பால் உற்பத்தியை அதிகரிக்க – சேலஞ்சு தீவன பராமரிப்பு ஒரு அற்புதமான தீர்வு

கறவை மாடுகளுக்கு கன்று ஈன இரண்டு மாதங்கள் முதல் கன்று ஈன்ற 3 மாதங்கள் வரை விட அதிக புரதம் மற்றும் அதிக எரிச்சத்து கொண்ட கலப்பு தீவனம் கூடுதலாக அளித்து கன்று ஈன்றபின் மாடுகளின் முழு பால் தரும் திறனை வெளிகொண்டுவந்து பால் உற்பத்தியை அதிகப்படுத்த மாடுகளை தயார் செய்யும் தொழிற்நுட்பமே “ சேலஞ்சு தீவன பராமரிப்பு ” இந்த தொழில்நுட்பம் பால் தரும் மாடுகள் கன்று ஈன்றவுடன் அளிக்கப்போகும் கூடுதல் பால் உற்பத்திக்கு ஏற்ப கலப்பு தீவனத்தை உட்கொண்டு செரித்து வயிற்றின் ஆரோக்கியமான சூழ்நிலை மாறாமல் வைக்கும் திறனை அதிகரிக்கும் . இந்த கால கட்டத்தில் சினை மாடுகள் தங்கள் உடல் இயக்கத்தில் பல மாற்றங்களை கடந்து அழற்சியால் பாதிக்கப்படுகின்றன . இந்த அழற்சி எந்த வகையிலும் மாடுகளை பாதிக்காமல் , பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த தொழிற்நுட்பம் உதவுகின்றது . இந்த தொழிற்நுட்பத்தின் நோக்கம் என்னவென்றால் கன்று ஈன்றபின் அந்த மாட்டின் மொத்த பால் உற்பத்தி திறனையும்...