கறவை மாடுகளுக்கு பசும் தீவனத்துடன் மர இலைகளை சேர்த்து அளித்து பால் உற்பத்தியை பெருக்குங்கள்- பகுதி -2
பயறுவகை பசும் தீவன மர இலைகள்:
- பயறுவகை பசும் தீவன மரங்களின் இலைகள் புரத சத்து மிக்கவை
- இவ்விலைகளில் செரிக்கக்கூடிய புரத சத்து அதிகமாக உள்ளது
- மரங்களின் இலைகளில் நார் சத்து மற்றும் பாஸ்பரஸ் குறைவாகவும், சுண்ணாம்பு சத்து சத்து அதிகமாகவும் உள்ளன
- மர இலைகளின் இலைகளின் வளர்ச்சி பருவத்தில் புரத சத்து அதிகமாகவும் அவை முற்ற முற்ற அந்த சத்து குறைந்தும் இருக்கும்
- பயறுவகை பசும் தீவனங்களை போலவே பயறு வகை பசும் தீவன மர இலைகளை வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளுடன் சேர்த்து அளித்தால் வைக்கோலின் செரிமான தன்மை அதிகரிக்கும்
சில பயறு வகை பசும் தீவன மரங்களை பற்றிய குறிப்புக்கள்:
முருங்கை:
- முருங்கை இலையும்களில் ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமாக உயிர் சத்து .C ,கேரட்டை விட10 மடங்கு அதிகமாக உயிர் சத்து A , பாலை விட 17 மடங்கு அதிகமாக சுண்ணாம்பு சத்து , வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிகமாக பொட்டாசியம் சத்து ,கீரையை விட 25 மடங்கு அதிகமாக இரும்பு சத்து உள்ளது . இதில் பால் மடியில் வளர்ச்சி மற்றும் சினை சுழற்சியை ஏற்படுத்தும் காரணிகளும் உள்ளன
- முருங்கை இலைகளில் உலர்ப்பொருள் அளவீட்டில் புரத சத்து 15 % முதல் 30% வரை உள்ளது. நன்கு உலர வைத்து பொடியாக்கப்பட்ட முருங்கை இலையை கன்றுகளுக்கான ஆரம்பகால கலப்பு தீவனம்100 கிராமிற்கு பதிலாக 90 கிராம் ஆரம்ப கால தீவனமும்,உலர வைத்து பொடிசெய்யப்பட்ட முருங்கை இல்லை 100 கிராமும் அளிப்பதால் கன்றின் வளர்ச்சி குறையாது
- நாளொன்றுக்குபிற தீவனங்களுடன் 1.25 கிலோ பருத்தி பிண்ணாக்கு அளிக்கப்பட்ட மாடு எந்த அளவிற்கு பால் கொடுக்குமோ அதே அளவு பாலை பருத்தி பிண்ணாக்கிற்கு பதில் 1.75 கிலோ உலர்ந்த முருங்கை இலை அளிப்பதால் பெற முடியும்
- வெள்ளாடுகளுக்கு அளிக்கப்படும் மொத்த தீவனத்தில் 25%அளவு அதாவது ஒரு வெள்ளாடு நாள் ஒன்றுக்கு சுமார் 6 கிலோ புல் உட்கொண்டால் அதற்கு பதில் 4.5 கிலோ புல்லும்1.5 கிலோ முருங்கை இலையும் அளித்தால் ஆட்டின் வளர்ச்சி அதிகரிப்பதுடன் பாலின் தரமும் அதிகரிக்கும்
- பசும் முருங்கை இலைகளை கறவை மாட்டுக்கு அளித்தால் அதன் பாலில் ஒருவித நெடி உண்டாகும் என்று சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆனால் முருங்கை இலையை சைலேஜ் செய்து தீவனம் இட்டால் பாலில் இந்த நெடி வருவதில்லை. மாடுகளுக்கு பால் கறப்பதற்கு முன்பு பசும் முருங்கை இலைகளை தீவனம் இடாமல் பால் கறந்த பின்பு தீவனம் இட்டால் இந்த பிரச்சனையை தவிர்க்க முடியும் என்பது வல்லுனர்களின் அறிவுறுத்தலாகும்.
சூபாபுல்:
சூபாபுல் புரத சத்து மிக்க பயறு வகை பசும் தீவன மரம். சூபாபுல் இலைகளில் புரத சத்து சுமார்24-30%வரை உள்ளது. சூபாபுல் இலைகள் மாடுகளில் 63% வரை செரிக்க கூடியவை இதில் உள்ள புரதம் 60-70%வரை செரிக்கப்படுகின்றதுஇதன் இலைகளில் தாது சத்துக்கள் குறிப்பாக கந்தக சத்து நிறைந்துள்ளது. இந்த கந்தக சத்து மாடுகளின் முதல் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் சிறந்த புரதத்தை உருவாக்க மிகவும் அவசியம்
- இதன் புரத சத்தில் புற்களை விட கூடுதலாக பைபாஸ் புரதமும் உள்ளதால் இது மாடுகளுக்கு நல்ல புரத சத்து தீவனமாக பயன் படுத்தப்படுகின்றது
- சூபாபுல் இலைகள் நல்ல புரத சத்து கொண்ட தீவனமாக குறிப்பாக வேளாண் கழிவுகளுடன் இணைத்து அளிக்க மிகவும் சிறந்ததாக கருதப்படுகின்றது
- இதில் உள்ள புரதம் குதிரை மசாலா தீவனத்தில் இருக்கும் புரதத்தின் தன்மையை ஓரளவு ஒத்துள்ளது இந்த புறத்தில் உள்ள அமினோ அமிலங்கள் சோயா மொச்சையை ஒத்துள்ளன
- வளரும் மாடுகளுக்கு இதை தீவனமாக அளித்தால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏறத்தாழ பருத்தி பிண்ணாக்கை ஒத்துள்ளன'
- கறவை மாடுகளின் பசும் தீவனத்தில் சூபாபுல் இலைகள் 10%வரை சேர்த்து அளித்தால் பால் உற்பத்தி 14 - 20% அதிகரிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது
- மேயும் கலப்பின மாடுகளுக்கு கூடுதலாக கலப்பு தீவனம் அல்லது அமோனியா மூலம் செறிவூட்டப்பட்ட வைக்கோல் அளித்தபொழுது அவை உற்பத்தி செய்த பாலை விட மேய்ச்சலுடன் சூபாபுல் இலைகள் அளித்து பராமரிக்கப்பட்ட மாடுகள் அதிக கொழுப்பு சத்து கொண்ட பாலை அளித்தனஎன்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது
- கலப்பு தீவனமும், மக்கா சோள சைலே ஜூம் கொடுத்து வளர்க்கப்பட்ட செம்மறி ஆடுகளுக்கு முறையே மலை வேம்பு அல்லது சூபாபுல் அல்லது பலா மர இலைகள் அளிக்கப்பட்டதில் சூபாபுல் இலைகள் அளிக்கப்பட்ட ஆடுகள் நல்ல வளர்ச்சி அடைந்ததாகவும் இந்த இலைகள் கொண்ட தீவனம் கூடுதலாக தீவனத்தை வளர்ச்சியாக மாற்றும் திறன் கொண்டிருந்ததாகவும் ஒரு ஆய்வில் அறியப்பட்டது
- வளரும் ஆடு மற்றும் மாடுகளுக்கு அளிக்கப்படும் மொத்த பசும் தீவனங்களில் சூபாபுல் இலைகள் சுமார் 40 %வரை அளிக்கப்படலாம் அதாவது மாடுகளுக்கு 10 கிலோ பசும் தீவனம் அளிக்கப்பட்டால் அதில் 4 கிலோ வரை சூபாபுல் இலைகள் சேர்க்கலாம்
- இருப்பினும் பசும் சூபாபுல் இலைகளை தேவைக்கு மேல் மாடுகளுக்கு அளித்தால் இனப்பெருக்க பிரச்சனைகள் ஏற்படும் எலாம் கன்றுகளுக்கு தேவைக்கு மேல் அளித்தால் இளம் காய்ட்டர் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்
சூபாபுல் மற்றும் குதிரை மசால் ஒரு ஒப்பீடு:
கிளைரிசிடியா:
கிளைரிசிடியா இலைகளில் புரத சத்து சுமார் 23%வரை உள்ளது.- கிளைரிசிடியா இலைகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும் இதன் புரதத்தில் கந்தக சத்து கொண்ட அமினோஅமிலங்கள் குறைவாக இருந்தாலும் பால் உற்பத்திக்கு மிகவும் அவசியமான லைசின் அமினோ அமிலம் சற்று கூடுதலாக உள்ளது
- கிளைரிசிடியா இலைகளை சுமார் 6-8 மணி நேரம் நிழலில் வாடவைத்து தான் மாடுகளுக்கு தீவனம் இடவேண்டும்
- மாடுகளுக்கு சூபாபுல் இலைகளை மட்டும் தீவனமாக அளிக்காமல் சூபாபுல் இலைகளையும் வடவைத்த கிளைரிசிடியா இலைகளையும் சம அளவில் கலந்து அளிப்பது சிறந்தது
- பசும் கிளைரிசிடியா இலைகள் மாடுகளில் சுமார் 54-57%வரை செரிக்கும் .ஆனால் கிளைரிசிடியா இலைகளுடன் எரிச்சத்தை அளிக்க கூடிய மரவள்ளி கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உலரவைத்து பொடி செய்து சேர்த்து அளித்தால் பசும் இலைகளின் செரிமான அளவு 70 -75 % வரை அதிகரிக்கும்
- செம்மறி ஆடுகளுக்கு அவை உட்கொள்ளும் அளவுக்கு கினியா புல் அளிக்கப்பட்டு கூடுதலாக சுபாபுல் மற்றும் கிளைரிசிடியா இலைகள் சம அளவு கலந்த பசும் தீவனத்தை முறையே 0.800 ,1.60 3.2 கிலோ அளித்து தீவனம் இட்டால் ஆடுகளில் வளர்ச்சி சுமார் 55% வரை அதிகரிக்கும்
- இதை வேளாண் கழிவுகள் அல்லது வைக்கோலுடன் சேர்த்து அளித்தால் மொத்த தீவனத்தின் செரிமான தன்மை அதிகரிக்கும்
- கால்நடைகள் இதை விரும்பி உட்கொள்ள வேண்டுமெனில் இந்த இலைகளை 6-8 மணி நேரம் நிழலில் வாடவைத்து பின் மாடுகளுக்கு சிறிது சிறிதாக அளித்து 3 வாரங்கள் வரை பழக்கப்படுத்த வேண்டும்
- இந்த இலைகளுடன் மர வள்ளி கிழங்கு உலர்ந்த அல்லது நன்கு முற்றிய இலைகளை கலந்து அளித்தால் அந்த கலவையின் செரிமான தன்மை அதிகரிக்கும்
- வைக்கோல் பிரதானமாக அளிக்கப்பட்டு பராமரிக்கப்படும் மாடுகள் தீவனத்தில் 30% வரை அதாவது 11-12 கிலோ அளவுக்கு வாட வைத்த பசும் இலைகளை அளிக்கலாம்
முசுக்கொட்டை:
- முசுக்கொட்டை இலைகள் புரத சத்து மிக்கவை ( 20-24% ) இந்த இலைகள் குறிப்பாக அதிகம் பால் தரும் மாடுகளுக்கு ஏற்றவை. இதை பசுமையாகவோ, சைலேஜ் முறையிலோ அல்லது உலர வைத்தோ மாடுகளுக்கு அளிக்கலாம் .இதை வேளாண் கழிவுகளுடன் சேர்த்து அளித்தால் வேளாண் கழிவுகள் நல்ல முறையில் செரிக்கப்படும்.
- முசுக்கொட்டை குருமரங்கள் 6-8 வார இடைவெளியில் அறுவடை செய்யப்பட்டால் எக்டருக்கு 25-30 டன் வரை பசும் தீவனம் அளிக்கும். இதன் இலைகள் 75 -80%வரை செரிக்க கூடியவை.
குறைந்த அளவு பால் தரும் மாடுகளுக்கு
முசுக்கொட்டை பசும் இலை தீவனம்
அகத்தி:
- அகத்தி இலைகள் அதிக புரத சத்து நிறைந்தவை( 20 -30%)
- கிளைரிசிடியா மற்றும் சுபாபுல்லை விட இதில் நார் சத்து குறைவு
- இதன் இலைகள் மட்டுமின்றி சிறு கிளைகளையும் மாடுகள் விரும்பி உட்கொள்ளும்
- அகத்தி இலைகளை வேளாண் கழிவுகளுடன் சேர்த்து அளித்தால் வேளாண் கழிவுகள் கூடுதலாக செரிக்கப்பட்டு மாடுகளில் உற்பத்தி அதிகரிக்கும்
- ஒரு ஆய்வில் மாடுகளுக்கு கூடுதலாக தினசரி 5 கிலோ அளவு அகத்தி இலைகள் அளிக்கப்பட்ட பொழுது மாடுகளில் பால் உற்பத்தி 8% அதிகரித்தது
- ஒரு ஆய்வில் கலப்பு தீவனம் மற்றும் பசும் தீவனம் அளித்து வளர்க்கப்பட்ட ஜெர்சி கலப்பின கிடாரி கன்றுகள் நாள் ஒன்றுக்கு 416 கிராமும் கூடுதலாக அகத்தி நாள் ஒன்றுக்கு 2.0 கிலோ அளிக்கப்பட்டபொழுது அவை 453 கிராமும் உடல் எடை கூடின
- மற்றொரு ஆய்வில் வைக்கோலுடன் 1.8 கிலோ அகத்தி இலைகள் அளிக்கப்பட்ட பொழுது வளரும் கன்றுகளின் வளர்ச்சி அவற்றிற்கு கலப்புத்தீவனம் அளித்து வளர்ப்பதற்கு ஓத்திருந்தது
- கறவை மாடுகளின் மொத்த தீவனத்தில் 30% அளவுக்கு மிகாமல் அகத்தி இலைகளை மாடுகளின் தீவனத்தில் சேர்க்கலாம் .அதாவது சுமார்300 -350 கிலோ எடை கொண்ட மாட்டிற்கு 10-12 கிலோ வரை அகத்தி இலைகளை அளிக்கலாம்
- சுபாபுல்லுடன் ஒப்பிடும் பொழுது அகத்தி இலைகள் அதிக ஊட்டச்சத்து கொண்டதாகவும் மாடுகளுக்கு அதிக சுவை கொண்டதாகவும் உள்ளது
சித்தகத்தி:
- சித்தகத்தி இலைகளில் புரத சத்து சுமார் 16%வரை உள்ளது . இதில் நார் சத்து19% மும் , NDF என்ற நார் சத்து மொத்த நார் சத்தில்25% வரை உள்ளது
- அகத்தி இலைகளின் செரிமானத்தை ( 67% ) விட சித்தகத்தி இலைகள் கூடுதல் செரிமானம் ( 75 % ) செரிமானம் கொண்டுள்ளன.
- ஒரு ஆய்வில் ஆடுகளுக்கு கலப்பு தீவனத்துடன் சத்து மிக்க குதிரை மசாலா இலைகள் அல்லது சித்தகத்தி இலைகளை அளித்தபொழுது மொத்த தீவனத்தில் இருக்க கூடிய செரிக்கக்கூடிய புரத சத்திலோ(12.5 Vs12.6% )அல்லது மொத்த செரிமான ஊட்ட சத்திலோ எந்தவித மாற்றமும் இருக்கவில்லை ( 79 Vs 80 % )
- வைக்கோலுடன் 30% அளவுக்கு உலர்ந்த சித்தகத்தி இலைகளை சேர்த்து அளித்தப்பொழுது வெள்ளாடுகளின் வளர்ச்சி அதிகரித்தது என பதிவு செய்யப்பட்டுள்ளது
- பொதுவாக வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளுடன் அகத்தி அல்லது சித்தகத்தி இலைகளை சேர்த்து அளிப்பது தான் சிறந்தது
கல்யாணமுருங்கை:
- கல்யாணமுருங்கை இலைகளில் புரத சத்து சுமார் 23 %வரை உள்ளது . இதில் நார் சத்து18% மும் , NDF என்ற நார் சத்து மொத்த நார் சத்தில்44% வரை உள்ளது
- பிற பயறு வகை தீவன மர இலைகளை விட கல்யாணமுருங்கை இலைகளில் நார் சத்து சற்று அதிகம் உள்ளது
- கல்யாண முருங்கை இலைகளை மாடுகளுக்கு தீவனமாக அளித்தால் கூடவே முதல் வயிற்றில் செரிக்க கூடிய எரிச்சத்து மிக்க தீவனங்களான தானியங்களை அளிக்கவேண்டியது மிக அவசியம்
எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

Comments
Post a Comment