கரும்பு வேளாண்மையுடன் கறவை மாடுகளை இணைத்து பால் உற்பத்தியை பெருக்குங்கள்

 


  • கரும்பு தோகையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏறத்தாழ நெல் வைக்கோல், சோளத்தட்டை, கேழ்வரகு தாள் போன்ற வேளாண் கழிவுகளில் உள்ள சத்துக்களின் அளவை ஒத்துள்ளன.
  • பசும்புல்லை விட கரும்பு தோகையில் புரத சத்து மற்றும் கரையும் மாவு சத்துக்கள் குறைவாக உள்ளன
  • ஓரிரு இளம் கரும்பு கணுக்கள் கொண்ட கரும்புதோகையை தீவனமாக அளித்தால் மாடுகள் விரும்பி உட்கொள்ளும் .
  • சுமார் 350 கிலோ எடைகொண்ட ஒரு கலப்பின மாடு நாள் ஒன்றுக்கு 13- 15 கிலோ வரை பசும் கரும்புதோகையை உட்கொள்ளும்
  • பசும் புல்லுடன் ஒப்பிட்டால் பசும் கரும்பு தோகையில் செரிமானம் குறைந்தே உள்ளது .
  • பசும்புல்லுடன் ஒப்பிட்டால் பசும் தோகையில் புரத செரிமானம் 44% மும் கொழுப்பு செரிமானம் 24%- மும், கரையும் மாவு சத்து செரிமானம் 20%-மும் குறைவாக உள்ளன
  • பசும் கரும்பு  தோகை மட்டும் உட் உட்கொண்டால் …
    இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் மாடுகளின் உடல் எடையை தக்கவைத்துக் கொள்ள கூட போதாது. பல சமயங்களில் மாடுகள் உடல் எடையை இழக்க கூட நேரிடும் 
  • மாடுகளின் உடலில் இருந்து சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் வெளியேறும். அதனால் பசும் கரும்பு  தோகை தீவனத்துடன் சுண்ணாம்பு  தூள்  , டை-கால்சியம் பாஸ்பேட் , மணி சத்து நிறைந்த கோதுமை தவிட்டையும் சேர்த்து அளிக்கவேண்டும்
  • கரும்பு தோகையை மட்டுமே மாடுகளுக்கு தீவனம் அளித்தால்  மாடுகள் உடல் எடையை உடல் எடையை பேணி காக்க கூட அதில் உள்ள ஊட்ட சத்துக்கள் போதாது .
  • இந்த தோகைகளுடன் புரதம் மற்றும் எரிச்சத்து மிக்க தீவனங்கள், அல்லது கலப்பு தீவனம் தாது சத்துக்கள் போன்றவை  கலந்து அளிக்கப்படல் வேண்டும்
  • பசும் கரும்பு தோகையை மட்டுமே தீவனமாக அளித்தால் மிக குறைந்த அளவு பால் தரும் மாடுகளில் கூட பால் சுரப்பு மிக குறையும். 
  • இந்த தோகையுடன் புரத சத்து நிறைந்த பிண்ணாக்கு மற்றும் எரி சத்து நிறைந்த வெல்லப்பாகு அல்லது மக்கா சோளம் போன்ற தானியங்களை சேர்த்து அளித்தால் பால் உற்பத்தியை அதிகரிக்கலாம்'
    கரும்பு தோகையை  சைலேஜ் முறையில் பதப்படுத்தி  பயன்படுத்துங்கள்   
  • கரும்பு அறுவடையின் பொழுது பசும் தோகைகள் ஒரே சமயத்தில் கிடைப்பதால் அவற்றை பசும் நிலையில் மாடுகளுக்கு தினசரி அளிக்க முடியாது. 
  • அறுவடை சமயத்தில் கிடைக்கும் பசும் தொகையை சைலேஜ் முறையில் பதப்படுத்தி கோடையிலும் பசும் தீவனம் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க முடியும்
  • அதனால் கரும்பு அறுவடை முடிந்து பசும் தோகைகளின் புரத சத்தின் அளவை அதிகரிக்க யூரியாவையும் ( 1.0% ), எரிச்சத்தின் அளவை அதிகரிக்க வெல்லப் பாகுவையும், சுவையை அதிகரிக்க சமையல் உப்பையும் சேர்த்து சைலேஜாக பதப்படுத்தி சேமித்து வைத்து மாடுகளுக்கு தீவனம் அளித்து கரும்பு தோகையின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்

1% யூரியாவை சேர்த்து கரும்பு தோகை  செய்யும் முறை

  • அறுவடை செய்த தோகையை   

  1. 2 அங்குல அளவில் நறுக்குதல்
  2. டன்னுக்கு 10  கிலோ யூரியா 
  3. டன்னுக்கு 5   கிலோ சமையல் கல் உப்பு
  4. டன்னுக்கு 20  கிலோ வெல்லப்பாகு சேர்த்து
  5. 60  நாட்கள் காற்று புகாமல் மூடி வைப்பது
  • யூரியா கொண்டு செறிவூட்டப்பட்டு சைலேஜ் செய்யப்பட்ட கரும்பு தோகையை 6 முதல்  8 மாத வயதுக்கு மேற்பட்ட கிடாரிகளுக்கும், மாடுகளுக்கு மட்டும் தான் அளிக்கவேண்டும். 
  • பதப்படுத்திய தோகையை பசும் புல்லுக்கு 50 -100% மாற்றாக பயன்படுத்தலாம்
  • இருப்பினும் மாடுகளுக்கு அளிக்கவேண்டிய மொத்த பசும் தீவனதில் சரிபாதி அளவில் பசும் புல்லும் பதப்படுத்தப்பட்ட கரும்பு தோகையும் அளிப்பது  சிறந்தது .  இவ்விதம் தீவனப் பராமரிப்பு செய்தால் வளரும் கன்றுகளில் நல்ல உடல் வளர்ச்சியை பெறமுடியும்.
  • மர இலை வகைகளில் சூபாபுல், மரவள்ளி, கிளைரிசிடியா, கல்யாணமுருங்கை போன்ற இலைகளை சேர்த்தும் அளிக்கலாம்
  • கறவை மாடுகளில் பசும் புல்லுக்கு மாற்றாக யூரியா கொண்டு பதப்படுத்தப்பட்ட சைலேஜை அளித்தால் மாடுகளில் பால் உற்பத்தி, பாலில் கொழுப்பு ,பாலின் அடர்த்தி போன்றவைகளில் எந்த மாற்றமும்  ஏற்படாது .
  • யூரியாவிற்கு மாற்றாக கூண்டில் வளர்க்கப்படும் கறிக்கோழிகளின் எச்சத்தை பயன்படுத்தலாம்:
  • யூரியாவை தீவனத்தில் சேர்ப்பதில் சில விவசாய நண்பர்களுக்கு தயக்கம் இருக்கலாம் .கரும்பு தோகை சைலேஜின் புரத சத்தின் அளவை அதிகரிக்க யூரியாவுக்கு மாற்றாக ஒரு டன் கரும்பு  தோகைக்கு  250  கிலோ அளவில்  கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளின் எச்சத்தை  பயன்படுத்தலாம் .
  • கூண்டில் வளர்க்கப்படும் கறிக்கோழிகளின் எச்சத்தில் புரத சத்து, கொழுப்பு சத்து நார்ச்சத்து சுண்ணாம்பு சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் முறையே 32-44%,1.6-2.9%,10-16% 1.34-3.38%,1.4-2.2% உள்ளன.
  • கோழிகளின் எச்சத்தில் Salmonella typhimurium, Escherichia coli, or Clostridium botulinum போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் உள்ளதால் முதலில் இந்த கிருமிகளை அழிக்க கீழ்வரும் முறையை பின்பற்ற  வேண்டும் :
  • ஒரு பிளாஸ்டிக் விரிப்பை தரையில் விரித்து, அதில் கூண்டில் வளர்க்கப்படும் கோழிகளின் எச்சத்தை பரப்பி அதில் ஈரப்பதம் சுமார் 20% இருக்கும்படி செய்யவேண்டும்.
  • கோழிகளின் எச்சத்தில்  ஈரப்பதம் சுமார்  20-40% அளவு இருக்கும் .  எச்சத்தில் ஈரம் அதிகம் இருந்தால் சற்று வெயிலில் உலரவைத்து ஈரப்பதத்தை குறைக்கலாம். எச்சத்தில் ஈரப்பதம் குறைவாக இருந்தால் சற்று தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை  20% அளவுக்கு அதிகரித்து, நன்கு கலக்க வேண்டும்,
  • பின்பு எச்சத்தை குவியலாக சேர்த்து குவியலை நன்கு அழுத்தி அதன் இடையில் உள்ள காற்றை நீக்கவேண்டும்.
  • பின்பு அந்த குவியலின் மேல் ஒரு பிளாஸ்டிக் விரிப்பை பரப்பி 21  நாட்களுக்கு குறையாமல் மூடிவைக்கவேண்டும். 
  • இப்படிசெய்வதால் கோழிகளின் எச்ச குவியலின் வெப்பநிலை சுமார் 
  • 130-1600F அளவு வரை உயர்ந்து எச்சத்தில் இருந்த நோய் கிருமிகள் முழுவதும் அழிந்துவிடும். பின்பு அந்த எச்சத்தை சைலேஜ் செய்ய பயன்படுத்தவேண்டும்
  • சைலேஜ் கெட்டுப்போவதை தவிர்க்க ஒரு 100 கிலோ சைலேஜுக்கு 2.0 கிராம் அளவு பொட்டாசியம் சார்பேட் அல்லது சோடியம் பென்சோயேட்டை சைலேஜை மூடும் சமயம் மேற்புறம் உள்ள கரும்பு தொகையில் சேர்த்தால் போதும்
  • கரும்பு தோகையை மாடுகளுக்கு தீவனமாக அளித்தால் இளம் சினை பருவத்தில் இருக்கும் மாடுகளில் கரு சிதைவும், சினை சுழற்சியில் சில பிரச்சினைகள் ஏற்படும் என்ற கருது பரவலாக உள்ளது  .இந்த கருத்து பற்றிய எந்த பதிவும் ஆய்வுகள் மூலம் பதிவு செய்யப்படவில்லை
  • இருப்பினும் இதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் பசு மாடுகளில் ஏற்படும் சினை சுழற்சியிலோ, மாடுகள் சினை சுழற்சியில் இருக்கும்  கால அளவிலோ, சினை பட்ட மாடுகளின் எண்ணிக்கையிலோ எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
  • அது மட்டுமின்றி  இந்த தீவனத்தை காளை மாடுகளுக்கு அளித்த பொழுது காளையில் கிடைத்த திரவ விந்து அளவிலோ , திரவ விந்தில் இருந்த விந்துக்களின் எண்ணிக்கையிலோ, உயிருடன் இருந்த விந்துக்களின் எண்ணிக்கையிலோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

யூரியாவிற்கு மாற்றாக கூண்டில் வளர்க்கப்படும் கறிக்கோழிகளின் எச்சத்தை பயன்படுத்தலாம் :

  •  யூரியாவை தீவனத்தில் சேர்ப்பதில் சில விவசாய நண்பர்களுக்கு தயக்கம் இருக்கலாம் .கரும்பு தோகை சைலேஜின் புரத சத்தின் அளவை அதிகரிக்க யூரியாவுக்கு மாற்றாக ஒரு டன் கரும்பு  தோகைக்கு  250  கிலோ அளவில்  கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளின் எச்சத்தை  பயன்படுத்தலாம் .
  • கூண்டில் வளர்க்கப்படும் கறிக்கோழிகளின் எச்சத்தில் புரத சத்து, கொழுப்பு சத்து நார்ச்சத்து சுண்ணாம்பு சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் முறையே 32-44%,1.6-2.9%,10-16% 1.34-3.38%,1.4-2.2% உள்ளன.
  • கோழிகளின் எச்சத்தில் Salmonella typhimurium, Escherichia coli, or Clostridium botulinum போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் உள்ளதால் முதலில் இந்த கிருமிகளை அழிக்க கீழ்வரும் முறையை பின்பற்ற  வேண்டும் :
  • ஒரு பிளாஸ்டிக் விரிப்பை தரையில் விரித்து, அதில் கூண்டில் வளர்க்கப்படும் கோழிகளின் எச்சத்தை பரப்பி அதில் ஈரப்பதம் சுமார் 20% இருக்கும்படி செய்யவேண்டும்.
  • கோழிகளின் எச்சத்தில்  ஈரப்பதம் சுமார்  20-40% அளவு இருக்கும் .  எச்சத்தில் ஈரம் அதிகம் இருந்தால் சற்று வெயிலில் உலரவைத்து ஈரப்பதத்தை குறைக்கலாம். எச்சத்தில் ஈரப்பதம் குறைவாக இருந்தால் சற்று தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை  20% அளவுக்கு அதிகரித்து, நன்கு கலக்க வேண்டும்,
  • பின்பு எச்சத்தை குவியலாக சேர்த்து குவியலை நன்கு அழுத்தி அதன் இடையில் உள்ள காற்றை நீக்கவேண்டும்.
  • பின்பு அந்த குவியலின் மேல் ஒரு பிளாஸ்டிக் விரிப்பை பரப்பி 21  நாட்களுக்கு குறையாமல் மூடிவைக்கவேண்டும். 
  • இப்படிசெய்வதால் கோழிகளின் எச்ச குவியலின் வெப்பநிலை சுமார் 
  • 130-1600F அளவு வரை உயர்ந்து எச்சத்தில் இருந்த நோய் கிருமிகள் முழுவதும் அழிந்துவிடும்.  பின்பு அந்த எச்சத்தை சைலேஜ் செய்ய பயன்படுத்தவேண்டும்
  • சைலேஜ் கெட்டுப்போவதை தவிர்க்க ஒரு 100 கிலோ சைலேஜுக்கு 2.0 கிராம் அளவு பொட்டாசியம் சார்பேட் அல்லது சோடியம் பென்சோயேட்டை சைலேஜை மூடும்

கரும்புத்தோகை சைலேஜை தீவனமாக அளிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை:

  • மாடுகள் உட்கொள்ளாமல் மீதம் வைத்திருக்கும் சைலேஜை மீண்டும் பயன்படுத்தக்கூடாது
  • பால் கறந்த பின் தான் சைலேஜை தீவனமாக அளிக்கவேண்டும் 
  • சைலேஜ் குழியை திறந்து மேற்புறம் உள்ள சைலேஜை பயன்படுத்தக்கூடாது
  • யூரியா அல்லது கோழிகளின் எச்சம் சேர்த்து தயாரிக்கப்பட்ட சைலேஜை மாடுகளுக்கு இடும் முன்  5 முதல்10 நிமிடங்கள் காற்றாட வைத்து பின்பே தீவனம் எடை வேண்டும்
  • எந்த காரணம் கொண்டும்  6 முதல் 8  மாதத்துக்கு குறைத்த வயதுடைய
  • கன்றுகளுக்கு யூரியா அல்லது கோழிகளின் எச்சம் சேர்த்து தயாரிக்கப்பட்ட சைலேஜை அளிக்க கூடாது
  • சைலேஜ் குழியை ஒருமுறை திறந்தால் மீண்டும் மூட கூடாது
  • சைலேஜ் குழியில் உள்ள சைலேஜை எவ்வளவு விரைவில் தீவனமாக அளித்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக  முடிக்க வேண்டும்
  • சைலேஜை சிறிது சிறிதாக அளித்து மாடுகளை பழக்கப்படுத்த வேண்டும்.

உலர்ந்த கரும்பு தோகையை தீவனமாக அளிக்கும் முறை

  • உலர்ந்த கரும்பு தோகையுடன் வேளாண்கழிவுகள் சேர்த்தும் தீவனம் அளிக்கலாம் 
  • உலர்ந்த கரும்பு தோகை 30% + உலர்ந்த நிலக் கடலை கொடி 30% + கலப்பு தீவனம் 40%.
  • உலர்ந்த கரும்பு தோகை40% + சோள தட்டை 20%+ கலப்பு தீவனம் 40%.
  • உலர்ந்த கரும்பு தோகை 30% + உலர்ந்த நிலக் கடலை கொடி 30% + கலப்பு தீவனம் 40%.
  • உலர்ந்த கரும்பு தோகை 20% + உலர்ந்த நிலக் கடலை கொடி20% + சோள தட்டை 20%+  கலப்பு தீவனம் 40%.
  • உலர்ந்த கரும்புத்தோகை மற்றும் பிற வேளாண்கழிவுகள் மேல் 1% சமையல் உப்பு கரைசலை தெளித்து அளித்தால் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்.

கரும்புடன்  பயறு வகை பசும் தீவன ஊடுபயிர்

  • விதை கரும்பு நட்டு சுமார் 10 -15 நாட்கள் கழித்து தான் பயிர்  முளைக்க  ஆரம்பிக்கும். 
  • முளைவிட்டு சுமார் மூன்று மாதங்கள் வரை கரும்பு மிக மெதுவாக தான் இலை விட்டு வளரும் . வளர்ந்த கரும்பு பயிரின் 50% வேர்  0-20 செமீ ஆழத்திலும், 73% வேர்  0 -40 செமீ ஆழத்திலும், 86% வேர்   0-60 செமீ ஆழத்திலும் இருக்கும் 


  • கரும்பானது  ஒற்றை சால் முறை, இணை இருவரிசை முறை மற்றும்  வட்ட குழிமுறை போன்ற முறைகளில் கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றது.
  • புதிதாக விதை கரும்பு நட்டு கரும்பு வேளாண்மைசெய்தாலோ அல்லது மறுதாம்பு முறையிலோ புதிய கரும்பு பயிர் வளர்ந்து இலைகள் முழுமையாக மூட 2 முதல் 3 மாதங்கள் ஆகும்.
  • இந்த கால இடைவெளியில் கரும்புடன் வாழ்நாள் குறைந்த பயறு வகை பசும் தீவனங்களை ஊடுபயிராக இணைத்து சாகுபடி செய்து அதன் மூலம் கிடைக்கும் பசும் தீவனத்தை வெயிலில் உலர்த்தி சேமித்து கோடையில் கரும்பு தோகையுடனோ அல்லது கரும்பு தோகை சைலேஜூடனோ சேர்த்து மாடுகளுக்கு தீவனம் அளிக்கவேண்டும்
  • ஒற்றை சால் முறையில் சாலுக்கு சால்  2அடி இடைவெளியும், இரு இணை வரிசை நடவு முறையில் கரும்பு வரிசைக்கு வரிசை 1.0 அடியும், சாலுக்கு சால் 5.0 அடி இடைவெளியும் இருக்கும். குழி முறையில் குழிக்கு குழி  6.0 அடி இடைவெளிஇருக்கும் .
  • ஒற்றை சால் முறையில் வாய்க்கால் மூலம் தொடர் நீர்ப்பாசனம் செய்யப்படுவதால் (Flood Irrigation), சால்களில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்கும் 
  • அதனால் கரும்பு பயிரின் இலைகள் சாலின் இடைவெளியை முழுவதும் மூடும் வரை சாலுக்கு சால் உள்ள இடைவெளியில் பசும் தீவனப்பயிர்களை (ஊடு பயிராக முயல் மசாலா, சணப்பு ,தீவன காராமணி, நிலக்கடலை ,சோயா மொச்சை போன்ற பயிர்களை ) சாகுபடி செய்யலாம்
  • இரு இணை வரிசை நடவு மற்றும் குழி முறை முறைகளில் இடைவெளியில் ஈரப்பதம் இருக்காது. 
  • அதனால் அந்த இடைவெளியில் கரும்பு இலைகள் முழுவதுமாக மூடும் வரை மழை காலங்களில் தான்  தீவன பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
  • முயல் மசாலா எமட்டா மற்றும் மிக குறைந்த வாழ்நாள் கொண்ட சணப்பு பயிரை விதைத்து அதை 25 நாட்களில் சாகுபடி செய்துக்கொள்ளலாம். அல்லது 60 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய தீவன காராமணி பயிரை சாகுபடி செய்து பயன்பெறலாம் . 
  • இப்படி பயறுவகை பசும் தீவன பயிர்களை கரும்புடன் ஊடு பயிராக இணைப்பதால் பயறுவகை பயிர்கள் தங்களின் வேர் முடுச்சுகள் மூலம் மண்ணில் நிலை நிறுத்தும் தழைச்சத்தை கரும்பு பயிர் பயன்படுத்திக்கொள்ளும்.

கரும்பை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியுமா ?

  • முடியும் . கரும்பை கறவை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். ஆனால் கரும்பானது, சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க முழுமையாக பயன் பட்டுவிடுகின்றது . 
  • மழை இல்லாமல் ,மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டு அல்லது கரும்புக்கு பாசனம் செய்ய முடியாமல் அப்பயிர் காய்ந்துவிட்டாலோ அந்த சமயம் கரும்பை எரியூட்டாமல் தீவனமாக பயன்படுத்தலாம் . 
  • தீவன பற்றாக்குறை ஏற்படும் பொழுதும் கரும்பை தீவனமாக அளிக்க நேரிடும் . 
  • கரும்பில் நார் மற்றும்  சர்க்கரை ச்சத்துக்கள்  அதிகம்  உள்ளன. புரதச்சத்து மிக குறைவாக உள்ளது .அதே சமயம் இதன் செரிமானம் அதிகம் . 
  • மாடுகளில் இது 74-86% வரை செரிக்கக்கூடியது. கரும்பை நார் சத்து அதிகம் கொண்ட தழை தீவனமாக தான் மாடுகளுக்கு அளிக்க முடியும்
  • நாள் ஒன்றுக்கு 8-10 கிலோ வரை மட்டுமே பால் தரும் மாடுகளுக்கு தான் கரும்பை அளிக்கவேண்டும். 
  • அதிகம் பால் தரும் மாடுகளுக்கும் ,உச்சகட்ட பால் சுரப்பில் உள்ள மாடுகளுக்கும் இதை தீவனமாக அளிக்க கூடாது. 
  • கரும்பை தீவனமாக அளிக்கும்பொழுது தோகையுடன் சேர்த்து அளியுங்கள். இதனால் மாடுகள் தீவனம் உட்கொள்ளும் அளவு  15% வரை அதிகரிக்கும்.
  • கரும்புடன் புரதச்சத்து கொண்ட பிண்ணாக்கு, தவிடு ,பயறு வகை பசும் தீவனங்கள்  (வேலிமசால், முயல் மசால், சணப்பு ,தீவன காராமணி) ,  பயறுவகை மர இலைகள் (சூபாபுல், கிளைரிசிடியா முசுக்கொட்டை ,கல்யாணமுருங்கை , அகத்தி ,சித்தக்த்தி ) போன்றவற்றை  பயன் படுத்தலாம் 
  • குறிப்பாக” பைபாஸ் புரதம்” , நீண்ட கொழுப்பு அமிலங்கள்  கொண்ட” பைபாஸ் கொழுப்பு” தாது சத்து மற்றும் உயிர் சத்துக்கள்  அதிகம் கொண்ட தீவன வகைகளுடன் சேர்த்து அளிக்க வேண்டும் . 
  • கரும்புடன் கலப்பு தீவனம் மட்டும் அளித்தால் மூன்று பங்கு கரும்புடன் ஒரு பங்கு கலப்பு தீவனத்தை சேர்க்க வேண்டும் .இவை ஏதும் இல்லை என்றால் யூரியாவை பிண்ணாக்குடன் கலந்து சேர்த்து அளிக்கவேண்டும் 
  • குறைந்த வளர்ச்சி கொண்ட மாடுகள் ,முன்சினை பருவத்தில் உள்ள சினை மாடுகள் பின் கறவை காலத்தில் இருக்கும் மாடுளுக்கு பைபாஸ் புரதம் குறைவாகவே தேவைப்படுகின்றது .
  • ஆனால் முனகறவை பருவத்தில் உள்ள மாடுகள் ,பின் சினை பருவத்தில் உள்ள மாடுகளுக்கு பைபாஸ் புரதம் அதிகம் தேவைப்படுகின்றது. அதனால் இம்மாடுகளுக்கு  கரும்பை தீவனம் அளிக்க வேண்டுமெனில் மறக்காமல் “பைபாஸ் புரதம் “ மற்றும்  “பைபாஸ் கொழுப்பை”அளிக்கப்படவேண்டும்
  • கரும்பை தீவனமாக அளிக்க வேண்டுமென்றால் அதை பஞ்சு போல சிதைத்து பயன்படுத்துவது மிகுந்த பயன் அளிக்கும் .அல்லது சிறு சிறு  துண்டாக  நறுக்கியும் அளிக்கலாம். 
  • இதனால் மாடுகள் கரும்பை உட்கொள்வது அதிகரிக்கும் . இவ்விதம் நறுக்கப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட கரும்பை கலப்பு தீவனத்துடன் (மூன்று பங்கு கரும்புடன் ஒரு பங்கு கலப்பு தீவனம் என்ற அளவில்) கலந்து அளித்தால் மாடு உட்கொண்டமொத்த தீவனத்தின் செரிமானம் அதிகரிக்கும்
  • கரும்பை அடிப்படையாக கொண்ட தீவனத்தில் சேர்க்கப்பட்ட யூரியா சரிவர பயன்பட வேண்டுமெனில் மாவு சத்து அவசியம் 
  • இந்த மாவு சத்து கரும்பில் மிக மிக குறைவாக உள்ளதால் கரும்புடன் சேர்த்து அளிப்படும் கலப்பு தீவனத்தில் மாவு சத்து மிகுந்த மக்கா சோளம், சோளம் ,அரிசி பாலிஷ் ,தோல் உலர்ந்த மரவள்ளி கிழங்கு நீக்கப்பட்ட போன்றவற்றை சேர்க்க வேண்டும். 
  • அரிசி பாலிஷ் சேர்க்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு  இது சுமார் 1.5 கிலோ தேவைப்படும் . 
  • மக்கா சோள தானியத்தை தீவனத்தில் சேர்த்தால் அத்துடன் மிதமான அளவில் பைபாஸ் புரதம் இருக்கும் பிற தீவனங்களை சேர்ப்பது நல்ல பலனை தரும்
  • கரும்பை தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தியிலோ அதில் உள்ள சத்துக்களின் அளவிலோ மாற்றம் இருக்காது .
  • ஒரு .ஆய்வில் மாடுகளுக்கு கலப்பு தீவனத்துடன் மக்காச்சோள சைலேஜும் மற்றொரு குழு மாடுகளுக்கு சிறிது சிறிதாக வெட்டப்பட்ட கரும்புடன் கலப்பு தீவனம்  அளிக்கப்பட்டது . இரண்டு குழு மாடுகளும் தீவனத்தை ஏறத்தாழ சம அளவில் உட்கொண்டன. அந்த மாடுகளில் பால் உற்பத்தி மற்றும் பாலில் உள்ள கொழுப்பு , SNF, மொத்த திட சத்துக்கள், சர்க்கரை சத்து போன்றவற்றில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை
  • கரும்பை தீவனமாக அளிக்கும் பொழுது தாமதிக்காமல் எவ்வளவு விரைவில் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அளிக்கப்பட வேண்டும். 
  • கரும்பை ,குறிப்பாக தோல் நீக்கப்பட்ட கரும்பு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்டவுடன் ,அதன் மேல் ஈஸ்ட் நுண்ணுயிர் சேர்ந்து கரும்பில் இருக்கும் சர்க்கரை சத்து ஆல்கஹாலாக  மாற்றப்படுவதால் மாடுகளுக்கு தேவையான மாவு சத்து கிடைப்பது குறைந்துவிடும். 
  • அதனால் தீவனத்துடன் சேர்க்கப்பட்ட யூரியா சரியான முறையில்  பயன் படுத்தப்படாமல் மாடுகளில் உற்பத்தி குறையும். 

எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.



Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)