முருங்கை பொடி கொடுத்தால் பாலின் கொழுப்பு சத்து அதிகரிக்குமா?
பசும் முருங்கை இலைகளை உலர வைத்து சேமிக்கலாம்! தயார் செய்யும் முறை முருங்கை இலைகளை சிறு சிறு கிளைகளுடன் வெட்டி அதன் மேல் தண்ணீரை தெளித்து நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பின்பு அடி கிளைகளில் கயிறு கட்டி நிழலான இடத்தில் தொங்க விட்டு உலர்த்த வேண்டும். உலர்ந்த இலைகள் கீழே விழாதவாறு பிளாஸ்டிக் விரிப்பை கட்ட வேண்டும் . சுமார் 3-4 முதல் நாட்களில் இலைகள் முழுமையாக உலர்ந்து விடும். நன்கு உலர்ந்த இலைகளில் இருக்கும் சிறு சிறு இலைக்காம்புகளை நீக்கிவிட்டு பொடியாக அரைத்து ஜல்லடை கொண்டு சலிக்க வேண்டும். பொடி செய்யப்பட்ட முருங்கை இலையை குளிர்ந்த இடத்தில் சூரிய வெளிச்சம் படாமல் சேமித்து வைக்க வேண்டும். சுமார் 10 கிலோ பசும் இலைகளில் இருந்து 1.0 கிலோ உலர்ந்த இலைகளை பெறலாம்.| உலர வைத்து பொடி செய்யப்பட்ட முருங்கை இலைகளை மாடுகளின் தீவனத்தில் சேர்த்தால்: தீவனத்திற்கு நல்ல மணத்தை அளிக்கும். அதனால் மாடுகளில் உமிழ் நீர் மற்றும் செரிமானத்திற்கு தேவையான நொதிகள் அதிகம் சுரந்து செரிமானம் அதிகரிக்கும். மாடுகளின் முதல் வயிற்றில் கார அமிலத் தன்மையை சரியான அளவில் வைத்து பாலில் கொழுப்பு சத்தை சேர்க்கும். அசிட்டிக் கொழ...