கறவை மாடுகளுக்கு பசும் தீவனத்துடன் மர இலைகளை சேர்த்து அளித்து பால் உற்பத்தியை பெருக்குங்கள்

 



பசும் தீவனங்கள் என்பது பசும் புற்கள் மற்றும் பயறுவகை பசும் தீவனங்கள் மட்டும் அல்ல. மரங்களின் இலைகளும் சிறந்த பசும் தீவனங்கள் ஆகும். தீவன மர  இலைகளில் பொதுவாக புரதம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அதிகமாகவும் நார் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் குறைவாகவும் இருக்கும். மர இலைகள் பொதுவாக புற்களை விட செரிமான தன்மை குறைந்தவை.

மர இலைகளில் டானின் என்ற இரசாயனம் உள்ளது. இது 5% க்கு மேல் இருந்தால் இலைகளின் சுவை ,செரிமானம் போன்றவற்றை குறைத்துவிடும் .ஆனால் டேனின் அளவு 5%  க்கு  குறைவாக இருந்தால் அது இலைகளில் உள்ள புரத சத்தின் ஒரு பகுதியை பைபாஸ் புரதமாக மாற்றும். சில மர இலைகளை மாடுகள் விரும்பி உட்கொள்ளும். சிலவற்றை விரும்பாது.

தீவன மரங்களில் இரண்டுவகைகள் உள்ளன. ஒன்று பயறுவகை தீவன மரங்கள் மற்றொன்று பயறுவகை அல்லாத தீவன மரங்கள்.


பயறுவகை தீவன மரம்

பயறுவகை அல்லாத 
தீவன மரம்

சூபாபுல்

பெருமரம்

கிளைரிசிடியா

பலா

அகத்தி

முருங்கை

வாகை

பூவரசு

கருவேல்

அரசன்

முசுக்கொட்டை

ஆலன்

இலந்தை

மூங்கில்

சித்தகத்தி

வேப்பன்

கல்யாண முருங்கை

ஆச்சான்

மர இலை தீவன சிறப்பு அம்சங்கள்

  • கறவை மாடுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வகைப் பசும் புல் மற்றும் பயறு வகை பசும் தீவனம் கலந்த கலவை நாள் ஒன்றுக்கு 30-35 கிலோ அளவுக்கு அளித்தால் அவை அளிக்கும் ஊட்ட சத்துக்கள் மாட்டின் உடல் எடையை இழக்காமல் செய்யவும் சுமார் 4 -6 கிலோ வரை பால் உற்பத்திக்கும் பயன் படும்
  • பயறுவகை பசும் தீவன குறு மரங்களின் இலைகளின் ஊட்ட சத்துக்கள் ஏறத்தாழ பயறுவகை பசும் தீவனங்களை ஒத்துள்ளன
  • பசும் தீவன குருமரங்கள் மூலம் பெறப்படும் இலைகள் மாடுகளுக்கு தேவையான ஊட்ட சத்தை அளிப்பதுடன் அதிகம் பால் கறக்கும் மாடுகளுக்கு தேவையான பைபாஸ் புரத சத்தையும் அளிக்கும் திறன் கொண்டவை

  • அதிகம் பால் கறக்கும் மாடுகளுக்கு புற்கள், பயறு வகை பசும் தீவனம் மற்றும் பயறு வகை பசும் தீவன மர இலைகள் கொண்ட கலவை சிறந்தது

  • கோடையில் பசும் தீவனம் பற்றாக்குறையாக இருந்தால் அந்த பற்றாக்குறையை மர இலைகள் ஓரளவு சமன் செய்யும்

  • மர இலைகளை உலர வைத்து அவற்றின் ஈரப்பதத்தை 12—15 % வரை குறைத்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொண்டால் கோடையில் தீவனமிடலாம்
  • இந்த உலர்ந்த மர இலைகளை கலப்பு தீவனத்தை ஒரு பகுதியாகவும் அளிக்கலாம்

  • மர இலைகளை பசும் புல்லுடன் சம அளவில் கலந்து தரமான சைலேஜ் தயாரிக்கலாம்

  • பயறுவகை மர இலைகளை வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளுடன் சேர்த்து அளித்தால் வேளாண் கழிவுகள் மாடுகளில் அதிகம் செரித்து பயன் அளிக்கும்

பயறுவகை பசும் தீவன மர இலைகள் Vs பயறுவகை அல்லாத மர இலைகள்

  • பயறுவகை பசும் தீவன மரங்களின் இலைகள் பயறுவகை அல்லாத மர இலைகளை காட்டிலும் புரத சத்து மிக்கவை

  • பயறுவகை பசும் தீவன மரங்களின் இலைகளில் செரிக்கக்கூடிய புரத சத்து அதிகமாக உள்ளது (13.5 Vs 7.6 % )

  • மர இலைகளின் இலைகளின் வளர்ச்சி பருவத்தில் அதில் புரத சத்து அதிகமாகவும் அவை முற்ற முற்ற அந்த சத்து குறைந்தும் இருக்கும்
சில மர இலைகளை மாடுகள் விரும்பி உட்கொள்ளும். சிலவற்றை விரும்பாது.

  • கிளைரிசிடியா இலைகளில் உள்ள” கௌமரின்” என்ற இரசாயனம் வெளியிடும் மோசமான வாசனை காரணமாகவும், வேப்பன் இலைகளில் உள்ள கசப்பு சுவை காரணமாகவும் மாடுகள் இவற்றை விரும்பி உட்கொள்ளாது .அனால் இவற்றை நிழலில்  6—8 மணி நேரம் வாடவைத்தல் மாடுகள் உட்கொள்ளும்

  • மர இலைகளின் மேல்  1 % சமையல் உப்பு கரைசலை தெளித்து தீவனம் இட்டால் உப்பு சுவையின் காரணமாக மாடுகள் உட்கொள்ள ஆரம்பிக்கும்

  • ஒரு பண்ணையில் இயல்பாகவே சில மாடுகள் குறிப்பிட்ட மர இலைகளை உட்கொள்ளும், சில மாடுகள் உட்கொள்ளாது. அந்த இலைகளை உட்கொள்ளும் மாடுகளையும் உட்கொள்ளாத மாடுகளையும் அருகருகே கட்டிவைத்து தீவனமிட்டால், இலைகளை உட்கொள்ளும் மாடுகளை பார்த்து இலைகளை உட்கொள்ளாத மாடுகளும் இலைகளை உட்கொள்ள ஆரம்பிக்கும்

  • கறவை மாடுகளுக்கு பசும் புற்கள் (70%)  மற்றும் பயறு வகை பசும் தீவனத்துடன் (15 %தீவன மர  இலை  (15) கலவையை தினசரி  30-35 கிலோ அளவிற்கு அளித்து தரமான பாலை பெறலாம்.

எழுத்தாளர் பற்றி



பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர், அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

Download Our App Now



Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)