கறவை மாடுகளுக்கு பசும் தீவனத்துடன் மர இலைகளை சேர்த்து அளித்து பால் உற்பத்தியை பெருக்குங்கள் - பகுதி 4

 



தீவன மரங்களை தோட்டத்தில் இணைக்கும் முறைகள்

தீவன மரங்களை சாகுபடி செய்ய நல்ல நிலங்கள் தேவை இல்லை விவசாயத்தை பாதிக்காத வகையில் உங்கள் தோட்டத்தில் தீவன மரங்களை இணைத்து மர இலை மகசூல் பெறலாம்

குருமரங்களை புல் வயலுடன் இணையுங்கள்:

  • சூபாபுல், அகத்தி ,கிளைரிசிடியா மற்றும் முசுக்கொட்டை குருமரங்களை நீங்கள் பராமரிக்கும் புல்வயலில் பாசன முறையில் ஊடு பயிராக இணைத்து பயிரிடுங்கள்.
  • அதற்காக மரக்கன்றுகளை நாற்றங்காலில் மூன்று முதல் நான்கு மாதங்கள் வளர்த்து பின்பு புல் வயலில் 2 மீட்டர் இடைவெளியில் வரிசையாக மறு நடவு செய்யவேண்டும் .
  • முதல் வரிசையில் மரக் கன்றுகளை நட்டுவிட்டு இரண்டம் வரிசையை முதல் வரிசை கன்றுகளின் இடைவெளியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்  
  • இரண்டு மீட்டர் இடைவெளியில் மரகன்றுகளை நட்டால் ஏக்கருக்கு சுமார் 1,000 கன்றுகள் தேவைப்படும்.
  • மரக்கன்றுகள் உங்கள் மார்பு உயரம் வளர்ந்தவுடன் அவற்றை உங்கள் மார்பு உயரத்தில் நறுக்கி விடவேண்டும்.      
  • அதிலிருந்து புதியதாக முளைக்கும் இளம் கிளைகளில் மூலம் கிடைக்கும் இலைகளை அறுவடை செய்யவேண்டும்      

உயிர் வேலிகளாக தீவன மரங்களை   இணையுங்கள்:

  • தோட்டத்தை சுற்றி 6-8 மீட்டர் இடைவெளியில் கல்யாண முருங்கை (முள்முருங்கை) , பூவரசு, உதியன் ,வாகை , வேப்பன் ,மலை வேம்பு போன்ற மரங்களை நட்டு அவற்றின் இடையே கிளைரிசிடியா கன்றுகளை  1மீட்டர் இடைவெளியில் இரு வரிசையில் நடவேண்டும்

  • விவசாயம் நடைபெறும் காலங்களில் கிளைரிசிடியா மர இலைகளை அறுவடை செய்யாமல் வேலியாகவும் ,வேளாண்மை நடைபெறாத காலங்களில் மர இலைகளை அறுவடை செய்து மாடுகளுக்கு தீவனம் இடலாம் 

  • இதற்காக பெரு மரங்களில் இருந்து வருடத்திற்கு ஒரு முறையும் கிளைரிசிடியா மரத்திலிருந்து 3-4 முறையும் இலைகளை அறுவடை செய்யவேண்டும்

பண்ணையின் உட்புறம் பாதைகளின் இருபுறமும் குருமரங்கள் தீவன வளர்க்கவேண்டும்:

  • பண்ணையின் உட்புறம் இருக்கும் பாதைகளின் இருபுறமும் இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் செடிக்கு செடி அரை அடியும் வரிசைக்கு வரிசை1 அடி இடைவெளியில் நெருக்கமாக சூபாபுல் மரக்கன்றுகளை பருவ மழை தொடங்கியவுடன் நட்டு வழக்கம் போல அவை மார்பு உயரம் வளர்ந்தவுடன் மேற்புறம் வெட்டிவிடவேண்டும் 

  • புதிய  இளம் கிளைகள் ஒரு மார் அளவு (4-5 அடிகள்) வளர்ந்தவுடனோ அல்லது புதிய கிளைகளின் அடிப்பகுதியில் பழுத்த இலைகள் தோன்றும் பொழுதோ அல்லது கிளைகளின் அடியில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும் பொழுதோ இலைகளை தீவனத்திற்காக அறுவடை செய்ய வேண்டும்

  • இம்முறையில் மழை காலங்களில் 40-45 நாட்களுக்கு ஒரு முறையும் பிற காலங்களில் 60-70 நாட்களுக்கு ஒருமுறையும்  இந்த சூபாபுல் செடிகளில் இருந்து  இலைகளை வெட்டி பயன்படுத்தலாம் 

  • இவ்விதம் சுமார் 100 மீட்டர் நீளமான பாதையின் இருபுறமும் மேற்கூறியவாறு சூபாபுல் செடிகளை நட்டு வருடத்திற்கு சுமார்  3.0 டன் இலைகளை பெறலாம்

    குருமரங்களை மார்பு உயரத்தில் வெட்டுதல்:

    சூபாபுல், அகத்தி கிளைரிசிடியா மற்றும் முசுக்கொட்டை குருமரங்கள் உங்கள் மார்பு உயரம் வளர்ந்தவுடன் அவற்றை உங்கள் மார்பு உயரத்தில் நறுக்கி விடவேண்டும் .அதிலிருந்து புதியதாக முளைக்கும் இளம் கிளைகளில் மூலம் கிடைக்கும் இலைகளை அறுவடை செய்யவேண்டும்

    குருமரங்களை தரையில் இருந்து அரை அடி உயரத்தில்          வெட்டுதல் 

    சுமார் ஒன்றரை வயதாகும் குறு மரங்களை இப்படி வெட்டி பெறப்படும் பசும் தீவன இலைகளின் அளவு அவற்றை மரமாக வளர்ப்பதை காட்டிலும் மூன்று மடங்கு இலைகள் கிடைக்கும்


நாள் ஒன்றுக்கு 10-15 லிட்டர் பால் கறக்கும்  6 மாடுகளுக்கு….
பசும் தீவன தேவை:

  
பசும் புல்  75 டன்., வேலிமசால் 9.5 டன்., தீவன மர இலைகள்: 2.0  டன்


எழுத்தாளர் பற்றி



பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

Also Read

Part 1

Part 2


Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)