தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் கால்நடைகளுக்கு பழக்கழிவுகள் (பகுதி – 4). சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழ தோல் கழிவுகள்
சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழத்தின் எடையில் சுமார் 50% அளவுக்கு அவற்றின் தோல் மற்றும் சாறு எடுக்கப்பட்ட சக்கை (Pulp) கழிவுகளாக கிடைக்கின்றன. தற்சமயம் அனைத்து ஊரிலும் பழச்சாறு கடைகள் உள்ளன ஒவ்வொரு கடையிலும் எப்படியும் 15-20 கிலோ அளவுக்கு சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழத்தின் கழிவு தினமும் கிடைக்கின்றது இந்த கழிவுகள் சாலை ஓரங்களில் கொட்டப்படுவதால் சுற்று சூழல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இப்படி கிடைக்கும் கழிவுகளை தண்ணீரில் நன்கு கழுவி மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தமுடியும். ஈரமான தோலை மாடுகள் விரும்பி உட்கொள்ளும். இந்த கழிவில் 5-10% புரத சத்தும் ,54%தண்ணீரில் கரையும் சர்க்கரை சத்தும் ,சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் முறையே 1-2, 1.0% உள்ளன. இந்த கழிவை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மேல் 1% சமையல் உப்பு கரைசலை தெளித்து மாடுகளுக்கு அளியுங்கள் இதில் சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் மாடுகளின் கலப்பு தீவனத்தில் தானியங்களுக்கு மாற்றாக இதை ஓரளவு பயன்படுத்தலாம். சர்க்கரை சத்து இதில் அதிகம் இருந்தாலும் இதை உட்கொ...