கறவை மாடுகளில் பால் உற்பத்தி - உச்சகட்ட பால்சுரக்கும் நாட்கள்
கறவை மாடுகளில் பால் உற்பத்தி
- மாடுகளின் பால்சுரப்பு காலம் ஒரு ஈற்றில் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டால்
- ஈன்ற 3 மாதங்கள் கொண்ட முதல் கட்டத்தில் பால் சுரப்பு மிக அதிகமாக இருக்கும் .
- அடுத்த 3 மாதங்களில் (இரண்டாம் கட்டம்) பால் சுரப்பு குறைய துவங்கும் .
- அடுத்த 4 மாதங்களில் (மூன்றாம் கட்டம்) பால் சுரப்பு மிக குறைவாக இருக்கும்.
- ஈன்ற11,12 மாதத்தில் (நான்காம் கட்டம் ) சுரப்பு முழுமையாக நின்றுவிடும்.
- ஆக மாடுகளில் பால் வற்றும் காலம் 60 நாட்கள் வரையும் பால் சுரப்பு 305 நாட்கள் வரையும் இருக்கவேண்டும் .
- ஒரு மாட்டின் மொத்த பால் உற்பத்தி ஒரு ஈற்றில் 305 நாட்களுக்கு தான் கணக்கிடப்படுகிறது .
- பல காரணங்களுக்காக சில மாடுகள் 305க்கும் மிக குறைவான நாட்கள் மட்டுமே பால் கொடுக்கும் இப்படி இருந்தால், அந்த மாட்டில் அந்த ஈற்றின் மொத்த பால் உற்பத்தி குறைந்து அந்த பண்ணை நட்டத்தில் தான் இயங்கும் .
- சராசரியாக தினசரி 10 லிட்டர் வரை பால்கொடுக்கும் மாடுகள் ஓரளவு சரியான தீவன பராமரிப்பு செய்யப்பட்ட நிலையில் அந்த மாட்டின் பால் உற்பத்தி 300 நாட்களில் சுமார் 2900 கிலோ இருக்கும் .
கறவை மாடுகளில் உச்சகட்ட பால்சுரக்கும் நாட்கள்
- மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் ,பொது பராமரிப்பு ,மாடுகளின் வயது, கன்று ஈன்ற பருவம், ஈத்துக்களின் எண்ணிக்கை போன்றவைகள் மாடுகளில் பால் கொடுக்கும் நாட்களையும், பால் உற்பத்தியையும் பாதிக்கும் .
- நீண்டநேரம் மடியில் பால் தேங்கி இருந்தால் அதன் மூலம் மடியில் பாலால் ஏற்படும் அழுத்தம் அதிகரித்து பால் சுரப்பு குறைந்துவிடும்
- மாடுகள் ஈன்ற பின் உச்சகட்ட பால் சுரப்பை அடைய எடுத்துக்கொள்ளும் நாட்களும் உச்சகட்ட பால் அளவும் அம்மாடுகளின் மொத்த பால் உற்பத்தியையும் பால் கொடுக்கும் நாட்களையும் பாதிக்கும்
- கறவை மாடுகள் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பால் சுரப்பில் இருக்கும் சமயம் இயல்பாகவே பால் சுரப்பு குறையும் .
- விவசாயிகள் பால் சுரப்பை அதிகரிக்கும் நோக்கில் தீவன அளவை அதிகரிப்பார்கள் இது தவறானது
- கறவை மாடுகள் இரண்டாம் கட்ட பால் சுரப்பில் இருக்கும் பொழுது பசி அதிகரித்து மாடுகள் அதிக தீவனம் உட்கொள்ளும்
- மாடுகளில் பால் உற்பத்தி இந்த கட்டத்தில் குறைவதால் உட்கொண்ட ஊட்ட சத்து சத்தின் பெரும் பகுதி பால் சுரப்பிற்கு பயன்படுத்தப்படாமல் முன்னுரிமை அடிப்படையில் உடல் ஏற்றத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.
- உடல் ஏற்றத்திற்கு தேவைப்படும் எரிச்சத்து பால் உற்பத்திக்கான தேவையை விட குறைவாக இருப்பதால் தேவைக்கு அதிகமாக தீவனம் மூலம் அளிக்கப்பட எரிச்சத்து கொழுப்பாக மாற்றப்பட்டு பால் மடியில் கொழுப்பாக படியும் .இப்படி படியும் கொழுப்பு பால் சுரப்பிகளின் திறனை குறைப்பதால் பால் சுரப்பு குறையும்
- மாடுகளின் மூன்றாம் கட்ட பால் உற்பத்தியில் இயல்பாகவே பசியின் அளவும் பால்சுரப்பும் மிக குறைந்திருக்கும் .
- இந்த கட்டத்தில் பால் சுரப்பை அதிகரிக்க வேண்டி நீங்கள் மாவுச்சத்து மிக்க தீவனங்களை அளித்தாலும் மேற்கூறிய நிலை ஏற்படும்.
- கிடாரிகளை வளர்ப்பவர்கள் கிடாரிகள் விரைவில் பருவம் அடைந்து சினை பிடிக்க வேண்டி தேவைக்கு அதிகமாக தீவனம் இட்டு கொழுக்க வைப்பது சாதாரணமாக நடக்க கூடியது .
- இப்படி கொழுக்க வைப்பதால் கிடாரிகளில் பால் மடி வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கும் நிலையிலேயே தேவைக்கு அதிகமான எரிச்சத்து
- கொழுப்பாக மாறி மடியில் படியும். அந்த கிடாரி தாய்மை அடைந்து கன்று ஈன்று பால் கொடுக்கும் பொழுது அதன் மடியில் ஏற்கனவே படிந்துள்ள கொழுப்பானது பால் சுரப்பிகளை சரியான எண்ணிக்கையிலும் அளவிலும் வளர விடாமல் செய்வதால் பால் உற்பத்தியும் பால் சுரக்கும் நாட்களும் குறைந்துவிடும்
- கன்று ஈன்ற முதல் மற்றும் இரண்டாம் கட்ட பால் சுரப்பு காலத்தில் மாடுகளுக்கு அதிக புரதம் மற்றும் அதிக எரிச்சத்து கொண்ட தீவனம் (High Protein and High Energy Ration ) சரியான அளவில் தாது சத்துக்கள் மற்றும் NDF Neutral Detergent Fibre ) எனப்படும் நார்ச்சத்து 35-45% கொண்ட பசும் தீவனம் மற்றும் புரசத்தில் Bypass 40% க்கு அதிகமாக இருக்கும் சரிவிகித தீவனமாக அளிக்கப்படல் வேண்டும்
- இப்படி சரியான தீவன பராமரிப்பை மாடு சினைப்பட்ட 8,9 மற்றும்10 மாத சினை காலத்தில் செய்யாவிட்டால் மாடுகளின் பால் தரும் நாட்கள் குறைந்துவிடும் அது மட்டுமின்றி முதல் கட்ட பால் சுரப்பின் முடிவில் பால் குறையும் வேகம் இயல்பாகவே அதிகரிக்கும்
- கறவை மாடுகளில் 60 நாட்கள் பால் சுரப்பை முற்றிலும் நிறுத்தி பாலை வற்ற விட வேண்டும்.
- மாடுகள் பால் வற்றயதால் சரியாக தீவனபராமரிப்பு செய்யப்படாமல் இருந்தால் அடுத்த ஈற்றில் பால் சுரப்பு குறைந்து பால் கொடுக்கும் நாட்களும் குறைந்துவிடும்.
- மாடுகளில் பால் கறக்கும் பொழுது விரைவாகவும் வலி இல்லாமலும் கறக்க
- வேண்டும்
- அதிகம் பால் தரும் மாடுகளில் 39 நாள் ஒன்றுக்கு இரு முறைகளுக்கு பதில் மூன்று அல்லது நான்கு முறைகள் பால் கறந்து, சுரந்த பால் நீண்ட நேரம் மடியில் தேங்காதவாறு செய்தால், பால் சுரப்பு மட்டுமின்றி பால் கொடுக்கும் நாட்களும் அதிகரிக்கும்.
- அதிகம் மற்றும் மிக அதிகம் பால் தரும் மாடுகளில் வருடத்திற்கு ஒருமுறைக்கு பதில் ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை கன்று பிறக்கும் வகையில் இனப்பெருக்க பராமரிப்பு செய்யவேண்டும் .
- இதற்கு மாறாக வருடத்திற்கு ஒரு கன்று பிறந்தால் ஏற்படும் அழற்சியின் காரணமாக பால் கொடுக்கும் நாட்கள் குறைந்து மொத்த பால் உற்பத்தியும் குறையும்.
- அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலோ ஏற்படும் மடிநோயால் பால் கொடுக்கும் நாட்கள் குறைந்துவிடும்.
கறவை மாடுகளில் உச்சகட்ட பால் சுரப்பு குறைய காரணங்கள்
மாடுகளின் தீவனத்தில் சரியான அளவில் புரதம் , பைபாஸ் புரதம் ,எரிச்சத்து, தாது
சத்துக்கள் குறிப்பாக செலினியம், துத்தநாகம் ,சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மெக்னீசியம் ,கந்தக சத்துக்கள், சமையல் உப்பு ,உயிர் சத்துக்கள் A மற்றும் E, தீவனத்தில் பூஞ்சைகள் இருத்தல் போன்றவை
- மாடுகளில் கன்று ஈன்ற உடன் தீவனத்தில் சேர்க்கப்படும் தானியங்களின் அளவு கீடோசிஸ் ,மடிநோய் கர்ப்ப பையில் நோய் தாக்கம், பால் வற்றிய மாடுகள் கன்று ஈனும் சமயம் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனம் போன்றவை மாடுகளின் உடல் எடையில்10 முதல்12% வரை பசும் நிலையில் பசும் தீவனமும் அந்த பசும் தீவனத்தில் NDF (Newtral Detergent Fibre ) என்ற நார் சத்து வகை உடல் எடையில் 0.8 -1.2 % இருக்க வேண்டும்.
- மாடுகளில் இரத்த சோகையை ஏற்படுத்தும் குடற்புழுக்கள் ,ஒட்டுண்ணிகள்,, இரும்புசத்து ,கோபால்ட் போன்ற தாது சத்துக்கள் குறைபாடு
- மாடுகள் பால் வற்றும் சமயம் மற்றும் நான்காம் கட்ட கடைசி பால் சுரப்பு காலங்களில் தேவைக்கு அதிகமாக தீவனம் அளித்து அவற்றை கொழுக்க வைப்பது ( உடல் கட்டு 5.0 )
- கறவை மாடுகளுக்கு முறை வைத்து காலை மாலையில் மட்டும் தண்ணீர் அளிப்பது .
- மாடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் பால் உற்பத்தி உடனடியாக குறைந்துவிடும்.
- மாடுகளுக்கு தாகம் எடுக்கும் பொழுதெல்லாம் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் வண்ணம் தீவன தொட்டியின் பக்கமே தண்ணீர் தொட்டியையும் வைத்து அவை குடிக்கும் அளவுக்கு தண்ணீர் அளிக்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர்பார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர்பார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-21-1-25-blogger
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: யூரபாரம் வாட்ஸாப்ப் சேனல் லிங்க்
Comments
Post a Comment