கறவை மாடுகளில் பால் உற்பத்தி - உச்சகட்ட பால்சுரக்கும் நாட்கள்

கறவை மாடுகளில் பால் உற்பத்தி மாடுகளின் பால்சுரப்பு காலம் ஒரு ஈற்றில் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டால் ஈன்ற 3 மாதங்கள் கொண்ட முதல் கட்டத்தில் பால் சுரப்பு மிக அதிகமாக இருக்கும் . அடுத்த 3 மாதங்களில் (இரண்டாம் கட்டம்) பால் சுரப்பு குறைய துவங்கும் . அடுத்த 4 மாதங்களில் (மூன்றாம் கட்டம்) பால் சுரப்பு மிக குறைவாக இருக்கும். ஈன்ற11,12 மாதத்தில் (நான்காம் கட்டம் ) சுரப்பு முழுமையாக நின்றுவிடும். ஆக மாடுகளில் பால் வற்றும் காலம் 60 நாட்கள் வரையும் பால் சுரப்பு 305 நாட்கள் வரையும் இருக்கவேண்டும் . ஒரு மாட்டின் மொத்த பால் உற்பத்தி ஒரு ஈற்றில் 305 நாட்களுக்கு தான் கணக்கிடப்படுகிறது . பல காரணங்களுக்காக சில மாடுகள் 305க்கும் மிக குறைவான நாட்கள் மட்டுமே பால் கொடுக்கும் இப்படி இருந்தால், அந்த மாட்டில் அந்த ஈற்றின் மொத்த பால் உற்பத்தி குறைந்து அந்த பண்ணை நட்டத்தில் தான் இயங்கும் . சராசரியாக தினசரி 10 லிட்டர் வரை பால்கொடுக்கும் மாடுகள் ஓரளவு சரியான தீவன பராமரிப்பு செய்யப்பட்ட நிலையில் அந்த மாட்டின் பால் உற்பத்தி 300 நாட்களில் சுமார் 2900 கிலோ இருக்கும் ....