Posts

கோடையில் வெப்ப அழற்சியையும் பால் உற்பத்தி குறைவையும் தவிர்த்து இலாபத்தை அதிகரியுங்கள்

Image
கோடையில் வெப்ப அழற்சியையும்   பால் உற்பத்தி குறைவையும் தவிர்த்து இலாபத்தை அதிகரியுங்கள் முனைவர் மு முருகன் PhD   பேராசிரியர் ( ஓய்வு ) தமிழ் நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் சென்னை தமிழகத்தில் கோடை ஆரம்பம் ஆகிவிட்டது. சுற்றுப்புறத்தின் வெப்பம் 27 0 C க்கு மேல் இருந்தால் வெப்பத்தின் கடுமையைப் பொறுத்து மாடுகளில் வெப்ப அழற்சியின் தாக்கம் இருக்கும் . வெப்ப அழற்சியின் காரணமாக கலப்பின மாடுகள் அதிகம் குறிப்பாக அதிகம் பல் தரும் மாடுகள் தான் பாதிக்கப்படுகின்றன . . பாதிப்புகளின் கடுமையை குறைக்க கடைபிடிக்க வேண்டிய மேலாண்மை முறைகள் :      வெப்ப அழற்சியின் கடுமையை பொறுத்து கீழ்கண்ட பாதிப்புகள் மாடுகளில் ஏற்படும் : 1. தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல்  2. அதிக அளவில் தண்ணீர் உட்கொள்ளுதல் (30%வரை) 3. உடலின் தோல் மற்றும் சுவாசம் மூலம் அதிக சத்துக்கள் வெளியேறல்  4. இரத்தத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படல்  5. உடலில் வெப்பம் அதிகரித்தல்   6. பால் உற்பத்தி குறைதல் ...

பால் பண்ணை தொழிலில் இலாபம் ஈட்ட பூஞ்சைகள் அற்ற தீவனம் அளியுங்கள்

Image
பூஞ்சைகளால் தாக்கப்படாத தீவனங்களை கறவை மாடுகளுக்கு அளியுங்கள். அதன் மூலம் பூஞ்சைகள் அற்ற தூமையான, தரமான பாலை உங்கள் மாடுகள் உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பாலுக்கு மக்களிடையே தேவை அதிகரிக்கும் அதன் மூலம் உங்களின் இலாபமும் அதிகரிக்கும். தனியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற வேளாண் பயிர்கள் மழை இன்றி வாடும் பொழுது அவை உற்பத்தி செய்யும் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் மேற்பரப்பில் விரிசல் ஏற்படும்.  இந்த விரிசலின் மூலம் சுற்றுச் சூழலில் பரவி கிடைக்கும் பூஞ்சைகள் உட்புகுந்து பல்கிப்பெருகும். அந்த விளைப் பொருட்களில் இருந்து கிடைக்கும் வேளாண் கழிவுகள்/ உபபொருட்ககளான உடைந்த தானியங்கள், தவிடு, பிண்ணாக்கு போன்ற தீவனப்பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்பொழுது அவை கால்நடைகளில் பூஞ்சை நஞ்சை உற்பத்தி செய்து சிக்கல்களை உண்டாக்குகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) அறிக்கையின்படி உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தானியங்களில் சுமார் 25% பூஞ்சைகளால் பாதிப்படைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட தட்ப வெப...

கறவை மாடுகளின் மடி ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பால் பண்ணையை இலாபமாக்குங்கள்

Image
  பால் பண்ணை தொழிலில் இலாபம் ஈட்ட பால் மடியை  பேணிக்காத்து மடி நோயை  தவிருங்கள் கறவை மாடுகளில் மடி நோய் என்பது மாடுகளின் பால் மடியை தாக்கும் நோயாகும். இதனால் மாடுகளின் பால்சுரப்பு குறைந்து விவசாயிகள் நட்டமடைவார்கள். இந்த மடி நோய் என்பது இரு வகைகளில் மாடுகளின் ஏற்படுகின்றது. முதல் வகையில் இது நோய் அறிகுறிகளுடன் காணப்படும் ( Clinical Mastitis ). இரண்டாம் வகையில் அறிகுறிகள் இல்லாமல் காணப்படும் ( Sub- clinical Mastitis ). இந்த முதல் வகை மாடுகளின் அதிக பட்ச பால் கொடுக்கும் காலங்களில் அதாவது பெரும்பாலும் கன்று ஈன்ற முதல் 3 மாத காலங்களில் ஏற்படுகின்றது . இந்த காலகட்டத்தில் மாடுகள் மிக அதிகப்படியான அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த அழற்சி மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைகின்ற காரணத்தால் மாடுகளின் மடி காம்பு வழியே உட்செல்லும் நோய் கிருமிகள் மிக விரைவாக நோயை உண்டாக்கும். மடிகாம்பிலிருந்து பால் வெளிவரும் துளையானது பால் கறக்கப்பட்ட 15-20 நிமிடங்களில் மிக இறுக்கமாக மூடிக்கொள்வதால்   ந...