தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் கால்நடைகளுக்கு பழக்கழிவுகள்- பகுதி – 4 : முந்திரி பழ கழிவுகள்

  • தமிழ் நாட்டில்- கடலூர் விழுப்புரம் அரியலூர் புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் முந்திரி தோட்டம் உள்ளது .
  • தமிழ் நாட்டில் சுமார் 80,000 டன் முந்திரி உற்பத்தியாகின்றது . ஒரு கிலோ முந்திரி கொட்டைக்கு கழிவாக  10 கிலோ முந்திரி பழம் கிடைக்கின்றது அந்த வகையில் 8,00,000 டன் முந்திரிப்பழம் தமிழ் நாட்டில் உற்பத்தியாகின்றது .
  • அறுவடை காலங்களில் மரத்திலிருந்தபடியே பழத்திலிருந்து முந்திரி கொட்டை அறுவடை செய்யப்ப படுகின்றன. கொட்டை அறுவடை செய்யப்பட்டபின் மரத்திலேயே விடப்படும் அல்லது தரையில் விழும் பழங்கள்  கெட ஆரம்பிக்கும் 
  • பழுத்து கீழே விழும் பழங்கள் பல சமயங்களில் தரையிலேயே அழுகி போகின்றன இந்த பழங்களில் சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் இதன் ஆயுட்காலம் ஒரு நாள் தான். முந்திரி கொட்டை அறுவடை செய்யப்பட்ட முந்திரி பழம் இரண்டாம் நாளில் இருந்து கெட ஆரம்பிக்கும்
  • இந்த பழங்களில் இருந்து முந்திரி பழ சாறு,ஜாம்,ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்கின்றன 
  • இந்த முறையில் சாறு நீக்கப்பட்ட முந்திரி பழ  சக்கை கழிவாக கிடைக்கின்றது.சாறு எடுத்த பின் கிடைக்கும்  சக்கை கழிவு பெரும் பாலும் விரயமாக்கப் படுகின்றது.சில சமயங்களில் இந்த பழங்களை அந்த பகுதியில் மேயும் மாடுகள் உட்கொள்ளவும் செய்கின்றன.

    முந்திரி பழ சக்கை மற்றும் முந்திரி பழ த்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் கீழ் வருமாறு  

  • முந்திரி பழத்தில் / சக்கை கழிவில் உயிர் சத்து “C “ மிக அதிகம் ( 200 - 300 மிகி/100 கிராம் ) உள்ளது. இது ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில் இருப்பதை போன்று நான்கு மடங்கு அளவிலும் அன்னாசி  பழத்தை விட  10  மடங்காகவும் உள்ளது 
  • உலர வைக்கப்பட்ட முந்திரி பழத்தின் செரிமானம் சுமார்  68 %வரை புரத சத்தின் செரிமானம்30% வரையும் இருக்கும்
  • முந்திரி பழத்தில் ஐடிரோ சயனிக் அமிலம் ( 20.61 -26.61 மிகி/100 கிராம்), டேனின் மற்றும்  ஆக்சாலிக் அமிலம்(1.2 -1.7% ) போன்ற ஊட்ட சத்துக்களுக்கு எதிரான காரணிகள் உள்ளன. 
  • இதில் டேனின் ( 3-5 மிகி/ மிலி  முந்திரி பழ சாறு ) என்பது இந்த பழக் கழிவுகளுக்கு துவர்ப்பு சுவையை அளிப்பதுடன், இந்த பழத்தில் உள்ள புரத சத்தை மாடுகளுக்கு பயன்படாமல் செய்யும் தன்மை கொண்டது.  
  • ஆக்சாலிக் அமிலம் தீவனத்தில் உள்ள சுண்ணாம்பு சத்தை மாடுகளுக்கு பயன்படாமல் செய்துவிடும்
  • முந்திரி பழம் மற்றும் சாறு எடுத்த பின் பின் கிடைக்கும் பழ சக்கையில் டேனின் ( Tanin ) இருப்பதால் இதை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கும் முன்பு இந்த டேனின் அளவை குறைப்பது அவசியம்.  பொதுவாக மாவு சத்து நிறைந்த தீவனப் பொருட்களை, உதாரணமாக தோல் நீக்கப்பட்டு உலரவைத்த குச்சிக்கிழங்கு மாவுடன் சுமார் 6-8 மணி நேரம் கலந்து வைத்து பின்பு தீவனமிட்டால்  இதில் உள்ள டேனின் சுமார் 35—40% வரை குறையும் . 
  • சாறு நீக்கப்பட்ட முந்திரி பழ சக்கையில் புரதம். நார் சத்து, கொழுப்பு சத்து, கரைய கூடிய சர்க்கரை சத்துக்கள் உள்ளன இதில் உள்ள சத்துக்களின் அளவு அரிசி நொய் ,அரிசி தவிடு மற்றும் மக்கா சோள தானியத்தை ஒத்துள்ளது இருப்பினும் இதில் டேனின் அளவு அதிகம் உள்ளதால் உலர்ந்த முந்திரி பழ சக்கையின் செரிமானம் குறைவாகவே இருக்கும்

  • முந்திரி பழ சைலேஜ் 

    • முந்திரி பழத்தில் மிக அதிகமாக ஈரப்பதம் உள்ளதால் அந்த அதிகப்படியான ஈரத்தை உறிஞ்சி சைலேஜ் செய்ய ஏதுவான ஈரப்பத்திற்க்கு கொண்டு வர தவிடு அல்லது உலர வைத்து  பொடி செய்யப்பட்ட தானியம் நீக்கப்பட்ட  சோள கதிரை சேர்த்து சைலேஜ் செய்யவேண்டும் .செம்மறி ஆடுகளுக்கு அளிக்கும் மொத்த தீவனத்தில் உலரவைத்து பொடிசெய்யப்பட்ட முந்திரி பழ கழிவை  300 – 350 கிராம் வரை பசும் புல்லுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்
    • முந்திரிப்பழ கழிவில் புரத சத்து மிக மிக குறைவாகவும் கரையும் சர்க்கரை சத்து மிக மிக அதிகமாகவும் உள்ளதால் முந்திரி பழத்தை கூண்டில் வளர்க்கப்படும் கோழிகளின் உலர்ந்த எச்சத்துடன் சேர்த்து சைலேஜ் செய்வது மிகுந்த பயன் தரும்

    முந்திரி பழ சக்கை ,முந்திரி பழம் மற்றும் 
      கோழிகளின் எச்சத்தில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் (%)

      முந்திரி பழ சக்கை  + கோழி எச்சம் கொண்ட சைலேஜ் :

      • முந்திரி பழத்தில் சர்க்கரை சத்து அதிகமாகவும் புரத சத்து குறைவாகவும் உள்ளது முந்திரி பழம் அல்லது பழ சக்கை கொண்டு செய்யப்படும் சைலேஜில் புரத சத்தின் அளவை அதிகரிக்க கோழிகளின் எச்சத்தை பயன்படுத்தலாம். இதில் சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் வெல்லப்பாகு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை
      • முந்திரி பழம் அல்லது முந்திரி பழ சக்கையுடன் எடைக்கு எடை 10%அளவில் (100 கிலோ சக்கை அல்லது முந்திரி பழத்திற்கு 10 கிலோ அளவில் )உலர்ந்த கூண்டில் வளர்க்கப்பட்ட கோழியின் எச்சத்தை சேர்த்து சைலேஜ் செய்தால்  30 நாட்களில்  தரமான சைலேஜ் கிடைக்கும்
      • ஒரு ஆய்வில் முந்திரிப்பழம் கொண்ட தீவனம் அல்லது மக்காச்சோள சைலேஜ் கொண்ட தீவனம் வளரும் மாடுகளுக்கு அளித்து ஆராயப்பட்டது.இந்த தீவனம் உட்கொண்ட மாடுகளின் வளர்ச்சி மற்றும் தீவனத்தை உடல் வளர்ச்சியாக மாற்றும் திறன் போன்றவை ஆராயப்பட்டன. 

        வளரும்காளை மாடுகளுக்கு அளிக்கப்பட்ட தீவனம்

      • இந்த தீவனம் உட்கொண்ட மாடுகளில் அதன் பயன்பாடு கீழ்கண்ட அளவில் இருந்தது
      • ஒரு  ஆய்வில்  முந்திரிப்பழத்துடன் தானியம் நீக்கப்பட்ட மக்கா சோள கதிர் ,அரிசி தவிடு கலந்த தீவனங்களை உட்கொண்ட மாடுகள் மக்கா சோள சைலேஜ் கொண்ட தீவனத்தை உட்கொண்ட மாடுகளுக்கு இணையான வளர்ச்சி மற்றும் தீவனத்தை உடல் வளர்ச்சியாக மாற்றும் திறனை கொண்டிருந்தது
      • மற்றொரு ஆய்வில் முந்திரி பழ சக்கை வெயிலில் நாட்கள் உலரவைக்கப்பட்டு அரைக்கப்பட்டது. செம்மறி ஆட்டு குட்டிகளுக்கான 

      • மொத்த தீவனத்தில் அரைக்கப்பட்ட முந்திரி பழ சக்கை அளவுக்கு11,21,28 33 % சேர்க்கப்பட்டது இந்த ஆய்வில் ஆட்டு குட்டிகளின் மொத்த தீவனத்தில் உலர வைக்கப்பட்ட முந்திரி சக்கை 21%வரை சேர்த்தால் குட்டிகள் தீவனம் உட்கொள்ளும் அளவும் அதன் வளர்ச்சியும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்தது

      • அதனால் கொட்டை அறுவடை செய்யப்பட்ட பின் கிடைக்கும் முந்திரிப்பழங்களை உடனடியாக சேகரித்து நீரில் நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சைலேஜ் செய்து சைலேஜ் புற்களுக்கு மாற்றாக மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம் 

      • சாறு   எடுத்த பின் கிடைக்கும் முந்திரி பழ சக்கைகளையும்  10-15 நாட்கள் வெயிலில் உலரவைத்து அரைத்து மாடுகளின் மொத்த தீவனத்தில் 20% வரை சேர்த்து அளிக்கலாம் . செம்மறி ஆடுகளுக்கு அளிக்கும் மொத்த தீவனத்தில் உலரவைத்து பொடிசெய்யப்பட்ட முந்திரி பழ கழிவை  300 – 350 கிராம் வரை பசும் புல்லுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்

      கவனம் தேவை:

      முந்திரி பழத்தில் நொதிக்க கூடிய சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் இதை மாடுகள் அதிகம் உட்கொண்டால்  மிக விரைவில் இந்த சர்க்கரை நொதிக்கப்பட்டு மாடுகளின் முதல் வயிற்றில் எத்தில் ஆல்கோஹால் உற்பத்தி ஆகும் ..அதனால் மாடுகள் நடக்கும் பொழுது தடுமாற்றம் நிற்கும் பொழுது தலை தாழ்ந்து இருந்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும் ஆனால் இந்த நிலைமை ஓரிரு மணிகளில் சரியாகிவிடும்

      எழுத்தாளர் பற்றி

      பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

      Also Read

      Comments

      Post a Comment

      Popular posts from this blog

      தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

      கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

      கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)