மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினையை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை
◆ தவறாமல் உங்கள் மாவட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட தாது உப்பு கலவையை ( Smart Mineral Mixture ) தினமும் 30-50 கிராம் அளிக்க வேண்டும். ◆ மாடுகளுக்கு அவற்றின் உடல் எடையில் 10% அளவுக்கு பசும்தீவனம் அளிக்கப்படல் வேண்டும். அதில் 70% பசும்புற்களும், 30% பயறுவகை பசும் தீவனமும் அளிக்கப்படல் வேண்டும். ◆ 300 கிலோ மாடுகளுக்கு 20-22 கிலோ பசும்புல்லும், 8-10 கிலோ பயறுவகை பசும்தீவனமும் தேவை. ◆ பசும்புல்லை வாடவைத்து அளிக்கக்கூடாது. காலை, மதியம் மற்றும் மாலையில் அவ்வப்பொழுது அறுவடை செய்து அளிக்க வேண்டும். ◆ தினமும் காலையில் எழுந்தவுடன் மாடுகளின் தீவன தொட்டியை கவனியுங்கள். அதற்கு முதல் நாள் மாலையில் நீங்கள் அளித்த புல்லில் சுமார் 10% மேல் மாடுகள் உட்கொள்ளாமல் மீதம் வைத்திருக்க வேண்டும். ◆ புல் முழுவதுமாக உட்கொண்டிருந்தால் மாட்டிற்கு நீங்கள் அளித்த புல் போதவில்லை என்று பொருள். புல் அளவை சற்று அதிகரியுங்கள். ◆ மாடுகள் கன்று ஈன மூன்று வாரங்கள் முன்பிருந்தும் மூன்று வாரங்கள் பின்னும் கீழ்க்கண்ட கலப்பு தீவனம் அளிக்கப்படல் வேண்டும்: ◆மாடுகளின் பால் உற்பத்திக்கு ஏற்ப ஊட்டச்சத்துக்கள் கொண்...