மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மூன்று கட்டங்களிலும் செய்ய வேண்டிய வழிமுறைகள்-பாகம் 1
மழை காலங்களில் குடற்புழுக்கள் அதிகரிக்கும் காரணம் மழை காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழுக்கள் தாக்கம் அதிகமாகும். இதனால் அவற்றில் அழற்சி (inflammation) மற்றும் உடல் சோர்வு ஏற்படும். குடற்புழுக்களால் பாதிக்கப்பட்ட ஆடுகள், மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது அவற்றின் சாணத்துடன் புழுக்களின் முட்டைகளும் வெளியேறும். இந்த முட்டைகள் மழை பெய்யும்போது ஏற்படும் ஈரப்பதம் மற்றும் வெயில் குறைவான சூழலில் லார்வா (larva) என்ற சிறிய புழுக்களாக மாறுகின்றன. இந்த லார்வாக்கள் புல் தண்டின் மீது 2 முதல் 4 அங்குல உயரம் வரை ஒட்டிக்கொண்டு காணப்படும். மழை காலங்களில் குடற்புழு நீக்கம் பற்றிய தகவல்களுக்கு +91 6383717150 இல் யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ குழுவை அழைக்கவும். லார்வாக்கள் எப்படி கால்நடைகளை தாக்குகின்றன? கால்நடைகள் அந்த புல்லை மேயும் போது, லார்வாக்கள் புற்களுடன் அவற்றின் வயிற்றுக்குள் சென்று இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இது ஜீரண பிரச்சனை, உடல் பலவீனம், மற்றும் இரத்தசோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக வளர்ந்த மாடுகளை விட கன்றுகள், கிடாரிகள், குட்டிகள் போன்ற இளம் கால்நடைகளே அதிகம் பாதிக்கப...