Posts

Showing posts from February, 2025

மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன?

Image
மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன? சோத்து கற்றாழையில் இருக்கும்  சத்துக்கள்  ( % ) சோற்று கற்றாழையை கிடாரிகளின் தீவனத்தில் சேர்க்கலாமா ? கால்நடைகளுக்கு அளிக்கும் தீவனத்தில் இருக்கும் ஊட்ட சத்துக்கள்  நல்ல முறையில் பயன்படும்  சிறுகுடலின் ஆரோக்கியம் மேம்படும் . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கன்றுகள் மற்றும் கிடாரிகளின் வளர்ச்சி அதிகரிக்கும் . கன்றுகளின் தீவனத்தில் சோத்து கத்தாழை சேர்ப்பதால் ஒருகிலோ வளர்ச்சி பெற தேவையான தீவன அளவு குறைவதுடன் தீவன செலவும் குறையும்.  தீவனத்தை வளர்ச்சியாக மாற்றும் திறன் கூடும் .  கால்நடைகளின் குடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது  மாடுகளின் மடி நோயை  குணமாக்கும் சோத்துக்கற்றாழை! சோத்துக்கற்றாழை  அல்லது மடல் எடுத்து தோலுடன் முழுதாக சிறு சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும். மஞ்சள் தூள் 50 கிராம் மற்றும் 20 கிராம் சுண்ணாம்பு எடுத்து சோத்து  கற்றாழையுடன் சேர்த்து  சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவேண்டும்.  இதை மாட்டின் மடியின் மேல் நாள் ஒன்றுக்கு முறை நன்கு ...

அஜீரண கோளாறு ஏற்பட்டால் மாடுகளில் பால் உற்பத்தி குறையுமா !!!

Image
  மாடுகளுக்கு ஏற்படும் அஜீரணம் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மை தவறுகளால் மாடுகளின் முதல் வயிற்றில் தீவன செரிமானத்திற்கு உகந்த சூழ்நிலை பாதிக்கப்படுவதால் அஜீரணம் ஏற்படுகின்றது . அஜீரணம் ஏற்பட்டால் மாடுகளுக்கு கிடைக்கவேண்டிய ஊட்ட சத்துக்கள்  “ B “   உயிர் சத்துக்கள் மற்றும் உயிர் சத்து  “ K “ உற்பத்தி பாதிக்கப்பட்டு மாடுகளில் உற்பத்தி   குறைந்துவிடும். செரிமானத்திற்கு உகந்த சூழ்நிலையை பாதிக்கும் காரணிகள் வழக்கமாக அளிக்கும் தீவனத்தை திடீரென்று மாற்றுவது தேவைக்கு அதிகமாக தீவனத்தை வலுக்கட்டாயமாக   மாடுகளுக்கு ஊட்டுவது மாவுச்சத்து மற்றும் புரத சத்து குறைபாடான தீவனங்களை தேவைக்கு அதிகமாக அளிப்பது மாடுகளின் முதல் வயிற்றில் மிக விரைவில் செரிக்க கூடிய தீவனங்களான தானியங்கள் , மாவு வகைகள், வேகவைத்த தானியங்கள், கூழ் போன்றவற்றை அதிக அளவில் அளிப்பது நார் சத்து குறைந்த தீவனம் அளிப்பது மொத்த தீவனத்தையும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட நுணுக்க அரைத்து தீவனம் இடுவது பரிந்துரைக்கப்பட்ட அளவை வி...