மரவள்ளிக்கிழங்கு சாகுபடியுடன் கறவை மாடுகளை இணையுங்கள் - பகுதி 3
மரவள்ளி இலை சைலேஜை மாடுகளுக்கு அளித்தால் ஏற்படும் நன்மைகள் ஒரு ஆய்வில் பசும் புல்லுடன் தினமும் 3 –4 கிலோ மரவள்ளி இலை சைலேஜை கலப்பு தீவனத்துடன் அளித்த பொழுது மாடுகள் 8 கிலோ வரை பால் அளித்தன மற்றொரு ஆய்வில் மாடுகளுக்கு புல்லையும் மரவள்ளி சைலேஜையும் தனித்தனியே அளித்தபொழுது மாடுகள் புல்லை விட மரவள்ளி சைலேஜை விரும்பி அதிகம் உட்கொண்டன மாடுகளுக்கு இந்த சைலேஜை கூடுதலாக அளித்த பொழுது தினசரி பால் உற்பத்தி 12.4 கிலோவிலிருந்து 13.2 கிலோவாக அதிகரித்ததாகவும் தெரியவந்தது. இது மற்றுமின்றி பாலில் கொழுப்பு சத்தும் SNF ம் சற்று அதிகரித்தது மாடுகள் மற்றும் இன்றி ஆடுகளுக்கும் மரவள்ளி சைலேஜ் நல்ல தீவனம் ஆகும் ஆடு மாடுகளுக்கு அவற்றின் உடல் எடையில் சுமார் 3% வரை மரவள்ளி சைலேஜ் அளிக்கலாம் கால்நடைகள் இதை உண்ண பழகுவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஒரு வார காலம் வரை இதை சிறிது சிறிதாக கொடுத்து பழக்குவது நல்லது. ஒரு ஆய்வில் கறவை மாடுகளுக்கு தினசரி மரவள்ளி இலை சைலேஜ் கூடுதலாக அளித்த சமயம் பால் உற்பத்தி பாலில் கொழுப்பு SNF சத்துக்கள் அதிகர...