மரவள்ளிக்கிழங்கு சாகுபடியுடன் கறவை மாடுகளை இணையுங்கள் - பகுதி 2

 



மரவள்ளி இலை சைலேஜ்:

  • சுமார் 3 - 5 மாத வயதிற்கு மேல் உள்ள இலைகளில் இந்த நச்சின் அளவு சற்றே குறைந்திருக்கும். இருப்பினும் உலரவைத்த பசும் இலைகள் அல்லது சைலேஜ் முறையில் பதப்படுத்தப்பட்ட இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம் .
  • மரவள்ளி கிழங்கு அறுவடையின் பொழுது காம்புடன் உள்ள இலைகள் மற்றும் செடியின் நுனியில் உள்ள மிக இளம் தண்டுகளை கொண்டு சைலேஜ் தயாரிக்கலாம்.
  • இம் முறை மூலம் 78 முதல் 80 சதவீத அளவிற்கு ஹைட்ரோ சயனிக் அமில நச்சு குறையும்.
  • அத்துடன் இலைகளின் பசுமை தன்மை மாறாமல் ஊட்டச்சத்துக்களும் ஓரளவு இயல்பான நிலையிலேயே இருக்கும். சைலஜை கீழ்கண்ட முறைகளில் தயாரிக்கலாம்.

மரவள்ளி கிழங்கு தொழிற்சாலைகளில் ஈரக்கழிவைகழிவாகக்கழிவை கொண்டு பதப்படுத்தும் (Silage) முறைகள்:

  1. ஈரக்கழிவு

  • காம்புடன் உள்ள இலைகள் மற்றும் செடியின் நுனியில் உள்ள மிக இளம் தண்டுகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவேண்டும்.
  • நல்ல காற்றோட்டமான நிழலான இடத்தில ஒரு நாள் இரவு வரை பரப்பி நன்கு வாடவைத்து ஈரப்பதத்தை 40% - 45% அளவிற்கு குறைக்க வேண்டும்
  • வழக்கமான வெல்லப்பாகுக்கு பதிலாக மரவள்ளி ஈர கழிவை பயன்படுத்தவேண்டும்.
  • வாட வைத்த மரவள்ளி இலைகள் 4 பங்குக்கு மரவள்ளி ஈர கழிவு 1 பங்கு என்ற அளவில் 1 டன் இலைகளுக்கு 10 கிலோ கல் உப்பை சேர்த்து பசும் புல்லை கொண்டு சைலேஜ் தயாரிக்கும் முறையிலேயே இதையும் 2--3 மாதகாலம் நிலத்தடியில் காற்று புகாவண்ணம் வைத்திருந்து பதப்படுத்தவேண்டும் .

2. வெல்லப்பாகு

வாட வைத்த 100 கிலோ மர வள்ளி இலைகளுடன் 5 கிலோ வெல்லத்தை தண்ணீரில் கெட்டியாக கரைத்துக் கொண்டு அத்துடன் 1 கிலோ சமையல் உப்பு சேர்த்துச பசும் புல்லை கொண்டு சைலேஜ் தயாரிக்கும் முறையிலேயே இதையும் நிலத்தடியில் காற்று புகாவண்ணம் வைத்திருந்து பதப்படுத்தவேண்டும்.

3. காய வைத்த மரவள்ளி கிழங்கு தூள்

தோல் உரிக்கப்பட்ட மரவள்ளி கிழங்கை சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு காயவைக்க வேண்டும் பின்பு அதை அரைத்து 4 பங்கு வாட வைத்த மரவள்ளி இலைகளுடன் 1 பங்கு பொடியாக்கப்பட்ட கிழங்கை கலந்து வழக்கம் போல சைலேஜ் தயாரிக்கலாம்.

எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)