தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?



 தேங்காய் பிண்ணாக்கு புரதச்சத்து கொண்ட கால்நடை தீவனம் ஆகும். இதில் புரதம் 25-30%,  நார் 10%, எண்ணெய் 2.5 - 6.5 %, மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 70 - 75% உள்ளன.

 தேங்காய் பிண்ணாக்கில் உள்ள புரதத்தில் சுமார் 50% பைபாஸ் புரதம் உள்ளது

◆ இந்த பைபாஸ் புரதம் சுமார் 90% வரை சிறுகுடலில் செரிக்க கூடியதாக உள்ளது.

◆ உதாரணமாக சுமார் 22 % புரதச்சத்து கொண்ட ஒருகிலோ தேங்காய் பிண்ணாக்கில் 110 கிராம் வரை பைபாஸ் புரதம் இருக்கும். இந்த பைபாஸ் புரதம் சுமார் 100 கிராம் வரை செரிக்கப்படுகின்றது.

◆ இந்த பிண்ணாக்கில் உள்ள 100 கிராம் புரதச்சத்தில் பால் உற்பத்திக்கு அத்தியாவசியமான லைசின் 2.6 கிராம் அளவும் மெத்தியோனின் அமினோ அமிலம் 1.3 கிராமும் உள்ளன.

◆ அதாவது கிலோ தேங்காய் பிண்ணாக்கில் 7.5 கிராம் லைசின் மற்றும் 3.8 கிராம் மெத்தியோனின் உள்ளது.

◆ இந்த பிண்ணாக்கு மாடுகளில் சுமார் 75 - 85% வரை செரிக்கும். தேங்காய் பிண்ணாக்கில் உள்ள புரதத்தின் தன்மை பருத்தி கொட்டை பிண்ணாக்கை விட சிறப்பாக உள்ளது.

◆ இந்த பிண்ணாக்கில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 4830 கிலோ கலோரிகள் உள்ளன. இது மாடுகளில் 74% வரை செரிக்கப்படுகின்றது.

◆ இதில் வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகும் எரிச்சத்து 62%, பால் உற்பத்திக்கு மட்டுமே பயன்படும் எரிச்சத்து 40 % , வளர்ச்சிக்கு உதவும் எரிச்சத்து 39% உள்ளன.






◆ பொதுவாக தேங்காயை செக்கு மூலம் ஆட்டி எண்ணெய் பிரித்தெடுக்கப்படுவதால் இதில் மற்ற பிண்ணாக்குகளை விட அதிக எண்ணெய் ( 20% வரை ) இருக்கும்.

◆ எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. எண்ணெய் பசை காரணமாக கெட்டு விடும்.

◆ இதை கறவை மாடுகளுக்கு அளித்தால் பாலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும். அதன் மூலம் கெட்டியாகவும் இல்லாத மிருதுவாகவும் இல்லாத மிக சரியான பதத்தில் வெண்ணைய் கிடைக்கும்.

.◆ பிற பிண்ணாக்குகளுக்குடன் ஒப்பிட்டால் தேங்காய் பிண்ணாக்கில் இந்த அமினோ அமிலங்களின் அளவு மிக குறைவாக உள்ளது.

◆ பிற பிண்ணாக்குகளை விட தேங்காய் பிண்ணாக்கில் புரதச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

◆ இந்த பிண்ணாக்கில் உள்ள புரதத்தின் தரம் கடலை பிண்ணாக்கு, பருத்தி பிண்ணாக்கு மற்றும் சோயா பிண்ணாக்கை விட குறைவே.

◆ இருப்பினும் நாரில் உள்ள லிக்னின் செரிமானம் அதிகமாக உள்ளதால் இதன் மொத்த செரிமான அளவு பிற பிண்ணாக்குகளை விட அதிகம்.

◆ தேங்காய் பிண்ணாக்கில் செரிக்கக் கூடிய புரதம் 19% மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 70% உள்ளன .

◆ மாடுகள் இந்த பிண்ணாக்கை விரும்பி உட்கொள்ளும். இருந்தாலும் நீண்ட நாட்கள் சேமித்து வைக்கப்பட்ட பிண்ணாக்கு கெட்டுப்போனால் மாடுகள் இதை உட்கொள்ளாது.

◆ ஒரு மாட்டுக்கு தினமும் இதை 1.5 -2.0 கிலோ வரை தீவனமாக அளிக்கலாம்.

◆ ஒரு ஆய்வில் மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்ட மாடுகளுக்கு தினமும் 1.75-2.0 கிலோ தேங்காய் பிண்ணாக்கு அளிக்கப்பட்டபொழுது மாடுகளில் 70% வரை பால் உற்பத்தி அதிகரித்தது.

◆ பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தேங்காய் பிண்ணாக்கு அளித்தால் மாடுகளின் பால் மூலம் கிடைக்கும் வெண்ணையில் மாட்டு கொழுப்பு வாடை வீசும்.

◆ மற்றொரு ஆய்வில் மாடுகளுக்கு நேப்பியர் புல்லுடன் தினமும் 1.25 கிலோ தேங்காய் பிண்ணாக்கு அளித்தபொழுது மாடுகள் 1.0 கிலோ வரை அதிகம் பால் அளித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூஞ்சை:  




முற்றிய தேங்காய் பத்தையை சுமார் 7-8 நாட்கள் வெயிலில் உலரவைத்து செக்கில் ஆட்டி எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால் அதை 3-4 நாட்கள் மட்டுமே உலரவைத்து அதில் உள்ள ஈரப்பதம் 13% மேல் இருந்தாலோ அதில் பூஞ்சை எளிதில் வளரும். குறிப்பாக தேங்காய் பத்தையை அதன் ஓட்டிலிருந்து பிரித்தெடுக்கும் பொழுது ஏற்படும் காயத்துடன் உலர வைக்கப்பட்டால் அதில் பூஞ்சை வளரும்.

பூஞ்சை வளர்வதை தவிர்க்க:

◆ சேதம் அடைந்த தேங்காய் பத்தையை மண் தரையில் உலர வைக்காமல் சுத்தமான விரிப்பின் மேல் உலர வைக்க வேண்டும்.

◆ தேங்காய் பத்தையை நன்கு உலரவைத்து ஈரப்பதத்தை 12% கீழ் குறைத்து நல்ல காற்றோட்டமுள்ள அறையில் சேமிக்க வேண்டும.

◆ தேங்காய் பிண்ணாக்கின் அடர்த்தி குறைவாக உள்ளதால் கலப்பு தீவனம் தயாரிக்கும் பொழுது எளிதில் கலக்க முடியும்

◆ இதன் தண்ணீரை உறிஞ்சி தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மை பிற பிண்ணாக்குகளை விட அதிகம். அதனால் வெல்லப்பாகுடன் எளிதில் கலந்து தீவனம் தயாரிக்க முடியும்.

தேங்காய் எண்ணெய்:




◆ ஒரு ஆய்வில் செம்மறி ஆட்டு குட்டிகளுக்கு பிறந்த 2 வாரம் முதல் 13 வார வயது வரையும், தொடர்ந்து 13 வாரம் முதல் 26 வார வயது வரையும் கலப்பு தீவனத்தில் கிலோவுக்கு கூடுதலாக 50 மிலி, தேங்காய் எண்ணெய் சேர்த்து தீவனம் அளிக்கப்பட்டதால் ஆடுகளின் வளர்ச்சி சுமார் 16-17% வரை அதிகமானது.

◆ மற்றொரு ஆய்வில் வெள்ளாட்டு குட்டிகளுக்கு பிறந்த 10 நாள் வயதிலிருந்து 100 நாட்கள் வயதுவரை தினமும் 6 கிராம் தேங்காய் எண்ணெய் அளிக்கப்பட்டது. 10 நாள் வயது முதல் 70 நாட்கள் வரை வெள்ளாட்டு குட்டிகளின் வளர்ச்சி 50%, 70 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை வளர்ச்சி 14 % வரையும் அதிகரித்தது.

முடிவாக ….

◆ தேங்காய் பிண்ணாக்கில் செரிக்க கூடிய புரதம் 19%

◆ மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள்: 70-75 %

◆ முதல் வயிற்றில் செரிக்க கூடிய புரதம்: 50%

◆ பைபாஸ் புரதம்: 50% உள்ளன.

◆ இதில் உள்ள மொத்த எரிச்சத்தில் வளர்சிதை மாற்றத்திற்க்கும் பயன்படும் எரிச்சத்து 62% பால் உற்பத்திக்கு பயன்படும் எரிச்சத்து 40% உள்ளன.

◆ இதில் உள்ள அதிக எண்ணெய் பசை காரணமாக எளிதில் கெட்டுவிடும் அதனால் மாடுகள் இதை அதிகம் விரும்பாது.

◆ இது பூஞ்சைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு விடும்.

◆ இதை மாடுகளுக்கு தினமும் 1.5 -2.0  கிலோ வரை அளிக்கலாம்.

◆ பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தேங்காய் பிண்ணாக்கு அளித்தால் மாடுகளின் பால் மூலம் கிடைக்கும் வெண்ணையில் மாட்டு கொழுப்பு வாடை வீசும்

◆ 50% தேங்காய் பிண்ணாக்கு + 50% கடலை பிண்ணாக்கு கலந்த கலவையாக இதை தீவனமாக அளிப்பது சிறந்தது.

◆ மாற்றாக 50% தேங்காய் பிண்ணாக்கு + 50% மேலோடு நீக்கப்படாத
எள்ளு பிண்ணாக்கு கலந்த கலவையாக அளிக்கலாம்.

◆ ஆட்டுக்குட்டிகளுக்கு 10 நாள் வயது முதல் 100 நாட்கள் வயது வரை தினமும்
 6 கிராம் தேங்காய் எண்ணெய் அளித்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.

எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

மக்காச்சோள தவிடை தீவனமாக பயன்படுத்தி மாடுகளில் தீவன செலவை குறையுங்கள்  











Comments

Popular posts from this blog

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)