மாடுகளுக்கு அளிக்கப்படும் எள்ளு பிண்ணாக்கு பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்.
எள்ளு பிண்ணாக்கு புரத சத்து நிறைந்த தீவனம் இதில் 32% முதல் 53% வரை புரத சத்து உள்ளது எண்ணைவித்திலிருந்து எண்ணையை பிரித்தெடுக்கும் முறையை பொறுத்து இந்த பிண்ணக்ககில் புரத சத்து ( 32 % -53% )மற்றும் எரிச்சத்தின் அளவுகள் (5-20%) மாறுபடும் செக்கில் ஆட்டப்படும் பிண்ணாக்கில் ( Expeller method ) மாடுகளுக்கு எரிச்சத்தை அளிக்கும் எண்ணை பசையின் அளவு அதிகமாகவும் இரசாயனம் மூலம் எண்ணை பிரித்தெடுக்கப்பட்ட (Solvant Extraction) பிண்ணாக்கில் எண்ணை பசை குறைவாகவும் இருக்கும் மற்ற பிண்ணாக்குகளை விட எள்ளு பிண்ணாக்கில் நார்ச்சத்து ( 4-12% ) குறைவாகவே உள்ளது பொதுவாகவே கடலைப்பிண்ணாக்கு மற்றும் சூரியகாந்தி பிண்ணாக்குகளில் மாடுகளில்பால் உற்பத்திக்கு மிகவும் தேவையான லைசின் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்கள் வெகுவாக குறைந்திருக்கும் எள்ளு பிண்ணாக்கில் லைசின் அளவு சற்றே குறைவாகவும் மெத்தியோனின் அளவு சற்று அதிகமாகவும் உள்ளது ஆனால் லூசின் மற்றும் அர்ஜினின் அமினோ அமிலங்கள் நிறைவாகவும் உள்ளன.
எள்ளுபுண்ணாக்கில் பைடிக் அமிலம் ( Phytic Acid )என்ற இரசாயன பொருள் சுமார் 5% உள்ளது இந்த பைடிக் அமிலம் பிண்ணாக்கில் உள்ள சுண்ணாம்பு பாஸ்பரஸ் துத்தநாகம் தாதுக்களுடன் சேர்ந்து அவை கால்நடைகளுக்கு கிடைக்காமல் செய்துவிடுகிறது இதை தவிர எள்ளின் மேல்தோல் நீக்கப்படாமல் தயாரிக்கப்படும் எள்ளுபுண்ணாக்கில் ஆக்சலேட் ( Oxalate ) என்ற இரசாயனம் சுமார் 2.8 % வரை உள்ளது இது இந்த பிண்ணாக்கில் உள்ள சுண்ணம்பு சத்தை மாடுகளுக்கு கூடுதலாக கிடைக்காமல் செய்துவிடும் எனவே எள்ளு பிண்ணாக்கை மட்டுமே புரத சத்திற்காக மாடுகளுக்கு அளித்தால் அம்மாடுகளுக்கு சுண்ணாம்பு சத்தை இதற்கு முந்தய கட்டுரையில் அறிவுறுத்தப்பட்ட முறையில் கூடுதலாக அளித்து பராமரிக்க வேண்டும்.
மாடுகளின் கலப்பு தீவனத்தில் உள்ள சோயா பிண்ணாக்கை சுமார் 40 % சதவீதம் வரை குறைத்து அதற்கு பதில் எள்ளு பிண்ணாக்கை சேர்ப்பதால் மாடுகள் அளிக்கும் பாலின் அளவிலோ அல்லது பாலில் உள்ள சத்துக்களின் அளவிலோ எந்தவித வேறுபாடும் காணப்படவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது.
எள்ளுபுண்ணாக்கில் உள்ள புரதம் சராசரியாக சுமார் 76% மாடுகளின் முதல் வயிற்றில் கரைந்து செரிமானமாகும் தன்மை (Rumen Degradable Protein ) கொண்டது செக்கில் ஆட்டப்பட்ட கடலை பிண்ணாக்கில் Rumen Degradable Protein அளவு 70% வரையும்இரசாயனம் மூலம் தயாரிக்கப்பட்ட கடலை பிண்ணாக்கில் இந்த Rumen Degradable Protein அளவு 80% வரை உள்ளது.
எள்ளு எண்ணெய் வித்துக்களின் மேல் உள்ள கருநிற தோலை நீக்கியபின் எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டால் அந்த பிண்ணாக்கு வெண்மை நிறத்திலும் தோலை நீக்காமல் பிண்ணாக்கு தயாரிக்கப்பட்டால் அந்த பிண்ணாக்கு கருமை நிறத்திலும் இருக்கும் கருப்பு நிற பிண்ணாக்கை விட வெண்மை நிற பிண்ணாக்கு சத்து நிறைந்தது.
எள்ளு பிண்ணாக்கை உட்கொள்ளுவதால் மாடுகள் இளகிய சாணம் இடும் மலச்சிக்கல் வராது எள்ளு பிண்ணாக்கை தேவைக்கு அதிகமாக மாடுகளுக்கு அளித்தால் அம்மாடுகளின் பாலில் ஒருவித நெடி இருக்கும்.
முடிவாக பால் தரும் மாடுகளின் தீவனத்தில் எள்ளு பிண்ணாக்கை 15% வரை சேர்க்கலாம் மாடுகளுக்கு எள்ளு பிண்ணாக்கை அளிக்கும் பொழுது சுண்ணாம்பு சத்தை கூடுதலாக அளிக்கவேண்டும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
சினைமாடுகளுக்கு எள்ளு பிண்ணாக்கு அளிப்பதால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது அல்லவா ஐயா?
ReplyDeleteநன்றி!
சிறை மாடுகளுக்கு எள்ளு பிண்ணாக்கு கொ டுக்கலாமா dr?
Delete