கறவை மாடுகளுக்கு பசும் தீவனத்துடன் மர இலைகளை சேர்த்து அளித்து பால் உற்பத்தியை பெருக்குங்கள்- பகுதி -2
பயறுவகை பசும் தீவன மர இலைகள்: பயறுவகை பசும் தீவன மரங்களின் இலைகள் புரத சத்து மிக்கவை இவ்விலைகளில் செரிக்கக்கூடிய புரத சத்து அதிகமாக உள்ளது மரங்களின் இலைகளில் நார் சத்து மற்றும் பாஸ்பரஸ் குறைவாகவும், சுண்ணாம்பு சத்து சத்து அதிகமாகவும் உள்ளன மர இலைகளின் இலைகளின் வளர்ச்சி பருவத்தில் புரத சத்து அதிகமாகவும் அவை முற்ற முற்ற அந்த சத்து குறைந்தும் இருக்கும் பயறுவகை பசும் தீவனங்களை போலவே பயறு வகை பசும் தீவன மர இலைகளை வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளுடன் சேர்த்து அளித்தால் வைக்கோலின் செரிமான தன்மை அதிகரிக்கும் சில பயறு வகை பசும் தீவன மரங்களை பற்றிய குறிப்புக்கள்: முருங்கை: முருங்கை இலையும்களில் ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமாக உயிர் சத்து .C ,கேரட்டை விட10 மடங்கு அதிகமாக உயிர் சத்து A , பாலை விட 17 மடங்கு அதிகமாக சுண்ணாம்பு சத்து , வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிகமாக பொட்டாசியம் சத்து ,கீரையை விட 25 மடங்கு அதிகமாக இரும்பு சத்து உள்ளது . இதில் பால் மடியில் வளர்ச்சி மற்றும் சினை சுழற்சியை ஏற்படுத்தும் காரணிகளும் உள்ளன முருங்கை இலைகளில் உலர்ப்பொருள் அளவீட்டில் புரத சத்து 15 % முதல் 30%...