உடல்நலம் சரியில்லாத மாட்டுக்கு தீவன பராமரிப்பு எப்படி செய்யணும்? பகுதி - 2
வயிறு உப்புதல்: மாடுகளின் உடல் எடையில் 0.5 முதல் 0.80% கிலோ எடை வரை தான் தானியங்களை தீவனத்தில் சேர்க்க வேண்டும். இதற்கு மேல் சேர்த்தால் மாடுகளில் முதல் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்பட்டு வாயு சேர்ந்து வயிறு உப்பும். இந்த சமயங்களில் மருத்துவத்திற்கு பின் நீங்கள் தீவனத்தில் அளிக்கும் தானிய அளவை சிறிது சிறிதாக குறைத்து 50% அளவிற்கு கொண்டு வர வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் தானியங்களுடன் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 50 முதல் 80 கிராம் என்ற அளவில் சமையல் சோடா மாவை இரண்டு சம பாகங்களாக பிரித்து தீவனத்துடன் அளியுங்கள். இது 4 முதல் 6 வாரங்கள் வரை தொடர வேண்டும். மாறாக ஓரிரு நாட்கள் மட்டும் தொடர்ந்து பிறகு கைவிட்டால் வயிறு உப்பும் நிலை மீண்டும் வரும். அதே போல மாடுகளுக்கு சில வகை பயறு வகை தீவனங்களை தேவைக்கு மேல் அளித்தால் சில மாடுகளின் முதல் வயிற்றில் நுரை உண்டாகி அதனால் வயிறு உப்பும் . இத்தகைய சமயங்களில் மேல் கூறிய பராமரிப்பு முறை பயன்படாது. குடற்புழு பிரச்சனைகள்: மாடுகளில் குடற்புழு நீக்கம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரின் ஆலோசனை பேரில் செய்ய வேண்டும். இப்படி குடற்புழு நீக்கம் செய்த ப...