மக்காச்சோள தவிடை தீவனமாக பயன்படுத்தி மாடுகளில் தீவன செலவை குறையுங்கள்
மக்காச்சோள தவிடை தீவனமாக பயன்படுத்தி மாடுகளில் தீவன செலவை குறையுங்கள் ◆ மக்காச்சோளத்தில் இருந்து ஸ்டார்ச் தயாரிப்பதற்காக மக்காச்சோளம் ஊற வைக்கப்பட்டு உடைக்கப்படுகிறது. இச்சமயம் மக்காச்சோளத்தின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் நிற தோல் தனியே பிரிக்கப்பட்டு கழிவாக கிடைக்கிறது. இக்கழிவே மக்காச்சோள தவிடு எனப்படுகிறது. ◆ இக்கழிவை வாங்கி நன்கு காய வைத்து அரைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் இக்கழிவு ஈரப்பதம் நிரம்பிய நிலை மற்றும் நன்கு உலர்ந்த நிலை என்ற இரு நிலைகளிலும் கிடைக்கின்றது ◆ இந்த இரு நிலைகளிலும் கால்நடைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க பெருமளவு வித்தியாசம் இல்லை என்றாலும் உலர்ந்த நிலை தவிடை விட ஈரப்பதம் நிரம்பிய தவிடில் ஊட்டச்சத்துக்களை பால் அல்லது இறைச்சியாக மற்றும் திறன் (Feed Efficiency ) 2% அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ◆ இதில் புரதம் 11.3% , கொழுப்பு 4.7% , நார் 8.6% உள்ளது. இதில் கிலோவுக்கு 4,570 கிலோ கலோரி மொத்த எரிச்சத்து உள்ளது. இந்த எரிச்சத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன...