மழை காலங்களில் தீவன மேலாண்மையில் கவனம் தேவை
1.தொடர் மழை காலங்களில் புற்களில் ஏற்படும் மாறுபாடுகள்
- புல்லில் உள்ள சர்க்கரை சத்து கொழுப்பு சத்து மற்றும் தாது சத்துக்கள் மழை நீரில் கரைந்து வெளியேறும்
- மிதமான தொடர் மழையால் அதிக அளவிலும் கன மழையால் சற்றே குறைந்த அளவிலும் நீரில் கரையும் ஊட்டசத்துக்கள் புற்களில் இருந்து வெளியேறும்
- அதனால் புல்லில் உள்ள தண்ணீர் நீங்கலாக பிற சத்துக்கள் அடங்கிய உலர் பொருளின் அளவு குறையும்
- 1.0 -2.50 அங்குலத்துக்கு மேல் மழை பெய்தால் பசும் தீவனங்களின் இலைகள் உதிர ஆரம்பிக்கும் .இலைகள் உதிராத நிலையில் தான் பசும் தீவனங்களின் புரத சத்து அதிகரிக்கும்
- பொதுவாக மழை காலங்களில் புற்கள் வேகமாக வளர்ந்து மிக விரைவில் முற்றிவிடும்
- புல் அறுவடை சமயங்களில் தொடர் மழை பெய்து அறுவடை தாமதமானால் புல் நன்கு முற்றிவிடுவதால் அதில் நார் சத்து முற்றி செரிமானம் பாதிக்கப்படும்
- மழையால் நீரில் கரையும் மாவு சத்துக்கள் வெளியேறுவதால் நார் சத்து அதிகரித்து எரிச்சத்தும் குறையும். புற்களின் செரிமானம் சுமார் 6.0 -40.0 சதம் வரை குறையும்
- புற்களில் உள்ள மொத்த செரிமான உட்டச்சத்துக்கள் அளவு குறையும்
- புல் முற்ற முற்ற அதில் உள்ள சுண்ணாம்பு சத்து கூட மாடுகளுக்கு கிட்டாத நிலை ஏற்படும்
- புற்களின் மேற்பரப்பில் ஈரம் இருந்தால் அதன் மூலம் நுண்ணுயிர் கிருமிகள் மற்றும் பூஞ்சை வளர ஏதுவாகும்
- புரத சத்தானது புரதம் அல்லாத நைட்ரோஜன் சத்தாக மாறுகின்றது இந்த மாற்றம் புற்களில் ஈரப்பதம் 60 % மேல் இருந்தால் வேகமாக இருக்கும்
- கந்தகச் சத்து சற்றே அதிகம் சேர்க்கவேண்டும்
- புற்களில் மாவு சத்து குறைவதால் மாடுகளின் முதல் வயிற்றில் நுண்ணுயிரிகளால் செரிக்கப்படும் தன்மை குறையும்
- நீரில் கரையும் தாது சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் குறையும்
2. மழை காலத்தில் தீவனங்களை சேமிக்கும் முறைகள்
- சுவற்றில் இருந்து நல்ல இடைவெளி விட்டு தீவன மூட்டைகளை அடுக்க வேண்டும்
- அறையில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும்
- நீண்ட நாட்கள் தேவைக்கல்லாமல் குறைந்த நாட்கள் தேவைக்கான தீவனத்தை சேமியுங்கள்
- ஈரமில்லாத நன்கு உலர்ந்த அறையில் தீவனத்தை சேமியுங்கள்
- தீவனத்தில் பூஞ்சை இருக்கக் கூடாது
3. மழை காலங்களில் மாடுகள் மேலாண்மை
- இளம் புற்கள் நிறைந்த மேய்ச்சல் தரையில் மாடுகள் மேய்ந்தால் நார் சத்து பற்றாக்குறை ஏற்படும் .இந்த சமயத்தில்மாடுகளுக்கு நார் சத்து நிறைந்த வைக்கோல் ,ராகி தாள் ,மதுபான தனியக்கழிவு , போன்றவற்றை மேய்ச்சல் முடிந்து மாலையில் கூடுதலாக அளிக்க வேண்டும்
- மழைக்காலத்தில் புரத சத்து நிறைந்த பயறு வகை பசும் தீவனங்களை மாடுகள் விரும்புவதில்லை அதனால் புரத சத்து நிறைந்த பிண்ணாக்கு போன்ற தீவனங்களை தீவனத்தில் சேர்க்க வேண்டும்
- மழைக்காலத்தில் மாடுகளுக்கு 15 -25 % அதிகமாக பசும் புல் தீவனம் இடவும்.புல்லை ஒரு அங்குலத்திற்கும் குறைவாக நறுக்கி தீவனம் அளிக்கவும். இதனால் மாடுகள் அதிக அளவில் புல்லை உட்கொள்ளும்
- மழை காலங்களில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதை தவிர்க்க டை கால்சியம் பாஸ்பேட் என்ற உப்புடன் தாது உப்பின் அளவை அதிகரித்து அளிக்கவேண்டும்
- நார் சத்தின் செரிமானத்தை அதிகரிக்க ஈஸ்ட்டை தீவனத்தில் சேர்க்க வேண்டும்.
- மழை காலங்களில் புல்லை அறுவடை செய்து சிறிது வெயில் வந்தவுடன் முடிந்த அளவு ஈரத்தை உலர வைத்து அளிக்க வேண்டும்.
- மேயும் மாடுகளில் உண்ணிகள் மற்றும் குடல் புழு பாதிப்பு இருக்கும்
- மழையால் கொட்டகையில் ஈரம் இருந்தால் அமோனியா அளவு அதிகரித்து கண் எரிச்சல், கண்ணீர்,கண் வீக்கம் எற்படும்
- மழை காலங்களில் மாடுகளுக்கு ஸ்டார்ச் மற்றும் புரதம் கூடுதலாக அளிக்கவேண்டும்
- மழை கால இளம் வளரும் புற்களில் பாலில் கொழுப்பு சத்துக்கு தேவையான C-16,C-18 கொழுப்புஅமிலங்கள் உள்ளன. அதனால் பல்வேறு வகையான வளரும் இளம் புற்கள் உள்ள இடங்களில் மாடுகளை மேயவிடவேண்டும்
- சிபாரிசு செய்யப்பட்ட அறுவடை இடைவெளியில் புல்லை அறுவடை செய்யவேண்டும்
- மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாவிட்டால் கலப்பு தீவன அளவை சற்று அதிகரிக்கவும்
- மழை ஈரம் காய்ந்த புல் தரையில் 5-6 மணி நேரத்திற்க்கு பதில 2-3 மணி நேரம் மட்டும் மேய்ந்தால் கூடுதலாக 1.00 -1.25 கிலோ கலப்பு தீவனம் அளித்தால் போதும்
- கலப்பு தீவனம் அதிக அளவில் கூடுதலாக அளித்தால் வயிற்றில் அமிலதன்மை ஏற்படும் . இப்படி இருந்தால் பாலில் கொழுப்பு சத்து குறைய வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க சமையல் சோடா மாவு 3பங்கு + மெக்னீசியம் ஆக்சைடு என்ற உப்பு 1 பங்கை ஒரு மாட்டுக்கு தினமும் 60-80 கிராம் தீவனத்தில் சேர்த்தால் போதும் .
- சூபாபுல் , கிளிரிசிடியா , அகத்தி, வாகை ,மரமல்லி ,மல்பெரி போன்ற மரங்களின் இலைகளை தினசரி 6-8 கிலோ அளிக்கலாம்
4. ஈரமான புல்லை தீவனமாக அளிக்கும் முறைகள்
- ஈரமான புற்களை மாடுகள் உட்கொள்ளாது
- மழை நின்று சற்று வெயில் வந்தவுடன் புற்களின் ஈரம் குறைந்தவுடன் மாடுகளை மேயவிட வேண்டும்
- நீங்கள் புல் சாகுபடிசெய்தால் புல்லின் மேல் உள்ள ஈரத்தின் அளவை குறைத்தது பின்பே தீவனமிட வேண்டும். உலர்ந்த வைக்கோல் ,கேழ்வரகு தாள் போன்றவற்றை சுத்தமான தரையில் பரப்பி ,அதன் மேல் ஈரமான புல்லை பரப்பி, அதன் மேல் மீண்டும் உலர்ந்த வைக்கோல் ,கேழ்வரகு தாள் பரப்பி சிறிது நேரம் வைக்கவும்.புல்லின் மேற்பரப்பில் உள்ள ஈரத்தை உலர்ந்த வைக்கோல் உறிஞ்சிவிடுவதால் அந்த புல்லை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம்
- நீங்கள் புல் வெட்டும் எந்திரம் வைத்திருந்தால் புல்லை சிறுக சிறுக வெட்டி மாட்டுக்கு அளிக்கவேண்டிய கலப்பு தீவனத்தை கலந்து தீவனம்அளியுங்கள். சுமார் 90% சதவீதம் உலர்தன்மை கொண்ட கலப்புத் தீவனம் புல்லின் மேற்பரப்பில் இருக்கும் ஈரத்துடன் கலந்து மாடுகள் உட்கொள்ளும் நிலைக்கு ஈர தன்மை வந்துவிடும்
5. கலப்பு தீவன மேலாண்மை
- குறைவான காலத்திற்கு தேவையான தீவனத்தை மட்டும் வாங்கவும்
- கலப்பு தீவனத்தை மழை காலங்களில் நீண்ட நாட்கள் சேமிக்க கூடாது
- கலப்பு தீவனத்தில் ஈரப்பதம் 50% மேல் இருந்தால் சோதித்துப்பார்த்து வாங்கவேண்டும் .தீவனம் கெட்டிப்பட்டிருந்தால் அதில் ஈரப்பதம் அதிகம் என்று பொருள் உள்ளங்கையில் வைத்து அழுத்தி பார்க்கவும்
- கலப்பு தீவனத்தை சற்று தூரத்தில் வைத்து முகர்ந்து பார்க்கவும் மக்கிய வாசம் இருந்தால் வண்டுகள் நிறைந்திருக்கும்
- மழை காலங்களில் தீவன மூட்டைகளை சுவர் ஓரமாக வைக்க வேண்டாம்
- தீவன மூட்டைகளுக்கு இடையில் இடைவெளி இடவும்
- ஒரு வாரத்துக்கு தேவையான தீவனத்தை மட்டும் வாங்கவும்
- ஈரமில்லாத நன்கு உலர்ந்த அறையில் தீவனத்தை சேமியுங்கள்
6. தீவனப் பொருட்களை வாங்கும் பொழுது கவனம் தேவை
மக்கா சோளம்:
பொன் மஞ்சள் நிறமுடன் ஈரப்பதம் 10-12 % இருக்க வேண்டும். கரும் நிறம் கொண்டிருந்தால் வாங்க வேண்டாம் .
தரையில் கொட்டினால் சில்லறை காசுகளை தரையில் கொட்டுவது போன்ற சப்தம் இருக்க வேண்டும்
தானிய மணிகளை வாயில் வைத்து கடித்தால் உ—தியாக இருக்க வேண்டும்
சிமெண்ட் தரையில் ஓங்கி அடித்தால் mit kPz;Lk; NkNy vOk;g Ntz;Lk;.
பூஞ்சை படர்ந்திருக்கும் பிண்ணாக்கு மக்கா சோளம் போன்றவற்றை அகற்றவும்
பிண்ணாக்கு
பிண்ணாக்if உடைத்து பார்க்கவும் . பூஞ்சை படர்ந்துள்ளதை சோதிக்கவும் பிண்ணாக்கு கசப்புச் சுவை கொண்டிருந்தால் வாங்க வேண்டாம் சற்று தூரத்தில் வைத்து முகர்ந்து பார்க்கவும் துர்நாற்றம் இருந்தால் வாங்க வேண்டாம்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
Comments
Post a Comment