பருத்தி பிண்ணாக்கை எப்படி கொடுத்தால் மாடுகளுக்கு முழுமையான பயன் கிடைக்கும்?



காசிபால் நச்சு

◆ இந்த பிண்ணாக்கில் காசிபால் ( Gossypal ) என்ற நச்சுத்தன்மை உள்ளது.

◆ பருத்திக் கொட்டையில் ஒரு “பை” போன்ற அமைப்பில் காசிபால் இருக்கின்றது.பருத்திக்கொட்டையிலிருந்து எண்ணையை பிரித்தெடுக்கும் சமயம் இந்த அமைப்பு உடைந்து காசிபால் எண்ணையில் கலந்து விடும்.

◆ அழுத்தம் கொடுத்து செக்கில் ஆட்டப்பட்ட ( Expeller ) பிண்ணாக்கில் காசிபால் அளவு மிக குறைவாகவும் (0.02- 0.05% ) இரசாயனம் மூலம் தயாரிக்கப்பட்ட பிண்ணாக்கில் (Solvant Extracted )அதிகமாகவும் ( 0.1 – 0.5% ) இருக்கும்.

◆ மாடுகளுக்கு செக்கில் ஆட்டப்பட்ட பருத்தி பிண்ணாக்கை தீவனமாக அளிப்பது சிறந்தது.

◆ இது மட்டுமின்றி மாடுகளின் முதல் வயிறு முழுமையாக வளர்ந்து அதில் நுண்ணுயிரிகள் சரியான அளவில் இருந்தால் இந்த காசிபால் நஞ்சு நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு அதன் வீரியம் பெருமளவு குறைக்கப்படுகின்றது.

சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள்

◆ இந்த பிண்ணாக்கில் சுண்ணாம்பு சத்து மிக குறைவாகவும், பாஸ்பரஸ் சத்து மிக அதிகமாகவும் உள்ளது.

◆ கன்று ஈன்ற மாடுகளின் முதல் மூன்று மாதத்தில் அம்மாடுகளுக்கு சுண்ணாம்பு சத்து கூடுதலாக அளிக்கவேண்டிய நிலையில் அந்த சுண்ணாம்பு சத்து சரிவர மாடுகளில் பயன்பட வேண்டுமெனில் பாஸ்பரஸ் சத்தும் தேவையான அளவு இருக்க வேண்டும்.

◆ அந்த சமயத்தில் அம்மாடுகளுக்கு பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்ட பருத்தி பிண்ணாக்க்கை அளித்தால் அம்மாடுகளுக்கு தேவையான பைபாஸ் புரதம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் கூடுதலாக கிடைப்பதால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

◆ கன்று ஈன்ற மாடுகளின் முதல் மூன்று மாதத்தில் அம்மாடுகளுக்கு சுண்ணாம்பு சத்து கூடுதலாக அளிக்க வேண்டிய நிலையில் அந்த சுண்ணாம்பு சத்து சரிவர மாடுகளில் பயன்பட வேண்டுமெனில் பாஸ்பரஸ் சத்தும் தேவையான அளவு இருக்க வேண்டும்.

◆ அந்த சமயத்தில் அம்மாடுகளுக்கு பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்ட பருத்தி பிண்ணாக்கை அளித்தால் அம்மாடுகளுக்கு தேவையான பைபாஸ் புரதம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் கூடுதலாக கிடைப்பதால் பால் உற்பத்தி அதிகரிக்கும்'

காசிபால் நச்சால் ஏற்படும் பிரச்சனைகள்:

◆ மாடுகளின் உணவுப்பாதையில் இருந்து இந்த நச்சு உறிஞ்சப்படுகின்றது.

◆ அப்படி உறிஞ்சப்படும் சிதைக்கப்படாத காசிபாலின் அளவைப் பொறுத்தது நச்சுத்தன்மை ஏற்படும் .உறிஞ்சப்படும் காசிபால் அளவு அதிகமானால் அது கலீரலை பாதிப்பதுடன் பல இனப்பெருக்க பிரச்சினைகளையும், இரத்த சோகையையும் ஏற்படுத்தும்.

◆ இளம் கன்றுகளின் வயிற்றில் காசிபால் சிதைக்கப்பட வாய்ப்பு இல்லாததால் அவற்றில் நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

◆ இளம் கன்றுகளுக்கான தீவனத்தில் இதை சேர்க்க கூடாது

◆ மாடுகளுக்கு தீவனம் அளிக்கும் பொழுது முதலில் பசும் தீவனமும் ஒருமணி நேரம் கழித்து தான் கலப்பு தீவனம் அளிக்கப்பட வேண்டும்.

◆ இந்த முறையில் தீவனம் அளிக்கும் பொழுது அந்த கலப்பு தீவனத்தில் பருத்திக்கொட்டை பிண்ணாக்கு சேர்க்கப்பட்டிருந்தால் மாடுகளில் காசிபால் நச்சுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைக்கப்படும்.

காசிபால் நச்சின் வீரியத்தை மேலும் குறைக்க:

◆ நன்கு அரைக்கப்பட்ட பருத்தி பிண்ணாக்கின் மேல் 1% நீர்த்த சுண்ணாம்பு கரைசலை தெளித்து சில நாட்கள் வைத்திருந்தால் காசிபால் நச்சுத்தன்மை குறைக்கப்படுகின்றது.

◆ இப்படி செய்வதின் மூலம் இயல்பிலேயே சுண்ணாம்பு சத்து குறைந்த இந்த பிண்ணாக்கில் அந்த சத்தை அதிகரிக்கவும் முடியும்

◆ இரும்பு சத்தை சேர்த்தால் நச்சின் அளவு குறையும்.

◆ மாடுகளுக்கான 100 கிலோ கலப்பு தீவனத்தில் இருந்த கடுகு பிண்ணாக்கு, மற்றும் மக்காச்சோள பிண்ணாக்கை சுமார் 60% வரை குறைத்து அதற்கு பதில் பருத்திக்கொட்டை பிண்ணாக்கை சேர்த்து அளித்த பொழுது மாடுகளின் பால் உற்பத்தி, கொழுப்பு மற்றும் SNF அளவில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

◆ குஜராத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் முதல் வயிறு நன்கு வளர்ச்சி அடைந்த எருமை கன்றுகளுக்கு பருத்திக்கொட்டை பிண்ணாக்கை சேர்த்து அளித்த பொழுது அக்கன்றுகளின் இரத்தத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது கவலைப்படும் அளவுக்கு இல்லை என்றும் கன்றுகளின் வளர்ச்சி நன்கு இருந்ததாகவும் பதியப்பட்டுள்ளது.

◆ முடிவாக, பருத்திக்கொட்டை பிண்ணாக்கை மாடுகளின் மொத்த தீவனத்தில் 15% வரை சேர்த்து அளிக்கவேண்டும். சுமார் 6-8 மாத வயதுக்கு மேல் உள்ள கிடாரிகளுக்கு மட்டும் இதை புரதச்சத்து மிக்க தீவனமாக அளிக்கலாம்.

பருத்தி பிண்ணாக்கை தீவனமிடும் பொழுது கவனிக்க வேண்டியவை:

◆ இதில் உள்ள காசிபால் நச்சு நன்கு வளர்ந்த மாடுகள் மற்றும் ஆடுகளில் முதல் வயிற்று நுண்ணுயிர்களால் இழக்க வைக்கப்பட்டாலும் இந்த பிண்ணாக்கை மாடுகளின் தீவனத்தில் 15% மேல் அளிக்காமல் இருப்பது நல்லது.

◆ மாடுகளுக்கு கோடை காலத்தில் நீங்கள் வேளாண் கழிவுகளை சேர்த்து தீவனமிட்டால் அந்த சமயத்தில் கலப்பு தீவனத்தில் பருத்தி பிண்ணாக்கை சேர்ப்பது நல்லது.

◆ இதில் உள்ள புரதச்சத்து மிக அதிக செரிமான திறன் கொண்டிருப்பதால் வேளாண் கழிவுகளின் செரிமானத்தையும் இது அதிகரிக்கும்.

◆ மாடுகளின் கலப்பு தீவனத்தில் இதை 15% வரை சேர்க்கலாம்.

◆ பருத்தி பிண்ணாக்கை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் அளித்தால்…
பால் மிக அடர்த்தியாக இருக்கும்.

◆ அதன் மூலம் பெறப்படும் வெண்ணையை நெய்யாக கடைவதில் சிரமம் ஏற்படும்.

◆ வெண்ணைய் பார்ப்பதற்கு மாடுகளின் உடலில் இருக்கும் மாட்டு கொழுப்பு போன்று ஒரு வாடை அடிக்கும்

◆ பருத்தி பிண்ணாக்கை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் அளித்தால்…

◆ பருத்தி பிண்ணாக்கை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மாடுகளுக்கு அளிக்க வேண்டாம் அது தவறான முறை.

◆ நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பிண்ணாக்குகளும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் செரிமான திறன் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. மாடுகளின் பால் உற்பத்தி மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் பிற தீவனங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப பிண்ணாக்குகளை தேர்வு செய்ய வேண்டும்.

எழுத்தாளர் பற்றி



பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm

வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க





Comments

  1. பின்பு பருத்தி பின்னக்காய் ஊற வைக்காமல் எப்படி கொடுப்பது....

    ReplyDelete
    Replies
    1. கால்நடை வளர்ப்பு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு யுவர்பார்மின் கால்நடை மருத்துவர்களிடம் பேசி ஆலோசனை பெறுங்கள்!

      யுவர்பார்ம் தொடர்புக்கு: 6383717150

      Delete

Post a Comment

Popular posts from this blog

சினை பிடிக்காத மாடுகளுக்கு முருங்கை இலையுடன் கூடிய மருத்துவ முறை

கன்னுகுட்டி அதிகமா பால் குடிச்சா, மாடு பருவத்துக்கு வராதா?

கறவை மாடுகளுக்கு பயறுவகை பசும் தீவனம் அளித்து தீவன செலவை குறையுங்கள்!