`ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-4
இன்றைய கன்று! நாளைய பசு! கன்றுகள் பால் உற்பத்தி மாடுகளின் எதிர்காலம். ஆரோக்கியமான கன்றுகளை வளர்ப்பது , பால் உற்பத்தி மற்றும் பண்ணை லாபகரமான நிலையை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், கன்றுகளுக்கு சரியான வயதில், சரியான அளவு தீவனம் மற்றும் பராமரிப்பு கொடுப்பது அவசியம். தவறான தீவன முறைகள் அல்லது போதிய ஊட்டச்சத்து இல்லாமை, கன்றுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதை தவிர்க்க, நிபுணர்கள் பரிந்துரைக்கும் தீவன அட்டவணை, பால் பதிலி, ஆரம்ப மற்றும் வளரும் கன்றுகளுக்கான கலப்பு தீவனம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். உங்கள் பண்ணையில் கன்றுகள் குறித்த எந்தவொரு சந்தேகமோ, உடனடி மருத்துவ ஆலோசனையோ தேவைப்பட்டாலும், யுவர்பார்ம் – 24/7 இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு உடனே +91 63837 17150 என்ற எண்ணுக்கு அழைக்கவும். 1. இளம்கன்றுகளுக்கான தீவன அட்டவணை கன்றுகளின் வயதுக்கு ஏற்ப தாய் பால், கலப்பு தீவனம் மற்றும் பசும் புல் ஆகியவை சரியான விகிதத்தில் கொடுக்கப்பட வேண்டும். வயது தாய் பால் (கிராம்) கலப்பு தீவனம் (கிராம்) பசும் புல் + பயறு வகை பசும் தீவனம் (கிலோ) 1–3 நாட்கள் சீயம் பால் – – 2 வார...