மாட்டுப்பாலின் கொழுப்பு சத்தை மேம்படுத்த கலப்பு தீவனத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் - பாகம் 3

கால்நடைகளுக்கு வழங்கப்படும் கலப்பு தீவனத்தின் மாவு சத்து (Energy) மற்றும் தானியங்களின் அளவு பாலின் கொழுப்பு சத்துக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். மாடுகள் வளர்ச்சியிலும் பால் உற்பத்தியிலும் கலப்பு தீவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான அளவு அல்லது தவறான வகை தீவனம் வழங்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறைவு, செரிமான சிக்கல்கள் மற்றும் மாடுகளின் உடல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 1. மாவு சத்து வகைகள் மாடுகள் உணவில் எடுத்துக்கொள்ளும் மாவு சத்து இரண்டு வகையாகும்: கரைய கூடிய மாவு சத்து – உடனே செரிமானமாகும் கரையாத நார்ச்சத்தில் உள்ள மாவு சத்து – மெதுவாக செரிமானமாகும் முக்கியம்: கலப்பு தீவனத்தில் கரைய கூடிய மாவு சத்து 32-38% மேலாக இருந்தால், பாலில் கொழுப்பு சத்து 1% குறைய வாய்ப்பு உள்ளது. 2. கலப்பு தீவனத்தில் தானியங்களின் பங்கு மாடுகளுக்குக் கொடுக்கப்படும் கலப்பு தீவனத்தில் தானியங்கள் பெரும்பாலும் மாவு சத்துக்குப் பங்கு அளிக்கின்றன. அதிக தானியங்கள் அல்லது தேவைக்கேற்ற அளவுக்கு மேலாக தீவனம் கொடுக்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறையும். 3. கலப்பு தீவனம் தயாரி...