பாலின் கொழுப்பு சத்து குறைவதற்கு காரணம் என்ன?? பாகம்-2
10 நாட்களில் பசும் பாலின் கொழுப்பு சத்தை அதிகரிக்கும் மாடுத்தீவன முறைகள் பசு பால் ஒரு குடும்பத்தின் முக்கியமான சத்துணவு. ஆனால் சில சமயம் பாலில் கொழுப்பு சத்து (Fat %) குறைவது போன்ற பிரச்சனை ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் அளவும், தரமும், பராமரிப்பு முறைகளுமே. சரியான தீவன மேலாண்மை இல்லாமல் இருந்தால் பால் தரம் குறையலாம். தீவன மேலாண்மையின் மூலம் உங்கள் மாடுகளின் பால் கொழுப்பு சத்தத்தை அதிகரிக்க, உடனடியாக யுவர்பார்ம் இலவச கால்நடை மருத்துவ குழுவை அழைக்கவும்: +91 6383717150 பாலில் கொழுப்பு சத்தை பாதிக்கும் காரணிகள் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் அளவு மற்றும் தரம் தீவனத்தில் உள்ள எரிச்சத்து, புரத சத்து மற்றும் நார் சத்தின் சமநிலை தீவனத்தை அளிக்கும் முறை நார் சத்தின் தரமும் செரிமான விகிதமும் மாடுகள் அசைபோடும் (rumination) எண்ணிக்கை பாலில் சர்க்கரை சத்தை தவிர்த்து மற்ற சத்துக்கள் அனைத்தும் தீவன பராமரிப்பை பொறுத்தே மாறுபடும். தீவன பராமரிப்பு மூலம் கொழுப்பு சத்தை சரிசெய்வது மாடுகளின் பாலில் கொழுப்பு சத்து குறைபாட்டை சரிசெய்ய 7–21 நாட்கள் வரை ஆகும். ...