கன்னுகுட்டி அதிகமா பால் குடிச்சா, மாடு பருவத்துக்கு வராதா?
மாடுகள் சினை சுழற்சிக்கு வந்திருப்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பது: ◆இந்திய வேளாண்மை ஆராய்ச்சி முகமையின் ஒரு அறிக்கையில் சினை சுழற்சிக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட மொத்த மாடுகளை ஆய்வு செய்ததில் 90% மாடுகள் சினை சுழற்சிக்கு சரியாக வருவதாகவும், ஆனால் விவசாயிகள் இதை சரியாக கவனிப்பதில்லை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ◆10% மாடுகளில் மட்டுமே பல காரணங்களால் மாடுகளில் சினை சுழற்சி ஏற்படவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ◆பெரும்பாலான ( 66% ) மாடுகள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை தான் சினை அறிகுறிகளை வெளிக்காட்டும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாடுகள் சினைக்கு வந்திருப்பதை தவற விட்டு விடுகின்றனர் ◆பல மாடுகளில் சினை அறிகுறிகள் 12 மணி நேரத்திற்கு பதில் மிக குறைத்த நேரம் மட்டுமே இருக்கும். அதனால் விவசாயிகள் சினை அறிகுறிகளை கவனிக்க தவறி விடுகின்றனர். ◆கடும் கோடை மற்றும் வெப்ப அழற்சி காலங்களில் மாடுகளில் சினை அறிகுறிகள் வெளிப்படும் நேரம் மிக குறைவாக இருக்கும். அது மட்டுமின்றி சினை அறிகுறிகள் மிக தெளிவாக இருக்காது. ◆உயிர் சத்து D குறைபாடு இருந்தால் மாடுகளில் சினை சுழற்...