பருத்தி பிண்ணாக்கு பற்றிய முன்னோட்டம்





பருத்தி பிண்ணாக்கு பற்றிய முன்னோட்டம்


◆  பருத்தி பிண்ணாக்கு மாடுகளுக்கு புரதச்சத்து மிக்க தீவனம் ஆகும்.  இந்த புரதச்சத்துடன் பாஸ்பரஸ் என்ற தாதும், உயிர்ச்சத்து E -ம் இதில் அதிகமாக உள்ளன.

◆  இந்த பிண்ணாக்கு மேல் தோல் அகற்றப்பட்ட வகை (Decorticated )மற்றும் மேல் தோல் அகற்றப்படாத வகை (Undecorticated ) என்ற இரு வகைகளில் கிடைக்கின்றது.

இந்திய தர கட்டுப்பாட்டு கழக பரிந்துரை:


ஓடு நீக்கப்பட்ட பிண்ணாக்கு, ஓடுநீக்கப்படாத பிண்ணாக்கு ஒப்பீடு





◆ மேல்தோல் அகற்றப்படாத பிண்ணாக்கில் (UnDecortcated ) நார்ச்சத்தின் அளவு அதிகமாக உள்ளதால் புரதம், கொழுப்பு மற்றும் எரிச்சத்து, செரிமானத் திறன், மொத்த செரிமான ஊட்டச்சத்துகளின் அளவு, மேல்தோல் அகற்றப்பட்ட வகையை ( Decorticated ) விட குறைவாக உள்ளன.

◆ செரிக்கக்கூடிய புரதம் 22-23%, மொத்த செரிமான ஊட்டச்சத்துகள் 76-78 % .
இந்த பிண்ணாக்கில் மாடுகளின் சிறுகுடலில் செரிக்கப்படும் பைபாஸ் புரதச் சத்து உள்ளது.

◆ இந்த பிண்ணாக்கில் உள்ள மொத்த புரதச்சத்தில் சிறுகுடலில் செரிக்க கூடிய பைபாஸ் புரதம் சுமார் 43%, முதல் வயிற்றில் செரிக்க கூடிய புரதம் 57% உள்ளது.

◆ சத்து மிக்க சோயா மொச்சை பிண்ணாக்குடன் ஒப்பிட்டால் பருத்திக்கொட்டை பிண்ணாக்கில் பைபாஸ் புரதச்சத்து சிறிதளவு மட்டுமே குறைவாக உள்ளது ( 59% Vs 43%)

◆ இந்த இரண்டு புரதங்களும் மிக சரியான அளவில் உள்ளன.

◆ மாடுகள் மற்றும் 6-8 மாத வயதுக்கு மேல் உள்ள கிடாரிகளுக்கு இதை புரதச்சத்து மிக்க தீவனமாக அளிக்கலாம். ஆனால் முதல் வயிறு முழுவதுமாக வளர்ச்சி பெறாத கன்றுகளுக்கு இதை அளிக்க கூடாது.

பால் உற்பத்திக்கு மிகவும் அத்தியாவசியமான:

1. லைசின் பிற பிண்ணாக்குகளை விட அதிகமாக உள்ளது.

2. மெத்தியோனின் அளவு சற்று குறைவாக உள்ளது.

3. இதில் செரிக்க கூடிய புரதச்சத்து 22%, மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 70% உள்ளன.

◆ பருத்தி கொட்டை பிண்ணாக்கில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 4860 கிலோ கலோரிகள் உள்ளன.

◆ இந்த எரிச்சத்து 71% வரை செரிக்க கூடியது.

◆ இதில் உள்ள மொத்த எரிச்சத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து 56% ,

◆ பால் உற்பத்திக்கு பயன்படும் எரிச்சத்து 35%,

◆ வளர்ச்சிக்கு பயன்படும் எரிச்சத்து 33% உள்ளன.

◆ பருத்தி கொட்டை பிண்ணாக்கு மாடுகளில் 85% வரை செரிக்கும்.

◆ இதில் உள்ள மொத்த பாஸ்பரஸ் சத்தில் 70% வரை பைட்டேட் பாஸ்பரஸ் கலவையாக உள்ளது.


எழுத்தாளர் பற்றி



பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm

வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க













Comments

Popular posts from this blog

சினை பிடிக்காத மாடுகளுக்கு முருங்கை இலையுடன் கூடிய மருத்துவ முறை

கன்னுகுட்டி அதிகமா பால் குடிச்சா, மாடு பருவத்துக்கு வராதா?

கறவை மாடுகளுக்கு பயறுவகை பசும் தீவனம் அளித்து தீவன செலவை குறையுங்கள்!