மரவள்ளி இலைகளை கறவை மாட்டுக்கு அளியுங்கள்
மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு வேளாண்மையில் கழிவாக கிடைக்கும் இலைகள் மரவள்ளி கிழங்கு தோல் கிழங்கில் இருந்து ஸ்டார்ச் பிரித்தெடுக்கும் சமயம் கிடைக்கும் கழிவுகளை கறவை மாடுகளுக்கு தீவனமாக அளித்து பால் உற்பத்திக்கான தீவன செலவை குறையுங்கள்
மரவள்ளி இலைகள்
- மரவள்ளி அறுவடையின் பொழுது இதன் இலைகள் களத்திலேயே விடப்பட்டு மக்கியபின் உரமாக பயன்படுத்தப்படுகின்றன.
- இதன் இலைகளில் ஹைட்ரா சயனிக் அமிலம் என்ற நச்சு இருப்பதால் விவசாயிகள் இதை கால்நடைகளுக்கு பயன்படுத்துவது இல்லை.
- ஆனால் சரியான முறையில் பயன்படுத்தினால் இது மிக சிறந்த புரத சத்து கொண்ட கால்நடை தீவனமாகும்.
அதிக புரதம்
- மரவள்ளியின் இலைகள் மிகுந்த புரத சத்து கொண்டவை. இதில் உலர்ப்பொருள் அடிப்படையில் சுமார் 16 முதல் 40 % புரத சத்து உள்ளது
- இந்த புரத சத்து 72% செரிமானத்தன்மை கொண்டது
- இதில் செரிக்கக்கூடிய புரதம் 8.3 சதமும் மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 65% உள்ளன ..
- இந்த புரத சத்தில் சிறுகுடலில் செரிக்க கூடிய பை - பாஸ் புரதம் பெரும் அளவில் உள்ளது
- அதனால் அதிகம் பல் தரும் மாடுகளுக்கு இந்த இலைகள் நல்ல தீவனம் ஆகும்.
- இதில் சுண்ணாம்பு சத்தும் மிக அதிகமாக உள்ளது இதை கால்நடைகளுக்கு தீவனமாக அளித்தால் மாடுகளில் பால் மூலம் வெளியேறும் சுண்ணாம்பு சத்து இழப்பை ஓரளவு சீர் செய்ய முடியும்
மரவள்ளி பசும் இலைகளை அப்படியே தீவனமாக அளிக்காதீர்
- மரவள்ளி செடியின் கிழங்கு, தண்டு மற்றும் பசும் இலைகளில் ஹைட்ரோ சயனிக் அமிலம் என்ற நச்சு உள்ளது
- இது இனிப்பு சுவை கொண்ட கிழங்கு செடிகளில் சற்று குறைவாகவும் கசப்பு சுவை கொண்ட கிழங்கு செடிகளில் சற்று அதிகமாகவும் இருக்கும்
- கிழங்கை விட இதன் இலைகளில் தான் இந்த நச்சு அதிகம் காணப்படும்
- இளம் இலைகளில் அதிகமாகவும் முற்றிய இலைகள் மற்றும் பழுத்த இலைகளில் குறைந்தும் இந்த நச்சு இருக்கும்.
- இந்த பயிருக்கு சரியாக தண்ணீர் பாசனம் செய்யப்படாமல் இந்த செடி வாடினால் அதில் நச்சின் அளவு அதிகரிக்கும்.
இந்த நச்சின் அளவை குறைக்கும் வழிமுறைகள்
1) பழுத்த இலைகளை பயன்படுத்துவது
2 )நன்கு உலர்ந்த இலைகளை பயன்படுத்துவது
3) சைலேஜ் முறையில் பதப்படுத்தி பயன்படுத்துவது
4) இலைகளை குச்சி தீவனமாக மாற்றி பயன்படுத்துவது
மரவள்ளி இலைகளை உலர வைத்தல்
- மரவள்ளி இலைகளில் சுமார் 75-80% வரை ஈரப்பதம் இருக்கும்
- மரவள்ளி இலைகளை காம்புடன் பிரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் உலரவைத்து அதிலுள்ள ஈரப்பதk 15-- 20 சதவீதமாக குறையும் வரை காயவைக்க வேண்டும்.
- உலர்ந்துகொண்டிருக்கும் மரவள்ளி இலைகளில் உள்ள ஈர்ப்பத்தை அறிய இலைகளை, இரு கைகளிலும், கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்களிடையே வைத்து முறுக்க வேண்டும். அது சடசடவென உடைந்தால் அதிகப்படியாக உலர வைக்கப் பட்டுள்ளன எனவும், விரல்களுக்கு இடையே ஈரப்பசை இருந்தால் மேலும், உலர வைக்க வேண்டும் எனவும் அறிந்து கொள்ளலாம்
- உலர்ந்து கொண்டிருக்கும் இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அகலமான வாய் கொண்ட கண்ணாடி பாட்டிலில் இட்டு அதில் பொடியான சமையல் உப்பை சிறிது தூவி அதன் வாயை இறுக்கமாக மூடி நன்கு குலுக்க வேண்டும். பின்பு அந்த இலைகளை எடுத்து சோதித்துப் பார்க்க வேண்டும்.
- அந்த இலைகளின் மேல் கட்டிக்கட்டியாக உப்பு ஒட்டிக்கொண்டு இருந்தால் அந்த இலைகளில் இன்னும் ஈரப்பதம் அதிகம் உள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம்.
- இலைகளில் உப்பு ஒட்டிக்கொள்ளாதவரை இலைகளை உலரவைக்க வேண்டும்.
- இந்த இலைகளை உலரவைத்தால் இந்த நச்சின் அளவு சுமார் 65 -70 % அளவிற்கு குறையும் .
- உலரவைக்கப்பட்ட மரவள்ளி இலைகளை கால்நடைகளின் உடல் எடையில் 0.5 முதல் 0.8 சதவீதம் வரை அளிக்கலாம். அதாவது சுமார் 300 கிலோ எடை உள்ள மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 1.5 முதல் 2.5 கிலோ வரை அளிக்கலாம் இப்படி அளித்தால் மாடுகளுக்கு நச்சினால் எந்த பிரச்சினையும் வராது.
- இதன் இலைகளுடன் பாஸ்பரஸ் மற்றும் கந்தக தாது சத்துக்களை கூடுதலாக அளிக்கவேண்டும்.
- மரவள்ளி இலைகளை உங்கள் மாடுகளுக்கு அளிக்கும் சமயம் சிறிது சிறிதாக அளித்து பழக்கப்படுத்தவேண்டும்.
உலர வைக்கப்பட்ட மரவள்ளி இலைகளை தீவனமாக அளிப்பதின் நன்மைகள்
- நாட்டின மாடுகளுக்கு தினமும் 600 - 700 கிராம் உலர வைக்கப்பட்ட மரவள்ளி இலைகளை வைக்கோலுடன் சேர்த்து தீவனமாக அளிக்கப்பட்டால் மொத்த தீவனத்தின் செரிமானம் அதிகரிக்கும்.
- மாடுகளுக்கு மரவள்ளி இலைகளை வைக்கோல் + மேய்ச்சல் அல்லது வைக்கோல் + வரப்பில் வளரும் புற்களுடன் அளித்தால் பாஸ்பரஸ் எனப்படும் மணிச்சத்துடன் கந்தக சத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும்.
- பாஸ்பரஸ் சத்து மக்கா சோளம் போன்ற தானியங்களில் அதிகம் உள்ளது. .மதுபான ஆலை கழிவுகளில் கந்தக சத்து உள்ளது . தாது உப்பு கலவையில் இந்த தாது சத்துக்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன.
- ஒரு ஆய்வில் கறவை மாடுகளுக்கு வைக்கோலுடன் கலப்பு தீவனம் அளிக்கப்பட்டு அத்துடன் உலரவைக்கப்பட்ட மரவள்ளி இலைகள் சேர்த்து அளிக்கப்பட்டதில் பால் உற்பத்தி 4.4 சதமும் கொழுப்பு 12.0 சதமும் அதிகரித்தது எனவும் SNF அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அறியப்பட்டது .
- மற்றொரு ஆய்வில் மாடுகளுக்கு புல்லுடன் கலப்பு தீவனம் அளிக்கப்பட்டு கூடுதலாக உலர வைக்கப்பட்ட மரவள்ளி இலைகளுடன் முயல் மசாலா சம அளவில் கலந்த கலவை அளிக்கப்பட்டதில் பால் உற்பத்தி 5.0 சதம் அதிகரித்தது எனவும் கொழுப்பு மற்றும் SNF அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அறியப்பட்டது .
- மாடுகளுக்கு அளிக்கும் பசும் தீவனத்தில் 50% வரை மரவள்ளி உலர்ந்த இலைகள் சேர்க்கப்பட்டதில் ( 400 கிலோ எடை கொண்ட மாட்டிற்கு 2.5 கிலோ) அவை தீவனம் உட்கொள்ளும் அளவிலோ பால் உற்பத்தியிலோ அல்லது பாலில் உள்ள கொழுப்பின் அளவிலோ எந்த வித்தியாசமும் காணப்படவில்லை .
- பின்னொரு ஆய்வில் மாடுகளுக்கு மாடுகளின் தீவனத்தில் தினசரி 800 கிராம் அளவில் பருத்தி பிண்ணாக்குக்கு பதில் உலர்ந்த மரவள்ளி இலைகள் அளிக்கப்பட்டதில் பால் உற்பத்தியில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று அறியப்பட்டது
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
Comments
Post a Comment