கறவை மாடுகளின் உற்பத்திக்கேற்ப தரமான பிண்ணாக்குகளை தேர்ந்தெடுத்து வாங்கி தீவன செலவை குறையுங்கள்
கடலைப் பிண்ணாக்கு: ◆ கடலை கொட்டையில் இருந்து எண்ணெய் நீக்கப்பட்ட பின் கிடைக்கும் கழிவே கடலை பிண்ணாக்கு. ◆ பூஞ்சையால் பாதிக்கப்படாத கடலை பிண்ணாக்கு கால்நடைகளுக்கு மிக சிறந்த புரதச்சத்து தீவனம் ◆ இதில் உலர் நிலை அடிப்படையில் புரதச்சத்து சுமார் 50-55% உள்ளது. ◆ இதில் மெத்தியோனின் மற்றும் ட்ரிப்டோபேன் என்ற அமினோ அமிலங்கள் மிக மிக குறைவாகவும் லைசின் அமினோ அமிலம் ஓரளவு குறைவாகவும் உள்ளன. ◆ இதில் செரிக்க கூடிய புரதச்சத்து 46%, மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 80% உள்ளன. ◆ பிண்ணாக்கில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 5180 கிலோ கலோரிகள் உள்ளன. ◆ இந்த எரிச்சத்து 81% வரை செரிக்க கூடியது. ◆ இதில் உள்ள மொத்த எரிச்சத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து 65% ,பால் உற்பத்திக்கு பயன்படும் எரிச்சத்து 42%,வளர்ச்சிக்கு பயன்படும் எரிச்சத்து 41% உள்ளன. ◆ இந்த கடலை பிண்ணாக்கு மாடுகளில் 63% வரை செரிக்கும். இதில் உள்ள மொத்த பாஸ்பரஸ் சத்தில் 60% வரை பைட்டேட் பாஸ்பரஸ் கலவை. ◆ செக்கில் ஆட்டப்பட்ட பிண்ணாக்கில் 10-12%, இரசாயனம் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டால் எண்ணையின் அளவு 0.7- 0.8% எண்ணெய் இருக்கும்...