கறவை மாடுகளுக்கு பசும் தீவனத்துடன் மர இலைகளை சேர்த்து அளித்து பால் உற்பத்தியை பெருக்குங்கள்- பகுதி -3
மர இலைகளை சேமிக்கும் முறைகள் :
உலரவைத்து சேமியுங்கள்:
மர இலைகளில் அதன் ஈரப்பதத்தை 12-15% வரை குறைத்து பொடி
செய்து சேமித்து வைத்துக்கொண்டு கோடையில் தீவன பற்றாக்குறை ஏற்படும் பொழுது இந்த உலர்ந்த மர இலைகளை கலப்பு தீவனத்துடன் இதோ அல்லது தனியாகவோ தீவனம் இடலாம்.
சைலேஜ் செய்து சேமியுங்கள்:
மர இலைகளை தனியாகவோ அல்லது
புற்களுடன் சம அளவில் கலந்து சத்து மிக்க சைலேஜ் தயாரிக்கலாம்.
முருங்கை இலை
சைலேஜ்:
- சுமார் 45 நாட்கள் வயதான முருங்கை இலைகளை வாட வைத்து அதன் ஈரப்பதத்தை 45%வரை குறைத்து 100 கிலோவுக்கு 1 முதல்5 கிலோ வரை வெல்லம் அல்லது மொலாசஸ் மற்றும் 1.0 கிலோ சமையல் உப்பும் சேர்த்து தரமான சைலேஜ் தயாரிக்கலாம
- முருங்கை இலை அல்லது முருங்கை இலை சைலேஜ் உட்கொள்ளும் மாடுகளின் பால் மடி ஆரோக்கியமாக இருக்கும்
- முருங்கை இலை சைலேஜ் இல் 28.4 %புரதம்34.5% NDF நார் சத்துக்கள் உள்ளன வெள்ளாடுகளுக்கு முருங்கை இலை சைலேஜ் அளித்து கலப்பு தீவன அளவை குறைக்கலாம்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது
- முருங்கை இலை சைலேஜ் 40% + குச்சிக்கிழங்கு தோல் 60% கொண்டு தயாரிக்கப்பட்ட சைலேஜ் மாடுகளுக்கு தீவனம் சிறந்த சைலாஜ் தீவனம் ஆகும்
- முருங்கை இலை சைலேஜை மாடுகளுக்கு தீவனமாக அளித்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும். பாலில் கொழுப்பு சத்து மற்றும் அளவில் குறைபாடு இருக்காது
- ஒரு ஆய்வில் கறவை மாடுகளுக்கான முழு தீவனத்தில் 100 கிலோவுக்கு முறையே 0,3,6மற்றும்9 கிலோ உலரவைத்து பொடி செய்யப்பட்ட முருங்கை இலையை சேர்த்து அளித்தபொழுது அந்த மாடுகள் உட்கொண்ட தீவன அளவிலோ பால் அளவு பாலில் கொழுப்பு மற்றும் SSNF அளவில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை
வாகை சைலேஜ்
வாகை மர இலைகளில் புரத சத்து நார் சத்து மற்றும் மொத்த நார் சத்தில் உள்ள NDF அளவு கள் முறையே 23,5,17.8 மற்றும் 44.25 உள்ளது .
சுமார் 250 கிலோ வாகை இலைகளை 50-60 கிலோ புல்லுடன் 10 கிலோ வெல்லப்பாகு மற்றும் 3.0 கிலோ சமையல் உப்பு சேர்த்து சைலேஜ் தயாரிக்கலாம் .இத்துடன் லாக்டிக் அமிலம் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகளை சேர்ப்பது சிறந்தது.
வெள்ளாடுகளுக்கு புல் மற்றும் கலப்பு தீவனம் அளித்தபொழுது அவை நாள் ஒன்றுக்கு 0.21 கிலோ பாலும் , புல்லுடன் வாகை மர இலைகள் கொண்ட சைலேஜை அளித்த பொழுது பால் உற்பத்தி 0.71 கிலோ என்ற அளவில் அதிகரித்தது.
கிளைரிசிடியா சைலேஜ்
செம்மறிஆட்டு குட்டிகளுக்கு கிளைரிசிடியா சைலேஜ்தீவனம்
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.Also Read:
பகுதி -1பகுதி -2
Comments
Post a Comment