ஜின்னிங் பருத்தி கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாக அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்
ஜின்னிங் பருத்தி கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாக அளித்து தீவனச் செலவை குறைக்கலாம் ● பருத்தி செடியிலிருந்து பஞ்சு அறுவடை செய்த பின் பஞ்சு இழைகள் மட்டும் பிரித்தெடுக்கப்படுகிறன. இந்த செயல் முறையில் மிக சிறு பஞ்சு இழைகள், பஞ்சு தும்பு தூசுகள், செடியின் இலைகள், சிறு சிறு குச்சிகள் மற்றும் உருண்டு திரண்டு இழைகளாக பிரிக்க முடியாத பஞ்சு போன்றவை ஜின்னிங் பருத்தி கழிவுகளாக கிடைக்கின்றன. ● இந்த கழிவுகள் ஜின்னிங் தொழில் சாலைகளின் வெளியே திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. ● இந்த கழிவுகளை பல விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கின்றனர் ● அப்படி தீவனமாக அளிக்கும் பொழுது கடைபிடிக்கவேண்டிய தீவன பராமரிப்பு முறைகளை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம் ● ஜின் பருத்தி கழிவில் புரதம் 2-14%, நார் 38%, NDF நார்65%, செல்லுலோஸ் நார் 23%, 7 உள்ளன ● இந்த கழிவுகளில் இருக்கும் ஊட்ட சத்துக்களின் அளவு ஏறத்தாழ தரம் தாழ்ந்த உலர்ந்த புல் அல்லது வேளாண் கழிவுகளை ஒத்திருக்கின்றன. ● இந்த கழிவுகள் திறந்த வெளியில் கொட்டிவைக்கப்படுவதால் நாளாக ஆக இதன் ஊட்ட சத்துக்கள் குறைய ஆரம்பிக்கும் ● தமிழ் நாட்டில் கரூர், திருப்பூர் மாவட்...