பால் உற்பத்தியை இயற்கையாக உயர்த்த மரவள்ளி இலை ஒரு சிறந்த தீர்வா?
பசுக்களின் பால் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்க மரவள்ளி இலையை தீவனமாக பயன்படுத்தும் பாதுகாப்பான மற்றும் எளிய முறையை தெரிந்துகொள்ள, யூவர்பார்ம் மருத்துவ குழுவை +91 63837 17150 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். மரவள்ளி இலைகள் – ஒரு நச்சற்ற பசுமை தீவன சக்தி! மரவள்ளி கிழங்கு என்பது தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படும் முக்கிய வேளாண் பயிராகும். இது சேலம், நாமக்கல், விழுப்புரம், தர்மபுரி, கன்னியாகுமாரி, கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சுமார் 1.96 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 38.81 லட்சம் டன் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகிறது. அறுவடையின் போது கிழங்குடன் கூட 9-10 டன் வரை மரவள்ளி இலைகளும் கிடைக்கின்றன. பொதுவாக இலைகள் வயலில் நிராகரிக்கப்படும்; ஆனால் சரியான முறையில் செயல்படுத்தினால், இவை உயர்தர புரதச்சத்து நிறைந்த கால்நடை தீவினமாக பயன்படுத்த முடியும். மரவள்ளி இலை – பசுமை தீவனமாக ஏன் முக்கியம்? மரவள்ளி இலைகளில் உலர்ந்த அடிப்படையில் 16% முதல் 40% வரை புரதச்சத்து உள்ளது. இதில் 72% செரிமானமடையும் புரதம், மற்றும் 8.3% Digestible Crude Protein (DCP) ஜீரணிக...