மாடுகளுக்கு அளிக்கப்படும் பருத்தி பிண்ணாக்கு பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்

 


பருத்தி பிண்ணாக்கு மாடுகளுக்கு புரத சத்து மிக்க தீவனம் ஆகும் இந்த புரத சத்துடன் பாஸ்பரஸ் என்ற தாதும் உயிர் சத்து E -ம் இதில் அதிகமாக உள்ளன இந்த பிண்ணாக்கு மேல் தோல் அகற்றப்பட்ட வகை (Decorticated ) மற்றும் மேல் தோல் அகற்றப்படாத வகை (Undecorticated) என்ற இரு வகைகளில் கிடைக்கின்றது இவ்விருவகை பிண்ணாக்குகள் ஊட்டச்சத்துக்களின் அளவில் வேறுபடுகின்றன இந்திய தர கட்டுப்பாட்டு கழகம் இந்த பிண்ணாக்கில் கீழ்கண்ட அளவில் ஊட்ட சத்துக்கள் இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது.

மேல் தோல் அகற்றப்படாத பிண்ணாக்கு வகையில் (UnDecortcated )நார் சத்தின் அளவு அதிகமாக உள்ளதால் புரதம் கொழுப்பு மற்றும் எரிச்சத்து செரிமானத் திறன் மொத்த செரிமான ஊட்ட சத்துகளின் அளவு மேல் தோல் அகற்றப்பட்ட வகையை ( Decorticated ) விட குறைவாக உள்ளன மேல் தோல் அகற்றப்பட்ட பிண்ணாக்கில் மொத்த செரிமான ஊட்ட சத்துகளின் அளவு 76-78 % உள்ளன


பொதுவாக பருத்தி பிண்ணாக்கில் சிறுகுடலில் செரிக்கப்படும் பைபாஸ் (Rumen Undegradable Protein ) புரதமும் பால் உற்பத்திக்கு மிகவும் தேவையான மெத்தியோனின் அமினோஅமிலம் பிற பிண்ணாக்குகளை விட அதிகமாக உள்ளன அதே சமயம் பால் உற்பத்திக்கு மிகவும் தேவையான மற்றொரு அமினோ அமிலமான லைசின் இப்பிண்ணாக்கில் குறைவாக உள்ளது

இந்த பிண்ணாக்கில் மாடுகளின் சிறுகுடலில் செரிக்கப்படும் பைபாஸ் புரத சத்து சுமார் 43% உள்ளது சத்து மிக்க சோயா மொச்சை பிண்ணாக்குடன் ஒப்பிட்டால் பருத்திக்கொட்டை பிண்ணாக்கில் பைபாஸ் புரத சத்து சிறிதளவு மட்டுமே குறைவாக உள்ளது

இந்த பிண்ணாக்கில் சுண்ணாம்பு சத்து மிக குறைவாகவும் பாஸ்பரஸ் சத்து மிக அதிகமாகவும் உள்ளது

கன்று ஈன்ற மாடுகளின் முதல் மூன்று மாதத்தில் அம்மாடுகளுக்கு சுண்ணாம்பு சத்து கூடுதலாக அளிக்கவேண்டிய நிலையில் அந்த சுண்ணாம்பு சத்து சரிவர மாடுகளில் பயன்பட வேண்டுமெனில் பாஸ்பரஸ் சத்தும் தேவையான அளவு இருக்க வேண்டும் அந்த சமயத்தில் அம்மாடுகளுக்கு பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்ட பருத்தி பிண்ணாக்க்கை அளித்தால் அம்மாடுகளுக்கு தேவையான பைபாஸ் புரதம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் கூடுதலாக கிடைப்பதால் பால் உற்பத்தி அதிகரிக்கும்

இந்த பிண்ணாக்கில் காசிபால் (Gossypal) என்ற நச்சுத்தன்மை உள்ளது பருத்திக் கொட்டையில் ஒரு “பை” போன்ற அமைப்பில் காசிபால் இருக்கின்றது பருத்திக்கொட்டையிலிருந்து எண்ணையை பிரித்தெடுக்கும் சமயம் இந்த அமைப்பு உடைந்து காசிபால் வெளியேறி எண்ணையில் கலந்துவிடும்

அழுத்தம் கொடுத்து செக்கில் ஆட்டப்பட்ட (Expeller) பருத்தி பிண்ணாக்கில் காசிபால் அளவு மிக குறைவாகவும் (0.02-0.05%) இரசாயனம் மூலம் தயாரிக்கப்பட்ட பிண்ணாக்கில் (Solvant Extracted) அதிகமாகவும் (0.1–0.5%) இருக்கும் அதனால் மாடுகளுக்கு செக்கில் ஆட்டப்பட்ட பருத்தி பிண்ணாக்கை தீவனமாக அளிப்பது சிறந்தது

இது மட்டுமின்றி மாடுகளின் முதல் வயிறு முழுமையாக வளர்ந்து அதில் நுண்ணுயிரிகள் சரியான அளவில் இருந்தால் இந்த காசிபால் நஞ்சு நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு அதன் வீரியம் பெருமளவு குறைக்கப்படுகின்றது இதனால் மாடுகள் மற்றும் 6-8 மாத வயதுக்கு மேல் உள்ள கிடாரிகளுக்கு இதை புரத சத்து மிக்க தீவனமாக அளிக்கலாம் ஆனால் முதல் வயிறு முழுவதுமாக வளர்ச்சி பெறாத கன்றுகளுக்கு இதை அளிக்க கூடாது

சோயா மொச்சை பிண்ணாக்குடன் பருத்தி பிண்ணாக்கில் உள்ள ஊட்ட சத்துக்களை ஒப்பிடும் அட்டவணை கிழே அளிக்கப்பட்டுள்ளது (%) :


எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)