தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் துவரை சாகுபடி கழிவுகள்
துவரை சாகுபடியில் பசும் துவரை செடிகள் முற்றிய காய்களுடன் அறுவடைக்குப்பின் உலர வைக்கப்பட்டு பின்பு தரையில் அடித்து உலர்ந்த காய்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன. இதில் உலர்ந்த இலைகள் ,சிறு சிறு குச்சி கூளங்கள் கழிவாக கிடைக்கின்றன. துவரை இலைகள் புரத சத்து நிறைந்த தீவனம் ஆகும் துவரை இலைகளில் புரத சத்து 11-17%வரை உள்ளது. NDF நார் 46.6%, ADF நார்33.3%,கொழுப்பு சத்து2.70%,கரையும் மாவு சத்து 48.5% வரை உள்ளது உள்ளது . செம்மறி ஆடுகளுக்கும் உலர்ந்த துவரை இலைகள் நல்ல தீவனம் ஆகும் . செம்மறி ஆடுகளுடன் ஒப்பிட்டால் வெள்ளாடுகளுக்கு இந்த இலைகளின் செரிமான அளவு , செரிக்க கூடிய ஊட்ட சத்துக்களின் அளவு வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து போன்றவை அதிகம் கிடைக்கும் துவரை இலைகள் மிகுந்த செரிமானம் கொண்டது. பொதுவாக துவரை இலைகளை பிற வேளாண் கழிவுகளுடன் சேர்த்து தீவனம் அளித்தால் மொத்த தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும் . துவரை இலை தீவனத்தில் அதில் உள்ள இலைகள் மற்றும் சிறு சிறு கிளைகள் மற்றும் உடைந்த பருப்புகளின் அளவைப் பொறுத்து அதில் உள்ள ஊட்ட சத்துக்கள் மற்றும் அவற்...