எள்ளு பிண்ணாக்கை சினை மாடுகளுக்கு கொடுக்கலாமா?

எள்ளு பிண்ணாக்கை சினை மாடுகளுக்கு கொடுக்கலாமா? ◆ எள்ளு புண்ணாக்கை மாடுகளுக்கு, குறிப்பாக மிக இளம் சினை மாடுகளுக்கு அளித்தால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்ற கருத்தின் காரணமாக விவசாயிகள் இந்த பிண்ணாக்கை தீவனமாக பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். ◆ மிக இளம் சினை மாடுகளுக்கு எள்ளு அல்லது எள்ளு பிண்ணாக்கை அளிக்க வேண்டாம். ◆ எள்ளு அல்லது எள்ளு பிண்ணாக்கை அறிவுறுத்தப்பட்ட அளவுக்கு மேல் அளித்தால்…. ◆ எள்ளில் செசாமின் ( Sesamin ) என்ற இரசாயனம் உள்ளது. எள்ளு பிண்ணாக்கை மாடுகள் உட்கொண்டால் ◆ அது மாடுகளின் சிறுகுடலில் உள்ள நுண்ணுயிரிகளால் என்டேரோ லாக்டோன் ( Entero lactone ) என்ற இரசாயனமாக மாற்றப்படுகின்றது. ◆ எள்ளு அல்லது எள்ளு பிண்ணாக்கை மிக இளம் சினை மாடுகளுக்கு ( 1-3 மாத சினை ) அளித்தால் சினைக் கொண்ட கர்ப்பப்பையை அது வெகு வலிமையுடன் சுருங்க வைத்து பிழியும். அதனால் சினை முட்டை அழிந்து மாடுகளில் சினை சிதைவு ஏற்படும். மாடுகள் 4-5 மாததிற்கு மேல் சினையில் இருந்தால் இந்த பாதிப்பு இருக்காது. ◆ ஒரு ஆய்வில் எருமைகளுக்கு கன்று ஈன்ற 30 நிமிடங்களில் 250 கிராம் எள்ளும் 250 கிராம் வெல்லமும் கொடுக்கப்பட்ட...