மாடுகளில் பால் மடி வீக்கத்தை தவிர்த்து இலாபத்தை அதிகரியுங்கள்
மாடுகளில் பால் மடி வீக்கத்தை தவிர்த்து இலாபத்தை அதிகரியுங்கள்
முனைவர் மு முருகன் PPh.D.,
பேராசிரியர் (ஓய்வு)
தமிழ் நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் சென்னை
கன்று ஈன்ற சில மாடுகளில் பால் மடி வீக்கமடைந்து அவ்வீக்கம் மாடுகளின் வயிறு வரை பரவிஇருக்கும். மாடுகளின் பால் மடி திசுக்களில் திரவங்கள் நிரம்பி இருப்பதே இதற்கு காரணம் . மடியின் மேல் கைபட்டாலே மாடுகளுக்கு வலி உண்டாகும். இதனால் பால் உற்பத்தி குறைவதுடன் மடி நோய் மற்றும் மடி காம்புகளில் காயம் போன்றவை ஏற்படும் .
மடிவீக்கம் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இதுவரை புலப்படவில்லை .மடிவீக்கம். ஏற்படும் சமயம் மடியின் தமனியில் உள்ள தூய இரத்தத்தின் அளவு குறைவாகவும் சிரையில் உள்ள அசுத்த இரத்தத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும். இந்த நிலையை சரியான தீவன மேலாண்மை மூலம் தவிர்க்கலாம்.
மடிவீக்கம் ஏற்பட காரணங்களையும் அதை தவிர்க்க மேற்கொள்ளவேண்டிய மேலாண்மை முறைகளும் :
1. முதல் கன்று ஈனும் வயது அதிகமாக இருப்பது:
- கிடேரி கன்றுகளுக்கு சரியான தீவனம் அளிப்பதன் அளிப்பதன் மூலம் கிடாரிகள் சரியான வயதில் பருவமடைந்து சினை பிடிக்க இயலும்
2. கிடேரிகளில் தீவன மேலாண்மை:
· மடிவீக்கம் பொதுவாக முதல் ஈற்றில் கன்று ஈன்ற கிடாரிகளில் தான் அதிகம் காணப்படுகிறது . மாடுகளின் சினை பருவத்தில் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்
வண்ணம் தீவனம் இடும் காரணத்தால் மடிவீக்கம் ஏற்படுகிறது.
3.தேவைக்கு மேல் தீவனத்தில் எரிச்சத்து சேர்ப்பது:
- கிடேரி மாடுகளுக்கு அவற்றின் முதல் ஈற்றின் பின் சினை பருவத்தில் குறிப்பாக கன்று ஈன 2-3 வாரங்கள் முன்பிருந்து தீவனத்தில் தேவைக்கு அதிகமாக எரிச்சத்து சேர்த்து அளித்தால் கன்று ஈன்ற பின்பு மடிவீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
4. சினை காலங்களில் மாடுகளுக்கு புரதச்சத்து குறைப்பாடு:
- சினை காலங்களில் மாடுகளுக்கு புரதச்சத்து குறைப்பாடு: ஏற்படும் வகையில் தீவனமிட்டாலும் மாடுகளில் மடி வீக்கம் ஏற்படும் .
- மாடுகளின் இரத்தலில் உள்ள மொத்த புரதசத்தின் அளவு மற்றும் அடர்த்தி குறைந்த கொழுப்பின் அளவால் மடிவீக்கம் எற்படுகிறது
- சினை பட்ட மாடுகளில் கடைசி மூன்று மாத சினை பருவத்தில் தான் கன்று வளர்ச்சி வேகமாக இருக்கும். கர்ப்பத்தில் கன்றின் எடை அதிகரித்து அது மாட்டின் முதல் வயிற்றில் மோதுவதால் பசியின் அளவு குறையும் அதே சமயம். மாடுகளில் ஊட்டச்சத்தின் தேவை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் மாடுகளின் உடலில் ஏற்படும் புரதச்சத்தின் குறைபாடு சரிசெய்யப்படவில்லை எனில் அந்த மாட்டிற்கு மடிவீக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது .
- அதனால்
மாடுகளின் கடைசி மூன்று மாத
கர்பகாலத்தில் குறிப்பாக கடைசி மூன்று வாரங்களில் மாடுகளில் ஏற்படும் நிலை மாற்றத்திற்கு ஏற்ப தீவனம் இடல் வேண்டும்.
5.தேவைக்கு மேல் பொட்டாசியம் தாதுக்கள் அளிப்பது:
- கிடேரி மாடுகளுக்கு அவற்றின் முதல் ஈற்றில் பின் சினை பருவத்தில் தீவனத்தில் தேவைக்கு அதிகமாக பொட்டாசியம் அளித்தால் கன்று ஈன்ற பின்பு மடிவீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- மாடுகள் கன்று ஈன மூன்று வாரங்கள் முன்பிருந்து மாடுகளின் மொத்த தீவனத்தில் பொட்டாசியம் தாது அளவு 1.40 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் வண்ணம் தீவனம் தயாரித்து அளிக்க வேண்டும்.
- கன்று ஈன மூன்று வாரங்களில் இருந்து கிடாரிகளுக்கு அதிகப்படியான சோடியம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புக்களை அளிக்கக்கூடாது.
- கன்று ஈன்ற பின்பு பொட்டாசியம் அதிகமான பசும் தீவனங்களை அளிப்பதால் ஏதும் பிரச்சினை வராது ஏன் என்றால் அதிகப்படியாக உட்கொண்ட பொட்டாசியம் பால் வழியாக வெளியேறிவிடும் .
- பயறு வகை பசும் தீவனங்களை விட புல் வகைகள் மண்ணில் இருந்து பொட்டாசியம் சத்தை உறிஞ்சி சேமிப்பதில் அதிக திறனுடையவை . அதனால் மாடுகளுக்கு கடைசி மூன்று வார சினை பருவத்தில் சற்று குறைந்த அளவு பசும் புற்களை அளிக்க வேண்டும்.
- புற்கள் உறிஞ்சிய பொட்டாசியம் சத்து புற்களின் தண்டு பகுதியில் தான் அதிகம் சேமித்து வைக்கப்படுகின்றது .அதனால் இந்த கால கட்டத்தில் தண்டின் அளவை குறைத்து இலைகள் அதிக அளவில் தீவனத்தில சேர்க்கப்படவேண்டும் .
- பொதுவாக நிலத்தை ஒட்டிய முற்றிய தண்டின் பகுதியில் பொட்டாசியம் அளவு குறைவாகவும், மேலே வளரும் இளம் தண்டில் பொட்டாசியம் அளவு அதிகமாகவும் இருக்கும். அதனால் மடிவீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ள மாடுகளுக்கு நன்கு முற்றிய தண்டு கொண்ட புல்லையும், பால் அளிக்கும் மாடுகளுக்கு இலைகளையும் தீவனமாக அளிக்க வேண்டும்.
- விவசாயிகள் தென்னை தோப்பு நிழலில் தீவன புற்களை வளர்க்கின்றனர். இப்படி நிழலில் வளரும் புல்களில் பொட்டாசியம் அளவு அதிகமாக இருக்கும். அதனால் நேரடியான சூரியவெளியில் வளரும் புற்களையும் சேர்த்து அளிக்க வேண்டும்
மாடுகள் கன்று ஈன மூன்று வாரங்கள் முன்பிருந்து மாடுகளின் மொத்த தீவனத்தில் சோடியம் தாது அளவு ௦.15 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் வண்ணம் தீவனம் தயாரித்து அளிக்க வேண்டும்.
6. பாரம்பரியம்:
- மடி வீக்கம் பாரம்பரியமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மாடுகளை வாங்கும் சமயம் கவனம் தேவை . மடிவீக்கம் ஏற்படும் தாய்க்கு பிறந்த கிடாரிகளை வாங்குவது தவிர்க்கப்படல் வேண்டும்.
- அதே போல உங்கள் பண்ணையில் மடிவீக்கம் ஏற்பட்ட கிடேரிக்கு அடுத்த ஈற்றிலும் மடிவீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது
5. 7. பிற மேலாண்மை முறைகள்:
·
கன்று ஈன ஒருவாரம் முன்பிருந்து மாடுகளுக்கு தினசரி 1000 IU அளவிற்கு உயிர்ச்சத்து E ஊசி மூலம் அளிக்கவேண்டும் .
இத்துடன் செலினியம் ,துத்தநாகம் ,தாமிரம், மாங்கனீசு போன்ற தாதுக்கள் தீவனத்தில் இருக்கும் வண்ணம் தினமும் 30-50 கிராம் அளவிற்கு தாது உப்பை தீவனத்தில் சேர்க்க வேண்டும்.
எ எங்கள் சேவையைப் பெற யுவர்பார்ம் செயலியை பதிவிறக்கவும்
Comments
Post a Comment