின் வரிசை மற்றும் தன்மை சோயா பிண்ணாக்கின் புரதத்தை ஒட்டி உள்ளன.

◆ இதில் சிறுகுடலில் செரிக்கும் பைபாஸ் புரதம் குறைவாக உள்ளதால் பார்மாலிடீஐடு மூலம் நேர்த்தி செய்யப்பட்டு பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.

◆ இதில் பால் உற்பத்திக்கு மிகவும் அத்தியாவசியமான லைசின் அமினோ அமிலம் குறைவாக உள்ளதால் லைசின் அதிகம் உள்ள சோயா பிண்ணாக்குடன் சேர்த்தளித்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும் மாடுகளின் தீவனத்தில் 10-15% அளவுக்கு மேல் இதை அளிக்க கூடாது.

◆ கன்றுகளுக்கு இதை தீவனமாக அளிக்கும் முன்பு தண்ணீரில் ஊற வைத்து அளிப்பது நல்லது.

◆ இந்த பிண்ணாக்கை எருவாக பயன்படுத்துவதற்கு பதில் மாடுகளுக்கு அளித்து, அதன் சாணத்தை எருவாக பயன்படுத்துங்கள்.


எழுத்தாளர் பற்றி





பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm

வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

Comments

Popular posts from this blog

பால் உற்பத்தியை இயற்கையாக உயர்த்த மரவள்ளி இலை ஒரு சிறந்த தீர்வா?

கன்னுகுட்டி அதிகமா பால் குடிச்சா, மாடு பருவத்துக்கு வராதா?

மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன?