தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?
◆ தேங்காய் பிண்ணாக்கு புரதச்சத்து கொண்ட கால்நடை தீவனம் ஆகும். இதில் புரதம் 25-30%, நார் 10%, எண்ணெய் 2.5 - 6.5 %, மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 70 - 75% உள்ளன. ◆ தேங்காய் பிண்ணாக்கில் உள்ள புரதத்தில் சுமார் 50% பைபாஸ் புரதம் உள்ளது ◆ இந்த பைபாஸ் புரதம் சுமார் 90% வரை சிறுகுடலில் செரிக்க கூடியதாக உள்ளது. ◆ உதாரணமாக சுமார் 22 % புரதச்சத்து கொண்ட ஒருகிலோ தேங்காய் பிண்ணாக்கில் 110 கிராம் வரை பைபாஸ் புரதம் இருக்கும். இந்த பைபாஸ் புரதம் சுமார் 100 கிராம் வரை செரிக்கப்படுகின்றது. ◆ இந்த பிண்ணாக்கில் உள்ள 100 கிராம் புரதச்சத்தில் பால் உற்பத்திக்கு அத்தியாவசியமான லைசின் 2.6 கிராம் அளவும் மெத்தியோனின் அமினோ அமிலம் 1.3 கிராமும் உள்ளன. ◆ அதாவது கிலோ தேங்காய் பிண்ணாக்கில் 7.5 கிராம் லைசின் மற்றும் 3.8 கிராம் மெத்தியோனின் உள்ளது. ◆ இந்த பிண்ணாக்கு மாடுகளில் சுமார் 75 - 85% வரை செரிக்கும். தேங்காய் பிண்ணாக்கில் உள்ள புரதத்தின் தன்மை பருத்தி கொட்டை பிண்ணாக்கை விட சிறப்பாக உள்ளது. ◆ இந்த பிண்ணாக்கில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 4830 கிலோ ...