ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் -பாகம் 2

கன்றின் பிறப்பு எடையின் அவசியம்: பிறப்பெடை என்பது அந்த கன்றின் ஆரோக்கியத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் தீர்மானிக்கும் முக்கியமான குறியீடாகும். சரியான பிறப்பெடை இருந்தால்: நோய் எதிர்ப்பு சக்தி உயரும் வளர்ச்சி தரமானதாக இருக்கும் இனப்பெருக்கமும் அதிகரிக்கும் கன்றின் பிறப்பெடை சீர்திருத்த அட்டவணை: இனம் பிறப்பெடை (கிலோ) ஜெர்சி கலப்பினம் 25 பிரீசியன் கலப்பினம் 40 சிந்தி 23 முர்ரா எருமை 30 சீயம் பாலைத் தவிர்க்க முடியாதது ஏன்? சீயம் பால் என்பது கன்றுக்கு தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் 3–4 நாட்களுக்கான பால். இது: நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் ஆன்டிபாடிகள் அதிகம் புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது சத்துக்கள் கொண்டது சீயம் பாலை தரமாக அடையாளம் காணுவது: மஞ்சள் நிறத்தில், கொழுப்பான/தடிப்பான தோற்றம் நீர்த்தன்மையோ, இரத்தக் கலப்போ இல்லாமல் இருக்க வேண்டும் எப்பொழுது அளிக்க வேண்டும்? பிறந்த 15–30 நிமிடங்களுக்குள் அளிக்க வேண்டும் தாமதமாகிவிட்டால் சீயம் பாலின் சத்துக்கள் கன்றின் குடலில் சரியாக உறிஞ்சப்படாது பழைய ஈற்றுகளில் சீயம் பாலின் தரம் குறைவாக இருக்கும். 3 முதல் 5வது ஈற்றில் சுரக்கும்...