மழை காலங்களில் தீவன மேலாண்மையில் கவனம் தேவை
1.தொடர் மழை காலங்களில் புற்களில் ஏற்படும் மாறுபாடுகள் புல்லில் உள்ள சர்க்கரை சத்து கொழுப்பு சத்து மற்றும் தாது சத்துக்கள் மழை நீரில் கரைந்து வெளியேறும் மிதமான தொடர் மழையால் அதிக அளவிலும் கன மழையால் சற்றே குறைந்த அளவிலும் நீரில் கரையும் ஊட்டசத்துக்கள் புற்களில் இருந்து வெளியேறும் அதனால் புல்லில் உள்ள தண்ணீர் நீங்கலாக பிற சத்துக்கள் அடங்கிய உலர் பொருளின் அளவு குறையும் 1.0 -2.50 அங்குலத்துக்கு மேல் மழை பெய்தால் பசும் தீவனங்களின் இலைகள் உதிர ஆரம்பிக்கும் .இலைகள் உதிராத நிலையில் தான் பசும் தீவனங்களின் புரத சத்து அதிகரிக்கும் பொதுவாக மழை காலங்களில் புற்கள் வேகமாக வளர்ந்து மிக விரைவில் முற்றிவிடும் புல் அறுவடை சமயங்களில் தொடர் மழை பெய்து அறுவடை தாமதமானால் புல் நன்கு முற்றிவிடுவதால் அதில் நார் சத்து முற்றி செரிமானம் பாதிக்கப்படும் மழையால் நீரில் கரையும் மாவு சத்துக்கள் வெளியேறுவதால் நார் சத்து அதிகரித்து எரிச்சத்தும் குறையும். புற்களின் செரிமானம் சுமார் 6.0 -40.0 சதம் வரை குறையும் புற்களில் உள்ள மொத்த செரிமான உட்டச்சத்துக்கள் அளவு குறையும் புல் முற்ற முற்ற அதில் உள்ள சுண்ணாம...