கோடையில் வெப்ப அழற்சியையும் பால் உற்பத்தி குறைவையும் தவிர்த்து இலாபத்தை அதிகரியுங்கள்
கோடையில்
வெப்ப
அழற்சியையும்
பால் உற்பத்தி குறைவையும் தவிர்த்து இலாபத்தை அதிகரியுங்கள்
முனைவர் மு முருகன் PhD
பேராசிரியர் (ஓய்வு)
தமிழ் நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் சென்னை
தமிழகத்தில் கோடை ஆரம்பம் ஆகிவிட்டது. சுற்றுப்புறத்தின் வெப்பம் 270 C க்கு மேல் இருந்தால் வெப்பத்தின் கடுமையைப் பொறுத்து மாடுகளில் வெப்ப அழற்சியின் தாக்கம் இருக்கும் .வெப்ப அழற்சியின் காரணமாக கலப்பின மாடுகள் அதிகம் குறிப்பாக அதிகம் பல் தரும் மாடுகள் தான் பாதிக்கப்படுகின்றன ..
பாதிப்புகளின் கடுமையை குறைக்க கடைபிடிக்க வேண்டிய மேலாண்மை முறைகள் :
வெப்ப அழற்சியின் கடுமையை பொறுத்து கீழ்கண்ட பாதிப்புகள் மாடுகளில் ஏற்படும் :
1. தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல்
2. அதிக அளவில் தண்ணீர் உட்கொள்ளுதல் (30%வரை)
3. உடலின் தோல் மற்றும் சுவாசம் மூலம் அதிக சத்துக்கள் வெளியேறல்
4. இரத்தத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படல்
5. உடலில் வெப்பம் அதிகரித்தல்
6. பால் உற்பத்தி குறைதல்
7. பாலில் கொழுப்பு மற்றும் SNF ன் ஒரு அங்கமான புரதச்சத்து குறைதல்
8. தீவனத்தை உற்பத்தியாக மாற்றும் திறன் 10-15% குறைவது
9. இனப்பெருக்க குறைபாடு (30%வரை)
பாதிப்புகளின் கடுமையை குறைக்க கடைபிடிக்க வேண்டிய மேலாண்மை முறைகள் :
I ) மாடுகளில் தீவனம் உட்கொள்ளும் அளவு குறையாமல் இருக்க மேலாண்மை செய்வது
- மாடுகளுக்கு ஒரு நாளுக்கு அளிக்கவேண்டிய மொத்த தீவனத்தை 4-5 பங்காக பிரித்து அளிக்கவேண்டும்
- மாலை வேளையில் 7-8 மணிவரையில் தீவனம் அளிக்கவேண்டும்.
- அதிக புரதச்சத்து கொண்ட கலப்பு தீவனத்திற்கு பதில் அதிக எரிச்சத்து மற்றும் மிதமான புரதச்சத்து கொண்ட கலப்பு தீவனம் அளிக்கவேண்டும் . மாடுகளுக்கு கோடையில் எரிசத்தின் தேவை அதிகரிக்கும்
- கலப்புத்தீவனத்தில் எண்ணெய் வித்துக்களை சேர்ப்பதன்மூலம் அதில் எரிச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்
- தீவனத்தில் புரதச்சத்து அதிகமாக இருந்தால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். கோடைக்காலத்தில் அதிக புரதச்சத்துகொண்ட வேலிமசால் முயல் மசால்காராமணி போன்ற பயறு வகை பசும் தீவனங்களை மாடுகளுக்குதேவைக்கு அதிகமாக அளிக்க கூடாது
- கலப்புத்தீவனத்தில் உள்ள புரதச்சத்து 18%க்கும் குறைவாக இருக்கும் வண்ணம் தீவனம் தயாரிக்கப்படல் வேண்டும்
- நீங்கள் அளிக்கும் கலப்பு தீவனத்தில் மாடுகளின் முதல் வயிற்றில் செரிக்கும் புரதச்சத்தின் கரையும் திறன் 60%-க்கும் குறைவாக இருக்கவேண்டும்.
- தினமும் 30-50 கிராம் அளவிற்கு தாது உப்பை தீவனத்தில் சேர்க்க வேண்டும்.
II) குளிர்ந்த நீரை எப்பொழுதும் தண்ணீர் தொட்டியில் நிரப்பி வையுங்கள்
III) உடலின் தோல் மற்றும் சுவாசம் மூலம் அதிக சத்துக்கள் வெளியேறல்
- சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும் சமயம் மாடுகளில் வியர்வை அதிகம் உற்பத்தியாகும். மாடுகளில் நாளொன்றுக்கு ஒரு சதுர மீட்டர் தோல் பரப்பில் 189-522 கிராம் வரை வியர்வை உற்பத்தியாகிறது .ஒரு கிராம்
- அளவு வியர்வை தோல் பரப்பில் இருந்து ஆவியாக சுமார் 590 கலோரி வெப்பம் தேவைப்படுகிறது. கறவை மாடுகள் பொட்டாசியம் சத்தை வியர்வை மூலமாகவும் சோடியம் சத்தை சிறுநீர் மூலமாகவும் அதிக அளவில் வெளியேற்றுகின்றன
- இந்த வெப்ப அழற்சி காலத்தில் மாடுகளுக்கு அவை வெளியேற்றிய பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துக்களை கூடுதலாக தீவனம்மூலம் அளிக்கவேண்டும்
- பயறு வகை பசும் தீவனங்களை விட புல் வகைகள் மண்ணில் இருந்து பொட்டாசியம் சத்தை உறிஞ்சி சேமிப்பதில் அதிக திறனுடையவை . உறிஞ்சிய பொட்டாசியம் சத்து புற்களின் தண்டு பகுதியில் தான் அதிகம் சேமித்து வைக்கப்படுகின்றது பொதுவாக நிலத்தை ஒட்டிய தண்டின் பகுதியில் பொட்டாசியம் அளவு குறைவாகவும் மேலே வளரும் இளம் தண்டில் பொட்டாசியம் அளவு அதிகமாகவும் இருக்கும்..அதனால் இந்த கால கட்டத்தில் இளம் தண்டின் அளவை அதிகரித்து தீவனம் இடவேண்டும்
- நன்கு முற்றிய வேளாண் கழிவுகளான வைக்கோல் போன்றவற்றை அதிகஅளவு மாடுகளுக்கு தீவனமாக அளிக்கக்கூடாது இந்த வேளாண்கழிவுகளை செரிக்கும் சமயம் வயிற்றில் அதிகப்படியான வெப்பம் உண்டாகும் இதனால் மாடுகளில் வெப்ப அழற்சி மேலும் தீவீரமடையும் இதை தவிர்க்க வேளாண் கழிவுகளுடன் ஓரளவாவது நன்கு செரிமானம் கொண்ட பசும் தீவனங்களை அளிக்கவேண்டும்.
- வேளாண் கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தீவனமிடல் வேண்டும்
IV) மாடுகளின் மேல் குளிந்த நீரை தெளிதல்
மாடுகளின் மேல் குளிந்த நீரை தெளிப்பது மற்றும் கொட்டகையின் உள்ளே மின் விசிறிகள் அமைப்பதன் மூலம் வெப்ப அழற்சி குறைவதுடன் பால் உற்பத்தியையும் அதிகரிக்க இயலும்
V) கொட்டகையின் கூரை
ஓடு அல்லது தகரம் வேயப்பட்ட மேற்கூரையின் மேற்புறம் வெண்மை வண்ணமும் உட்புறம் கருமை நிறமும் பூசப்படல் வேண்டும். தொழுவதின் உள்ளே மின்விசிறிகள் மாடுகளின் உயரத்தில் இருந்து 12 அடி உயரத்திலும் சுமார் 20 டிகிரி கோணத்திலும் அமைக்கப்படல் வேண்டும் 36 அங்குல மின்விசிறிகள் 30 அடி இடைவெளியில் அமைக்கப்படல் வேண்டும்.
VI) பிற மேலாண்மை முறைகள்
- வெப்ப அழற்சி கோடையில் ஏற்பட்டால் மாடுகளுக்கு ஈஸ்ட் மாத்திரை மற்றும் உயிர்ச்சத்துக்கள் A,D,E போன்றவை கூடுதலாக தேவைப்படும்
- கொட்டகையை சுற்றிலும் மண் தரையை வெட்ட வெளியாக வைக்க வேண்டாம். புல் வளர ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில் கொட்டகையை சுற்றிலும் வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளை பரப்பி அதன் மேல் தண்ணீர் தெளிக்கவேண்டும்
எங்கள் சேவையைப் பெற எங்கள் செயலியை பதிவிறக்கவும்
V) கொட்டகையின் கூரை
VI) பிற மேலாண்மை முறைகள்
- வெப்ப அழற்சி கோடையில் ஏற்பட்டால் மாடுகளுக்கு ஈஸ்ட் மாத்திரை மற்றும் உயிர்ச்சத்துக்கள் A,D,E போன்றவை கூடுதலாக தேவைப்படும்
- கொட்டகையை சுற்றிலும் மண் தரையை வெட்ட வெளியாக வைக்க வேண்டாம். புல் வளர ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில் கொட்டகையை சுற்றிலும் வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளை பரப்பி அதன் மேல் தண்ணீர் தெளிக்கவேண்டும்
எங்கள் சேவையைப் பெற எங்கள் செயலியை பதிவிறக்கவும்
Super
ReplyDelete