கறவை மாடுகளுக்கு பயறுவகை பசும் தீவனம் அளித்து தீவன செலவை குறையுங்கள்!

 



கறவை மாடுகளுக்கு புரத சத்து மிகவும் தேவையானது . அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் செரிக்க கூடிய புரத சத்தும் எரிச்சத்தும் மிக சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். 

மாடுகள் தங்கள் உடல் எடையை இழக்காமல் இருக்க தினசரி 230 கிராமும் அவை சுரக்கும்  4% கொழுப்பு சத்து கொண்ட ஒவ்வொரு கிலோ பாலுக்கும் 45 கிராமும் செரிக்க கூடிய புரத சத்து தேவைப்படுகின்றது.

மாடுகள் தங்களின் புரத சத்தின் தேவையை பெருமளவு பிண்ணாக்கு  மற்றும் தவிடின் மூலமும் சிறிதளவு தேவையை புற்கள் மூலமும் பெறுகின்றன 
பிண்ணாக்கு மற்றும் தவிடின் விலை அதிகமாக உள்ளதால் அவற்றிற்கு மாற்றாக பயறுவகை பசும் தீவங்களை அளித்து மாடுகளின் புரத சத்து தேவையை குறைந்த செலவில் ஈடு செய்யலாம்.

கறவை மாடுகளில் பால் உற்பத்திக்கு கலப்பு தீவனம் அளிக்கப்பட்டு பண்ணையம் செய்தல் பால் உற்பத்திக்கான தீவன செலவு 65 - 80% என்ற அளவிலும்   அதே சமயம் பயறுவகை பசும் தீவனத்தை சேர்த்து அளித்தால் தீவன செலவு 40% என்ற அளவாக குறையும்.

பயறுவகை பசும் தீவனங்கள் காற்றில் உள்ள தழை சத்தை கிரகித்து தங்கள் வேரில் உள்ள வேர் முடிச்சு  மூலம் மண்ணில் நிலை நிறுத்துவதால் இவற்றில் புரத சத்து நிரம்பி இருக்கும் . அதுமட்டுமின்றி மண்ணில் நிலை நிறுத்தப்படும் தழை சத்து இப்பயிர்கள் சாகுபடி செய்யப்படும் மண்ணின் தன்மையையும் அதிகரிக்கும்.

பசும் புல்லுடன் ஒப்பிட்டால் பயறுவகை பசும் தீவனங்களில் புரத சத்து அதிகமாகவும்  (7-8% Vs19-20% ) நார் சத்து குறைவாகவும், அந்த நார் சத்தில் உள்ள  NDF என்ற நார் வகை குறைவாகவும் (73-75 Vs 49-50% ), தண்டுக்கும் இலைகளுக்கும் உள்ள விகிதம் அதிகமாகவும்   உள்ளது.

பயறுவகை பசும் தீவனத்தில் புற்களை விட பால் உற்பத்திக்கு தேவையான பைபாஸ் புரத சத்து அதிகமாகவும்  ( 71 Vs 58% ) உள்ளது.

மாடுகளில் பயறுவகை பசும் தீவனம் சுமார்  63%அளவும் புற்கள் 47% அளவும்  செரிக்கப்படுகின்றது . பயறுவகை பசும் தீவனத்தில் புற்களை விட செரிக்க கூடிய  புரத சத்தும் ( 14-15  Vs  4-4.5% ) மொத்த செரிமான ஊட்ட சத்துக்களும் ( 56 Vs 49 % ) அதிகமாக  உள்ளன.

பொதுவாக பயறுவகை பசும் தீவன புரத சத்தில்  கந்தக சத்து கொண்ட அமினோ அமிலங்கள் குறைவாக இருக்கும். அதே போல பயறுவகை பசும் தீவனத்தில் பாஸ்பரஸ் சத்தும் குறைவாக உள்ளது.

அதனால் பயறுவகை பசும் தீவனங்களை அளிக்கும் பொழுது கந்தக சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்ட தீவனங்களையும்  சேர்த்து அளிப்பது நல்லது.

கந்தக சத்து அதிகம் உள்ள தீவனங்கள்:

மக்கா சோள தவிடு ,மக்கா சோள குளூட்டன் , மதுபான ஆலை கழிவு, சோயா மொச்சை, சோயா மொச்சை பிண்ணாக்கு, சூரிய காந்தி பிண்ணாக்கு.

பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ள தீவனங்கள்:

மக்கா சோளம் ,சோளம், கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்கள் மற்றும் கோதுமை தவிடு புற்களுடன் ஒப்பிட்டால் பயறுவகை பசும் தீவனங்களில் தீவன தரம் (Relative Feed Quality) அதிகமாக உள்ளது. கறவை மாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புல் வகைகளையும் பயறுவகை பசும் தீவனங்களையும் 65:35 என்ற விகிதத்தில் கலந்து தீவனம் இட வேண்டும். வேலிமசால், தீவன காராமணி ,சணப்பு, முயல் மசால் ,கலப்பகோனியம்  போன்ற பயறுவகை பசும் தீவனங்களை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.

வேலிமசால்:
  • புரத சத்து  44-50%வரை செரிக்க கூடியது இதில் செரிக்கக்கூடிய புரத சத்து 10.80 மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள்  59.80 வரை உள்ளன வரையும்.
  • இதை பாசனத்துடன் சாகுபடி செய்தால்ஏக்கருக்கு ஆறு முறைகள் அறுவடை செய்து சுமார் 40 டன் பசும் தீவன மகசூல் பெறலாம்.
  • கலப்புதீவனம் இன்றி புல் மட்டுமே அளித்து வளர்க்கப்படும் மாடுகளுக்கு  நன்கு உலர்ந்த வேலிமசால் இலைகளை தினசரி 3 கிலோ அளவுக்கு அளித்தால்  பால் உற்பத்தி அதிகமாகும்.
  • வெள்ளாடுகளுக்கான கலப்பு தீவனத்தில் பாதிஅளவுக்கு உலர்ந்த வேலிமசால் இலைகளை தீவனமாக அளித்தால் வளர்ச்சி குறையாது இதன் மூலம் கலப்பு தீவன செலவை பாதியாக குறைக்கலாம்.

பசும் தீவன காராமணி:

  • பசும் தீவன காராமணி புரத சத்து  (20-25%)மிக்க சிறந்த தீவனம். இந்த புரதம் 86% வரை செரிக்கும். இதில் செரிக்கக்கூடிய புரதம் 20% மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 53% உள்ளன. இதில் நார் சத்து மிக குறை வாகவும். சுண்ணாம்பு சத்து  அதிகமாகவும்  (1.40%)பாஸ்பரஸ் சத்து குறைவாகவும் (0.35%) உள்ளது.
  • தீவன காராமணியை அது பிஞ்சு விடும் தருணத்திலேயே அறுவடை செய்ய வேண்டும் .இதை கலப்பு தீவனம் அளிக்கப்படாத மாடுகளுக்கு அளித்தால் சுமார்  6-7 கிலோ வரை பால் உற்பத்தி கிடைக்கும்.
  • காராமணியை அறுவடை செய்யப்பட்ட பின் கிடைக்கும் உலர வைக்கப்பட்ட செடியில் புரத சத்து  10-26% வரை உள்ளது.
  • உலர்ந்த காராமணி செடி கழிவுடன் கோதுமை தவிடு கலந்த தீவனத்தை ஆடுகளுக்கு அளித்தால் ஆடுகளில் கூடுதல் வளர்ச்சி பெறலாம்.

சணப்பு:

சணப்பு புரத சத்து மிக்க பயறு வகை பசும் தீவனம்.இது நன்கு முற்றினால் பசுந்தாள் உரமாக பயன்படும்.ஆனால் சற்று இளசாக இருக்கும்பொழுது அறுவடை செய்யப்பட்டால் அது நல்ல தீவனமாக பயன்படும்.இதன் இலைகளில் இதன் இலைகளில் புரத சத்து  25%, NDF என்ற நார்  22 -27% உள்ளன.தண்டு பகுதியில் புரத சத்து  8-10% உள்ளது.  

கலப்பகோனியம்:


கலப்பகோனியம் முகாய்டஸ் (Calopogonium mucunoides) என்பது பயறுவகையை சார்ந்த படரும் தன்மை கொண்ட சுமார்  16 -24% புரத சத்து கொண்டது. இது பொதுவாக பசுந்தாள் உரமாக தான் பயன் படுத்தப்படுகின்றது. ஆனால் இதை வாடவைத்து பயன்படுத்தினால் மாட்டு தீவனமாக பயன்படுத்தலாம்.

இதன் இலைகள் சுமார் 58% வரை செரிக்கக்கூடியது. இதன் இலைகளை வாடவைத்து புற்களுடன் சேர்த்து மாடுகளுக்கு தீவனமிட வேண்டும். இது பொதுவாக சுமார் 20% வரை நிழலை தங்கி வளரும் தன்மை கொண்டது. அதனால் சுமார் 25-30 வயதிற்கு மேல் வயது கொண்ட தென்னை தோப்புகளில் பயிரிட இது ஏற்றது.

முயல் மசால்:

முயல் மசாலா புரத சத்து மிக்க பயறுவகை பசும் தீவனம் இதை மானாவாரி மற்றும் ஏறவையில் சாகுபடி செய்யலாம் மேய்ச்சல் நிலங்களின் தரத்தை மேம்படுத்த இதை கொளுக்கட்டை புல்லுடன் இணைக்க வேண்டும்.

முயல் மசாலாவில் உள்ள சத்துக்கள் 

முயல் மசாலா

புரதம்

நார்

கரையும் மாவு சத்து

எமாட்டா

13.13

20.00

50.87

ஸ்கேப்ரா

14.00

22.00

24.00

கைனென்சிஸ்

14.23

12.00

56.00



அருகம்   புல்லுடன் முயல் மசாலாவை சேர்த்தால்…


விபரம்

அருகம் புல் + ஸ்கேப்ரா 

அருகம் புல் + கைனென்சிஸ்

அருகம் புல்+ எமாட்டா

மொத்த செரிமானம்

69.53

71.82

65.10

புரத செரிமானம்

68.90

71.80

68.55

நார் செரிமானம்

69.42

70.79

63.16



அருகம் புல் போன்ற தரம் குறைந்த புற்களுடன்  சேர்த்து அளிக்க பிற முயல் மசாலா வகைகளை விட  கைனென்சிஸ் வகை சிறந்தது. 


எமாட்டா:


ஆடுகளுக்கு கொளுக்கட்டை புல்லை அளிப்பதுடன் கூடவே முயல் மசாலா ஏமாட்டா முயல் மசாலாவை சேர்த்து  (3:1)அளித்தால் வளர்ச்சி அதிகரிக்கும். இத்துடன் தீவன மர  இலைகளையும் சேர்த்து அளிப்பது சிறந்தது.

கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் கலப்பு தீவனத்தில் 25% அளவுக்கு பதில் உலர்ந்த முயல் மசாலா எமாட்டா இலைகளைசேர்த்து அளித்தால் பால் உற்பத்தி அளவிலோ அல்லது பாலின் தரத்திலோ எந்த மாறுதலும் ஏற்படாது இதன் மூலம் தீவன செலவை குறைக்கலாம் மக்க சோள பயிறுடன் முயல் மசாலா எமாட்டாவை சேர்த்து அளித்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்
வைக்கோலுடன் முயல் மசாலாவை சேர்த்து அளித்தால் வைக்கோலின் செரிமானமும் பயன்பாடும் அதிகரிக்கும். 

மேயும் ஆட்டுக்குட்டிகளை கூடுதலாக முயல் மசாலாவை சேர்த்து அளித்தால் ஆடுகளின் வளர்ச்சி குறிப்பிடும் அளவுக்கு அதிகரிக்கும்.

ஸ்கேப்ரா:


இதில் சோடியம் சத்து அதிகமாகவும் பாஸ்பரஸ் சத்து குறைந்தும் உள்ளது.இதை மாடுகளுக்கு அளிக்கும் சமயம் பாஸ்பரஸ் சதை சற்று அதிகமாக அளிக்க வேண்டும்.மேயும் கறவை மாடுகளுக்கு கூடுதலாக உலர வைத்து பொடி செய்யப்பட்ட முயல் மசாலா ஸ்கேப்ராவை 3.0 கிலோ அளவுக்கு அளித்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.


சத்துக்கள்பயறுவகைபசும் தீவனங்கள்பசும்புல் தீவனங்கள்
புரத சத்துஅதிகம் ( 19-20% )குறைவு ( 7- 8 %)
நார் சத்துகுறைவுஅதிகம்
NDF நார்குறைவு (49-50% )அதிகம் (73 -74 % )
NDFல் உள்ள லிக்னின்அதிகம் ( 16.8 % )குறைவு ( 8.4 )
இலைகள்அதிகம்குறைவு
மொத்த மாவு சத்துகுறைவு(70%)அதிகம் (81% )
கரையும் மாவு சத்துஅதிகம் (25%)குறைவு (10%)
நாரில் இருக்கும் மாவு சத்துகுறைவு (45%)அதிகம் (71%)
கரையும் மாவு சத்தில் உள்ள ஸ்டார்ச்குறைவு ( 60% )அதிகம் ( 83% )
சத்துக்கள்பயறுவகைபசும் தீவனங்கள்பசும்புல் தீவனங்கள்
கரைய கூடிய புரத சத்துசற்று குறைவு ( 26% )சற்று அதிகம் ( 30%)
முதல் வயிற்றில் செரிக்கப்படும் புரத சத்துகுறைவு ( 29% )அதிகம் (42% )
பைபாஸ் புரதம்அதிகம் ( 71 % )குறைவு ( 58% )
லைசின் அமினோ அமிலம்0.38%0.89%
புரத சத்தின் செரிமானம்அதிகம் ( 77% )குறைவு ( 57% )
NDF நாரின் செரிமானம்அதிகம் ( 64% )குறைவு ( 53% )
மொத்த செரிமானம்அதிகம் அதிகம் ( 63 % )குறைவு ( 47 % )
சத்துக்கள்பயறுவகைபசும் தீவனங்கள்பசும்புல் தீவனங்கள்
மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள்அதிகம் ( 56% )குறைவு ( 49 % )
செரிக்கக்கூடிய எரிச்சத்து
(MCal/kg)
சம அளவில் (2.04)சம அளவில்
(2.21)
சுண்ணாம்பு சத்து( %)குறைவு (0.47)அதிகம் (1.21)
மெக்னீசியம் சத்து (%)குறைவு( 0.18)அதிகம் (0.27)
பொட்டாசியம் சத்து ((%)குறைவு (1.97)அதிகம் (2.38)
தீவன தரம் (Relative Feed Quality )அதிகம் (114% )அதிகம் ( 69% )


எழுத்தாளர் பற்றி



 பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர்,       கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர், அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)