மழைக்காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு - கலப்பு தீவன மேலாண்மை
◆ குறைவான காலத்திற்கு தேவையான கலப்பு தீவனத்தை மட்டும் வாங்கவும். ◆ நீண்ட நாட்கள் தீவனத்தை சேமிக்க கூடாது. ◆ ஈரப்பதம் 50% மேல் இருந்தால் சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். தீவனம் கெட்டிப்பட்டிருந்தால் அதில் ஈரப்பதம் அதிகம் என்று பொருள் உள்ளங்கையில் வைத்து அழுத்தி பார்க்கவும். ◆ சற்று தூரத்தில் வைத்து முகர்ந்து பார்க்கவும், மக்கிய வாசம் இருந்தால் வண்டுகள் நிறைந்திருக்கும். ◆ மழைக் காலங்களில் தீவன மூட்டைகளை சுவர் ஓரமாக வைக்க வேண்டாம். ◆ தீவன மூட்டைகளுக்கு இடையில் இடைவெளி இடவும். ◆ ஒரு வாரத்துக்கு தேவையான தீவனத்தை மட்டும் வாங்கவும். ◆ ஈரமில்லாத நன்கு உலர்ந்த அறையில் தீவனத்தை சேமியுங்கள். தொடர் மழை காலங்களில் பூஞ்சை வளராமல் தீவனங்களை சேமியுங்கள் ◆ சேமிக்கப்படும் தீவனங்களில் 13%க்கு குறைவாக ஈரப்பசை இருக்கும் வண்ணம் உலர்த்தி இருக்க வேண்டும். ◆ உடைந்த தானியங்கள் மற்றும் நொய்களை சேமிக்கக்கூடாது, வண்டுகளால் தாக்கப்பட்ட தீவனங்களை சேமிக்கக்கூடாது. ◆ உலர்ந்த தானியங்களை நன்கு சுத்தம் செய்து பின்பு தான் மூட்டைகளில் அடைக்க வேண்டும் ◆ தீவனம் அடைக்கப்பட்ட மூட்டைகளை சுவற்றின் பக்கம் சாய்த்த...